Thursday, April 30, 2015



vijayakanth
பெரியார் பற்றி விஜயகாந்திடம் கேட்டால் இப்படிதான் பதில் கிடைக்குமோ?

பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் விஜய்காந்த கலந்து கொண்ட போது அவர்கள் உண்மைகள் வலைதளம் சார்பாக மதுரைத்தமிழனும் கலந்து கொண்டு விஜயகாந்திடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

அண்ணே பெரியார் பற்றி ஏதாவது சொல்லுங்கண்ணே?
தம்பி பெரியாறில்  ஒடும் தண்ணியை தேக்கி வைத்து பயனடைய முல்லை பெரியார் அணை கட்டி உள்ளார்கள் அதை வைச்சு இந்த கேரளாக்காரன் பிரச்சனை பண்ணுவதாக செய்திகள் வருகின்றன. நான் முதலமைச்சர் ஆனால் அதை தீர்த்து விடுவேன்


அண்ணே நான் அந்த பெரியாரை பற்றி கேட்கவில்லை நான் கேட்பது பெரியார் பெரியார்...... பற்றி அண்ணே?
தம்பி நீங்க கேட்டதை நான் தப்ப புரிஞ்சுகிட்டேன் இப்ப புரிஞ்சு போச்சி நீங்க ஆங்கிலத்தில் வருகிற லெட்டர் R பற்றி கேட்கிறீங்க. அதை பற்றி சொல்ல என்ன இருக்குப்பா?
அண்ணே நான் அந்த பெரியR பற்றி கேட்கவில்லை அண்ணே தலைவர் பெரியார் பற்றி ஏதும் சொல்லுங்கண்ணே?

ஓ நீங்க அந்த பெரியாரைப் பற்றி கேட்குறீங்களா சரி சரி சொல்லுறேனப்பா... அந்த பெரியார் எப்ப பார்த்தாலும் கடவுளுக்கு எதிராக பேசிக் கொண்டே பார்ப்பான் பார்ப்பான் என்று சொல்லி அவங்களுக்கு ஆதரவு தந்திருக்கிறாரப்பா

அண்ணே அவர் ஒன்றும் பார்பான்களுக்கு ஆதரவு தரவில்லை அண்ணே அவர் அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக பேசி வந்தார் அண்ணே

ஏய் தமிழா நான் பெரியார் பற்றி ஏதும் படிக்கவில்லை.. நீ என்ன.... என்னிடம் பெரியார் பற்றி என்னிடம் தூண்டி தூண்டி கேட்கிற... நீ என்ன ஜெயலலிதா டீவிக்காரன் அனுப்பி வைச்ச ஆளா... ஒடிப் போயிரு இல்லைன்னா நான் உன்னை மிதிச்சே கொன்று போடுவேன்,,,,,,


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : விஜயகாந்தின் பேட்டியை பார்த்தன் விளைவாக மனதில் தோன்றியது இது
30 Apr 2015

4 comments:

  1. அவர் பேசியதில் எனக்கு பிடித்தது 'தூக்கி அடிச்சிருவேன் "..ஆஹா ,இவர் அல்லவா உண்மையான மக்கள் தலைவர் :)

    ReplyDelete
  2. அவர் சாதாரண மனிதன் பேசுவதுபோல் பேசுகிறார். தலைவர் என்ற நிலைமைக்கு அவர் குணம் இன்னும் உயரவில்லை. அதனால் மக்கள் அவருக்கு ஓட்டுப் போடாமல் இருக்கப் போவதில்லை.

    ReplyDelete
  3. சிரிச்சிட்டேன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.