Saturday, September 24, 2011

என்ன குற்றம் கண்டீர்கள் இந்த மதுரைக்காரர்களிடம்?

  

இண்டர்வியூ பண்ணுபவர் : உங்கள் பிறந்த நாள் என்ன?
மதுரைப் பொண்ணு : ஆகஸ்ட் 14.
இண்டர்வியூ பண்ணுபவர் : வருஷம்?
மதுரைப் பொண்ணு : ஒவ்வொரு வருஷமும்.
(எங்களைப் பார்த்தா இளிச்சவாயங்க மாதிரியா தெரியுது)





ஒரு கம்பியூட்டர் கம்பெனியில் இண்டர்வியூ பண்ணுபவர் : உங்களுக்கு MS OFFICE தெரியுமா என்று கேட்டார்.
மதுரைப் பொண்ணு : நீங்கள் அதற்கான விலாசத்தை கொடுத்தால் நான் கண்டுபிடித்து விடுவேன் என்றாள்.
(நல்ல வேளை அழகிரி அண்ணன் ஆபிஸ் எங்க இருக்குன்னு கேட்கமா விட்டான்)



இண்டர்வியூ பண்ணுபவர் : காந்திஜெயந்தி பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் என்றார்.

மதுரைக்காரர் : காந்தி இந்தியாவின் தந்தை. அவர் தேசவிடுதலைக்காக பாடுபட்டவர். ஜெயந்தி தமிழ் நாட்டு காங்கிரஸ் பெண் லீடர். காந்திக்கும், ஜெயந்திக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை ஆனால் இவர்கள் இருவருக்காகவும் காந்திஜெயந்தி என்று அரசு விடுமுறை விடுகிறார்கள்.(நயன்பிரபுதேவா பற்றி கேட்டா மணிகணக்கா பேசுவோம்ல அதைவிட்டுட்டு காந்தி ஜெயந்தி பற்றி கேட்குறான்)



மதுரைக்காரன் ஏர்டெலுக்கு போன் செய்து என் மொபைல் பில் எவ்வளவு என்று கேட்டார்.
அதற்கு கால் செண்டர் பொண்ணு சொன்னாள் நீங்கள் 123 என்ற நம்பருக்கு டயல் செய்தால் உங்கள் கரண்ட் பில் தொகை தெரியும் என்றாள்.
அதற்கு அந்த மதுரைக்காரர் நீ சரியான படிச்ச முட்டாளாய் இருக்கிறாய் நான் கேட்டது போன் பில் ஆனால் நீ என் கரண்ட் பில்லுக்கு வழி சொல்லுகிறாய் என்று காட்டு கத்தல் கத்தினார்.( இதுக்குதான் கால் சென்டர்ல விபரம் தெரிஞ்ச மதுரைக்காரணை போடணும்கிறது .எவனுக்கு தெரியப் போது இந்த மதுரைக்காரர்கள் அருமை)



கம்பியூட்டர் சேல்ஸ்மென் : சார் இந்த கம்பியூட்டரை நீங்கள் உபயோகப்படுத்தினால் உங்கள் வேலை பாதியாக குறைந்துவிடும் என்று கூறினார்.
அதற்கு மதுரைக்காரர் அப்ப எனக்கு இரண்டு கம்பியூட்டாராக தந்துவிடுங்கள் என்றார்.(விபரம் தெரியாத சேல்ஸ்மெனை எப்படிதான் இந்த கம்பெனிகாரன் வேலைக்கு வச்சுருக்கானோ)





லண்டன் டூர் சென்றுவந்த மதுரைக்காரர் தன் மனைவியிடம் கேட்டார்.
நான் என்ன வெளிநாட்டுகாரன் போலிருக்கிறேனா என்று?
அதற்கு மனைவி  இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் இதைக் கேட்கீறிர்கள் என்றாள்.
அதற்கு மதுரைக்காரன் சொன்னான்  லண்டனில் சில பெண்கள் என்னிடம் நீங்கள் வெளி நாட்டுகாரரா என்று கேட்டார்கள். நான் இல்லையென்று சொல்லிவந்தேன் அதனால் தான் நான் உன்னிடமும் கேட்டு உறுதிபடுத்தி கொண்டேன் என்றான்.( உன் கலருக்கு நீ அழகர் மலையில் இருந்த வந்தேனு கேட்டு இருக்கனும்)



மதுரைக்காரன் தன் நண்பனிடம் சொன்னான் அந்த ஆனந்தி பெண்ணுக்கு காது கேட்காது போலிருக்கிறது.
அதற்கு நண்பன்  அது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.
நான் அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவள் செருப்பு காலுக்கு புதுசு என்று கூறி செல்கிறாள் என்றான்,( நல்ல வேளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பிகிறேன் என்று சொல்லி பாழும் கிணற்றில் விழாமல் இருந்தாயடா)





புதுசா கல்யாணம் ஆன மதுரைக்காரர் தன் மனைவிகூட ஆட்டோவில் மினாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது ஆட்டோகாரர் ஆட்டோ கண்ணாடியை சிறிது மாற்றினார். அதைப்பார்த்த அந்த மதுரைக்காரர் தன் மனைவியை பார்க்கத்தான் அந்த ஆட்டோகாரர் அப்படி செய்கிறார் என்று கருதி அவரைப்பார்த்து சத்தம் போட்டு கத்திவிட்டு நீ பின்னால் உட்கார் நான் ஆட்டோவை ஒட்டிகிறேன் என்று கூறி ஆட்டோவை ஒட்டி சென்றார்.(மதுரைகாரங்கய செம புத்திசாலிங்கடா.. பின்ன அவன் மனைவி செம கட்டைதான நல்ல அடிவாங்கிட்டு வரட்டுமுனுதான் அப்படி பின் சீட்டுக்கு வர சொன்னான்)

.
நான் படித்த சில நகைச்சுவையை சிறிது மாற்றி என் வழியில் தந்துள்ளேன். மதுரக்காரர்களை வம்புக்கு இழுத்த காரணம் நான் இப்போதுதான் மதுரைக்கு வந்து சென்றேன் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம்தான் மதுரைக்கு வருவேன் அதற்குள்ள மதுரைக்காரர்கள் இதைப்பற்றி மறந்து விடுவார்கள்

14 comments:

  1. ஏற்கனவே மதுரை பசங்களுக்கு பெண்தர மாட்டேங்கறாங்க. அரிவாளும் கையுமாக திரிவதாக நினைக்கிறார்கள். இதில் இப்படியெல்லாம் இமேஜ் டாமேஜ் செய்தால் என்ன ஆகும்?.பசங்க சாபம் கடல் கடந்து வந்து பலித்துவிடும்.

    ReplyDelete
  2. அருவா கம்போடு சுற்றி கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  3. சர்தார்ஜி மாதிரி மதுரைக்காரர்களையும்
    ஆக்கிப்புட்டீங்களே
    ஆனாலும் ஜோக் எல்லாம் நல்ல இருக்கு
    வேற ஊர் காரங்களைப் போட்டிருந்தாலும்
    மன்சு சங்கடப் பட்டுத்தான் போயிருக்கும்
    தொடர வாழ்த்துக்கள் த.ம 1

    ReplyDelete
  4. மதுரக்காரங்க உங்கள மறக்கிற மாதிரியா பதிவு போட்டிருகிங்க? நல்ல கற்பனை

    ReplyDelete
  5. ஹாஹாஹா...என்னங்க உங்களுக்கே இது நியாயமா? நம்ம ஊருகாரரா இருந்துட்டு நம்ம ஊருகாரங்களை இப்படி ஓட்டுரீங்களே!!

    ReplyDelete
  6. என்ன மதுரைக்காரங்க மேல அப்படி ஒரு கடுப்பு இந்தப்போடு போட்டிருக்கிறியள்.மதுரைக்காரங்க தங்களை மிஞ்சிட்டாங்க என்று சர்தாருங்களெல்லாம் கோபிச்சுக்கப்போறானுகள்

    ReplyDelete
  7. சாகம்பரி மேடம் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    மதுரை பசங்க வெகுளி பசங்க ....அவங்க அரிவாளை தூக்குவது நிஜம்தான் ஆனால் அவங்க சும்மா அதை தூக்கிடமாட்டாங்க தன்னை சுற்றி உள்ளவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற மட்டும்தான் அரிவாளை தூக்குவார்கள். தான் உள்ளே போனாலும் பரவாயில்லை தம்மை சுற்றியுள்ளவர்கள் எந்த பிரச்சனை இல்லாமலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கருத்து
    //ஏற்கனவே மதுரை பசங்களுக்கு பெண்தர மாட்டேங்கறாங்க.// பொண்ணு கிடைக்காத மதுரை பசங்களுக்கு அமெரிக்காவில் பொண்ணுபாத்துட்டா போச்சு....
    இமேஜ் டாமேஜ் செய்தால் என்ன ஆகும்? இது டாமேஜ் இல்லைங்க அவங்க வெகுளித்தனத்தைதான் சொல்லியிருக்கேனுங்க.

    ReplyDelete
  8. சூர்யஜீவா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //அருவா கம்போடு சுற்றி கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன//
    பாத்தீங்களா மதுரைக்கு நான் இலவசமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளேன். இப்ப மதுரைக்காரர்களிடம் வெளீயூர் ஆட்கள் வாலாட்ட மாட்டார்கள்

    ReplyDelete
  9. அன்புள்ள சீனா அவர்களுக்கு வருகைக்கு நன்றி. எனக்கும் உங்களை போன்ற நல்ல பதிவாளர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் நேரமின்மையால் எந்த பதிவாளர்களையும் பார்க்க இயலவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மதுரையில் நான் பார்க்க விரும்பும் பதிவாளர்கள் மிகவும் அதிகம் உதாரணமாக ரமணிசார், நீங்கள், தருமி சார்.,ஆனந்தி & சாகம்பரி மேடம் ,தமிழ்வாசி பிரகாஷ்....இன்னும் பல பேர். இவர்கள் எல்லாம் நான் மதிக்கும் பதிவாளர்கள் அது போல ஒவ்வொரு ஊரிலும் நான் மதிக்கும் சில பதிவாளர்கள் உள்ளனர் இவர்கள் அனைவரையும் சந்திக்க ஆசைதான் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அவர்களை சந்திப்பேன் எதிர்காலத்தில்.

    ReplyDelete
  10. ரமணிசார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    //சர்தார்ஜி மாதிரி மதுரைக்காரர்களையும் ஆக்கிப்புட்டீங்களே //
    சர்தார்ஜிக்கள் நல்ல உழைப்பாளிகள் வாய்ப்புகள் கிடைத்தால் மதுரைக்காரர்களும் நல்ல உழைப்பாளிகள் தான்
    //வேற ஊர் காரங்களைப் போட்டிருந்தாலும் மன்சு சங்கடப் பட்டுத்தான் போயிருக்கும்//
    தெரியாதவர்களை நாம் கிண்டல் பண்ண முடியாது & கூடாது. மதுரைக்காரர்களுக்கு எப்பவுமே நகைச்சுவை உணர்வு அதிகம்

    ReplyDelete
  11. தமிழ்வாசி பிரகாஷ் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மதுரக்காரங்க எப்பவும் யாரையும் மறக்கமாட்டாங்க

    ReplyDelete
  12. முகுந்தம்மா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நமக்கு பிடித்தவங்களை மட்டுமே நன்றாக ஒட்ட முடியும் & ஒட்டலாம் என்பது என் கருத்து

    ReplyDelete
  13. அம்பலத்தார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் வலைபக்கதில் நீங்கள் aboute me என்று கொடுத்த தகவல்கள் மிகவும் நன்றாக உள்ளது

    ReplyDelete
  14. எலே மக்கா சரி தான்
    நீங்க சொல்லி இருக்கிற வொவ்வொரு வசனங்கள் உண்மை உண்மை
    ஆனாலும் சென்னைல வந்து கொடைச்சல் குடுக்கிறாங்கலே

    அங்க ஒரு டைடல் பார்க் பெருசா கட்டி எல்லோரையும் குடும்பத்தோடு மதுரைக்கு பார்சல் பண்ணா எவ்ளோ நல்ல இருக்கும்
    IT கம்பெனியில் வேலை செய்யுரேன் பேர்வழின்னு கிளம்பி வந்துரானங்கப்பா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.