உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 15, 2014

விடிவுகாலமே இல்லையா?
விடிவுகாலமே இல்லையா?என் மனைவி அடிக்கடி கோபபடுகிறாள் நேற்று அதற்கான காரணத்தை கண்டு பிடித்துவிட வேண்டுமென்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி அவள் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் அதற்கான காரணத்தை பக்குவமாக கேட்டேன் அதற்கு அவ சொன்னாள் என்னங்க நீங்க தானே நம்ம கல்யாணம ஆன புதிதில் நான் கோபம் படும் போது ரொம்ப அழகாக இருக்குதுன்னு சொன்னீங்க. அதனாலதான் நான் இப்பவெல்லாம் அதிகமாக கோபபடுகிறேன்அது சரிம்மா நீ கோபபட்டால மட்டும் போதுமே ஆனால் நீ பூரிக்கட்டையும் சேர்த்து தூக்குவது எதற்கு என்பதை சொல்லும்மா
அதுவாங்க சும்மா கோபத்தை முகத்தில் காட்டினால் மட்டும் நல்லா இருக்காதே அதனால கொஞ்சம் ஆக் ஷனையும் சேரத்துகிட்டா சுவராஸ்யமா இருக்கும் என்று நினைத்துதான் பூரிக்கடையை எடுக்கிறேன் என்று சொன்னாள்.பாருங்க பயபுள்ள எப்படி ஸ்மார்ட்டா இருக்குதுன்னு......உடனே நானும் அம்மா கல்யாணம் ஆனா புதுசில் நீ கோபபடும் போது ரொம்ப அழகாக இருந்த ஆனால் நீ இப்ப சிரிக்கும் போதுதான் ரொம்ப அழகாக இருக்க என்று சொன்னேன் அப்பதானே அடியில் இருந்து தப்பிக்கலாம்என்ன இந்த ஐடியா வொர்க் ஆச்சா என்றா கேட்கிறீங்க?அட ஏங்க இப்படி கேட்டு என் வைத்தெரிச்சலை கொட்டிகிறீங்க!பாருங்க இப்பவும் அடி வாங்குவதில் இருந்து தப்பிக்க முடியவில்லை முன்னால கோபபட்டு அடிப்பா ஆனா இப்போ அடிச்சுவிட்டு சிரிக்கா அவளிடம் காரணம் கேட்டால் சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நலமாம் அது மட்டுமல்லாமல் நான் வேற அவ சிரிச்சா அழகாக இருக்கேன்னு சொல்லிட்டேனாம். அதுமட்டுமில்லை நான் அடிவாங்கும் போது கதறுவதுதான் அவளுக்கு சிரிப்பை வரவழைக்குதாம். அதுனாலதான் அவ அடிச்சிகிட்டு சிரிக்கிறாளாம் அதுல வேற அவளுக்கு என்னை அடிச்சாதான் இப்பவெல்லாம் சிரிப்பே வருதாம்

என்ன கொடுமைடாநமக்கு இந்த பூரிக்கட்டையில் இருந்து விடிவுகாலமே இல்லையா என்ன

டிஸ்கி :மனைவியிடம் அடிவாங்குவதால் அல்ல .பேஸ்புக்கில்  வந்த கிழே இருக்கும் இந்த வரிகளை படித்ததினால் வெளிவந்த பதிவுதான் இந்த பதிவு. இப்படிதான் எனது பல பதிவுகள் உதிக்கின்றன. ஆண்கள் மனைவியிடம் சொல்லும் பொய்களிலே சிறந்த பொய் " கோபப்படும்போதும் நீ அழகாத்தான் இருக்க" என்பதுதான்..
அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments :

 1. தல உங்க "குடும்ப அரசியல்" பதிவுகள்தான் உண்மையான அரசியல்ப் பதிவுகளைக் காட்டிலும் நல்லாயிருக்கு! :)

  ஆனா ஒண்ணு நான் நீங்க காமெடியாச் சொல்றதையும் நம்புறதில்லை. சீரியஸா சொல்றதையும் நம்புறதில்லை! உங்க மேலே அம்பூட்டு "நம்பிக்கை" எனக்கு. என்ன "நம்பிக்கை"?

  அதான் நீங்க ரொம்ப நல்லவர், பொண்டாட்டியைக் கோபத்திற்கு உள்ளாக்கத் தெரியாத அப்பாவினுதான்! :)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் என் மனைவியின் கோபத்திற்கு காரணம் ஆகிவிட்டீர்கள் என்னை நல்லவர் என்று சொல்லிவீட்டதால்... தப்பி தவறி ஈஸ்ட் கோஸ்ட்பக்கம் வந்துவீடாதீர்கள் பாஸ்

   Delete
 2. என்னுடைய மந்திரத்தை பயன் படுத்துங்க... மனையிடம் பொய் சொல்ல கூடாது, ஆனால் உண்மையை மறைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. எதையும் எனக்கு மறைக்க தெரியாது அப்படி தெரிந்து இருந்தால் நான் பூரிக்கட்டையை மறைத்து வைத்து இருப்பேனே தலைவா

   Delete
 3. கோபப்படும் போது ஆண்கள் நீங்க அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லும் பொய்யை பெண்கள் நம்புகிறார்கள் என்று ஆண்கள் நம்புவது தான் ........? பொய்யை பொய்யாய்( நம்புவது போல் ) மறுமொழிகிறார்கள் பெண்கள். பெண்கள்னா சும்மாவா....!!!

  ReplyDelete
  Replies
  1. காயத்திரி அப்ப ஒரு பெண்களுகளும் அழகாகவே இல்லையா என்ன? நான் பொய் சொல்லவமாட்டேன் அதுவும் பெண்கள் விஷயத்தில் என் கண்களுக்கு என்னவோ எல்லா பெண்களும் அழகாக இருக்கிறார்கள் அதுவும் சேலைக்கட்டும் பெண்கள் மிகவும் அழகாகவே தெரிகிறார்கள் டாகடரிடம் கூட என் கண்களை பரிசோதனை செய்துவிட்டேன் என் கண்களில் எந்த வித கோளாரும் இல்லை என்று சொல்லிவிட்டார்

   Delete
 4. இனியேனும் விடிவு காலம் பிறக்க வாழ்த்துக்கள் சகோதரா :)
  (அண்ணி இது உங்களுக்கு புதுசா வாங்கின பூரிக் கட்டை
  நல்லா இருக்கா ?...:))) )

  ReplyDelete

 5. வணக்கம்!

  மென்பூரிக் கட்டையா? வன்பூரிக் கட்டையா?
  என்பூரிக் கட்டை இயம்பிடுக? - இன்றமிழா!
  பூரியைக் கண்டாலே பொங்கிவரும் உன்நினைவு!
  வாரி வழங்குகிறேன் வாழ்த்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. உங்களி கவிமயான வாழ்த்துக்கு நன்றி ஐயா

   Delete
 6. வணக்கம்

  எல்லாத்துக்கும் அடிவாங்க முடியுமா. தங்களின் அக்சனை காட்டுங்கள் காலம் தாமதிக்காமல் கவலையாகவு உள்ளது...
  பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தம்பி ஆக்ஷனை காண்பிக்காத போதே இவ்வளவு அடியப்பா இதிலே வேற நீ சொல்லுற மாதிரி ஆக்ஷ்னை காண்பித்தால் சங்கு ஊத ஆளை தேடனுமப்பா

   Delete
 7. தமிழா அவங்க இதையும் சொல்லிருப்பாங்களே "ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு எங்க வீட்டுக்காரர்" அப்படின்னு....அதை விட்டுப்புட்டீங்களே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க என் மனைவி அவளின் தோழியிடம் சொல்லும் போதெல்லாம் என் கணவர் மிக நல்லவர் நான் அடிக்கும் அடியெல்லாம் வாங்கிட்டு கம்மூணு கெடப்பார் என்றுதான் சொல்லுகிறாள்

   Delete
 8. ரொம்ப சிரிச்சோம்ங்க....

  ReplyDelete
 9. வீட்டில் தக்கையால் செய்த பூரிக்கட்டை வாங்கி வைத்து விடுங்களேன்... பூரியா முக்கியம்! :)))))))

  ReplyDelete
  Replies
  1. பூரி இட என்ன வாங்கி வைத்தாலும் அவள் என்னை அடிக்கவென்றே ஸ்பெஷலாக தேக்குகட்டையில் செய்த கட்டையை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்கிறாள் நான் என்ன செய்யட்டும் நண்பரே

   Delete
 10. பூரிக்கட்டைக்கும், உங்களுக்கும் உள்ள உறவுகள் என்றும் நிலைத்தோங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் ''பூரி''வானாக....

  ReplyDelete
  Replies
  1. இப்படிதான் நீங்கள் அருள் பூரிவிற்களா என்ன?

   Delete
 11. மனைவியிடம் அடுத்தது என்ன பொய், "பூரிக்கட்டையால் அடிக்காத போது நீ இன்னும் ரொம்ப அழகா இருக்கிறாய்" என்பதுதானோ....?

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்லி பார்தேனே அதை கேட்டுகிட்டு அவ சொன்னது ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் இடைவெளியில் நான் அழகாக இருப்பது மட்டும் போதும் என்றுதானுங்க

   Delete
 12. எப்படியும் அடி நிரந்தரம்னு ஆயிருச்சு! சந்தோஷமா வாங்கிக்குங்க! ஹாஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷமாக வாங்கணும்மா வாங்கிகிறேன் அப்புறம் கொஞ்சம் உங்க விலாசாம் சொன்னிங்கின்னா நல்லது என் மனைவி உங்க மனைவியை பார்த்து கொஞ்சம் பேசனும்மாம்

   Delete
 13. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் அடி வாங்குவது நிச்சயம். ஆகையால் இதெல்லாம் வீண்முயற்சி நான் வேணுமென்றால் ஒரு ஐடியா தரட்டுமா ? பூரிக்கட்டையை தலையை சுற்றி வெளியில் வீசிவிடுங்கள். என்றால் வீசிவிட்டு நீங்கள் வீச சொன்னீர்கள் நான் வீசிவிட்டேன் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மண்டை உடைந்து விட்டது என்றுசொல்லக்கூடாது கவனமாக வெளியில் போட்டு விடுங்கள். அய்யய்யோ பூரி கிடைக்காதே சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்றும் கேட்ககூடாது தப்பாக ஐடியா தருகிறேன் என்று. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அவர் கேட்பார் இல்ல எங்க பூரிக் கட்டை என்று அப்போ. சப்பாத்தி சுடஒரு மெஷின் இருக்கிறதே அதை வாங்கி கொண்டு போய் அவரிடம் கொடுத்து எவ்வளவு காலம் தான் இப்படி கஷ்டப் படுவாய் கைகள் எல்லாம் புண்ணாகி தேய்ந்து விட்டது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது ஆகையால் எனக்கு இனி பூரி வேண்டாம் சப்பாத்தியே போதும் என்று கூறிவிடுங்கள்/ உங்கள் கஷ்டம் தீர்ந்து விடும்.ஹா ஹா .... எப்பிடி இல்லையேல் உங்க இஷ்டம் இஷ்ட தேவதையை வணங்கி வாங்கி கட்டிக் கொள்ளுங்கள். ஹா ஹா ......ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டையே தேவலாம் மக்கா சாப்பாத்து சுடுற மிசின் வாங்கி தந்தா அதாலேயே சுட்டுவிடுவா

   Delete
 14. என்னாதான் சொன்னாலும் அடி எப்பவும் தொடரத்தான் போகுது...
  விடுங்க...

  ReplyDelete
  Replies
  1. அப்படி பேசாம விடமுடியலையே காரணம் அடிவாங்குவது நாந்தானே நீங்கள் இல்லையே

   Delete
 15. அதெல்லாம் சரி அதென்ன மாமி படத்திற்கு பதில் நயன்தாரா தெரியிற மாதிரி இருக்கே! இந்த மேட்டர் மாமிக்கு தெரியுமா? ( ஹலோ ராஜி அக்கா உங்ககிட்டயாவது மாமி நம்பர் வாங்கலாம்னு பார்த்தேன் எங்க போயிட்டீங்க?)

  ReplyDelete
  Replies
  1. நயன் தாரா எனது குலதெய்வம் என்பது என் மனைவிக்கு தெரியும் அதனால ஒன்றும் சொல்லமாட்டா ஹீஹீ

   Delete
 16. தொடர்ந்து அடி வாங்கி அசத்துங்கள் தமிழரே....

  ReplyDelete
 17. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

  வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog