உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 14, 2014

மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?
மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?


இந்திய ராணுவம் மிகவும் தயார் நிலையில் இருக்கிறது. போருக்கு அல்ல வருகிற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்குதான். இந்து மதத்தினருக்கோ ஆயுத பூஜை வருடத்திற்கு ஒரு முறைதான் ஆனால் இந்திய ராணுவத்திற்கோ 2 தடவை ஒன்று சுதந்திர தின விழா மற்றொன்று குடியரசு தின விழா..

மக்களின் பொழுது போக்கிற்காக (entertainment) மிக அதிக செலவில் பாரமரிக்கப்படும் மிகப் பெரிய சர்க்கஸ் குழுதான் இந்திய ராணுவம். அந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 2 முறைதான் நடத்தி காட்டப்படும். இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 15 ல் நடத்தப்படும் அதை பார்க்க மறக்க வேண்டாம்

டிஸ்கி : இந்திய ராணுவத்தினர் மிக திறமையானவர்கள்தான் அவர்கள் உயிரை கொடுத்து நாட்டை காப்பாற்ற நினைப்பவர்கள்தான் ஆனால் அவர்களுக்கு கட்டளை இடும் உரிமையை பெற்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் தான். ஆனால் இந்த தலைவர்களோ நாட்டை கெடுத்து தங்களை வளமாக்கி கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.


அமெரிக்க ராணுவத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் :

The Pentagon has approved a new policy that will allow troops to wear turbans and other religious clothing and engage in religious observances.Until now there has been no set policy in the military to allow accommodations for religion.
Soldiers must apply for a waiver to be able to wear their religious garment or engage in a specific religious activity, which the military says they will take on a case-by-case basis.


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. வணக்கம்

  கருத்துள்ளபடத்தின் வழி மிக அழகாக கருத்தை சொல்லியுள்ளீர்கள் எழுதியதை படிக்கவேண்டியதில்லை படமே அவர்களின் நிலையை காட்டிவிடும்பகிர்வுக்குநன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஐயோ..... இராணுவ ரகசியத்தைச் சொல்லிவிட்டீர்களே....!!!

  ReplyDelete
 3. ஹாஹாஹா....இந்திய ராணுவம் குரங்காட்டி வித்தைகளான அரசியல்வாதிகளின் கைகளில்....!! படமும் அருமை! உண்மை!

  ReplyDelete
 4. ஆஹா! ரொம்ப நாளா காணவில்லையே! மறுபடி தல பர்த்டே பார்ட்டிக்கு போய்டாரோன்னு கவலைப்பட்டேன் . அட! பதிவுகள் மிஸ் பண்ணேன் சொன்னேன்பா:)

  ReplyDelete
 5. அர்த்தமுள்ள பதிவு சகா! இந்த கோணத்தில் இதை இன்னும் யார் எழுத்தையும் படிக்கலை! சும்மா சுதந்திர தினத்துக்காக சோப் போடாமல் நச்சுனு சொல்லிருக்கீங்க:)

  ReplyDelete
 6. அமெரிக்கராணுவம் !!!!! ஆமா அதை ஏன் நீங்க மொழிபெயர்க்கல?
  ஓகே !! சுதந்திரதின வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இங்கிலீஷ் டீச்சர் உங்களுக்காக போட்ட செய்தி அதனால மொழி பெயர்க்கல

   Delete
  2. ஒ!! நன்றி சகா:)
   நான் இப்போதான் இந்த ரிப்ளையை பார்கிறேன்:)

   Delete
 7. கருத்துப் படம் அட்டகாசம்.
  இரண்டாவது சிரிக்கவைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

  ReplyDelete
 8. ஆஹா.... அட்டகாசம்.

  ReplyDelete
 9. சிறந்த கருத்துப் பகிர்வு

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog