Thursday, January 20, 2011

பெற்றோர்களின் கவனத்திற்கு : Child Sexual Abuse


சக பதிவாளர் ஹுசைனம்மா எழுதிய பதிவை(ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்) படித்த பின் ஏற்பட்ட துயரத்தின் விளைவால் உந்தப்பட்டு எழுதப்பட்ட பதிவே இந்த பெற்றோர்களின் கவனத்திற்கு என்ற Child sexual Abuse என்ற பதிவு.



13 வயது பெண் குழந்தை தன் மாமா தன்னை தவறான் இடங்களில் தொடுகிறார் என்று பெற்றோர்களிடம் சொல்லியும் பெற்றோர்கள் அதனை நம்ப மறுத்து குழந்தையை திட்டி அனுப்பியதால் எதிலும் ஆர்வம் காண்பிக்காமல் படிப்பிலும் ஆர்வத்தை இழந்து தறி கெட்ட கதையையும், இன்னொரு ஆறு வயது சிறுமி தனக்கு டீயூசன் சொல்லித் தரும் டீச்சரால் அபியூஸ் பன்னப் பட்டு யாரிடமும் கூற முடியாமல் பயந்து மனதிலே பூட்டி போட்டதால் டீயூசனிலும் ஆர்வம் இழந்து படிப்பிலும் ஆரவம் இழந்து வீட்டில் யார் சொல்ல்வதையும் கேட்காமல் அடங்கா பிடாரியாக் மாறிய கதைகளையும், மேலே ஹீசைனம்மா கூறிய கடந்த வார உண்மை நிகழ்ச்சியையும் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளூம் இது போன்ற பல..... ஒன்று அல்ல இரண்டு அல்ல பல்லாயிரம் குழந்தைகள் தினசரி Child Sexual Abuse -யினால் பாதிக்கப்படுகின்றனர். பலவித காரணங்களினால் இது போன்ற Child Sexual Abuse கூண்டுக்குள் உள்ள எலும்புகூடுகள் போன்று ரகசியம் என்ற கூட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் நம்ப குடும்ப கௌரவம் என்ற போலித்தனம் காக்கப்பட்டு நம் அன்பு செல்வங்கள் பாதிக்கப் படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்க்கான சில வழிகள் நம் தமிழ் பெற்றோர்களுக்கு.

அநேகமான Child Sexual Abuse ர்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், டீச்சர்கள், நமது பெறும் நம்பிகைகுரிய வேலைக்காரகள் போன்றவர்களை ஆவார்கள். யாராக இருந்தாலும் எவ்வளவு நம்பிக்கைகுரியவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் குழந்தையிடம் பழகுவதை கண் கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய கடமை ஆகும். அது போல நம் குழந்தைகளிடம் அந்த அங்கிளுக்கு முத்தம் கொடு அல்லது ஹக்கு (hug) கொடு என்று சொல்லி வற்புறுத்தக் கூடாது, இது நல்ல பழக்கம் கிடையாது.குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தவாறு அன்பை வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

...

நம் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்டல் & பேசுதல் :



எப்பொழுதும் குழந்தைகளிடம் மனம்விட்டு பேசுதல் மூலம் sexual abuse-ரரிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாக்கலாம். இதன் முலம் குழந்தைகளிடம் ஒரு வித அன்பையையும், நம்பிக்கையையும் உண்டாக்குவதன் மூலம் அவர்களிடமிருந்து பய உணர்வையும், பெற்றோர்களின் மீது நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்த மூடியும்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் பேசுங்கள், கேளுங்கள், கவனியுங்கள். அவர்களிடம் நன்றாக அன்புடன் பேசி அவர்களின் வாயை கிளறி அவர்கள் அன்று என்ன பண்ணினார்கள் அவர்களின் அன்றைய உணர்வுகள் என்ன என்பதை அறியுங்கள், அவர்களை எப்போதும் என்கரேஜ் செய்யுங்கள்.

யாரவது அவர்களை தவறான இடங்களில் தொட முயற்சி செய்தால் எதற்கும் பயப்படாமல் "நோ' என்று சொல்ல கற்றுக் கொடுங்கள்.

யாராவது அடல்ட் அவர்களை தகாத செயல்களில் ஈடுபடுத்தலாம், காயப் படுத்த முயற்சிக்கலாம், இதை எல்லாம் செய்து விட்டு ரகசியமாக ப்ளாக் மெயில் செய்து பயமுறுத்தலாம். ஆனால் எதற்கும் பயப்பாடமல் நல்லது அல்லது கேட்டதாக இருந்தாலும் மனம்விட்டு பேசலாம் என்ற வழியை ஏற்படுத்தி கொடுங்கள்.

பாதுகாப்பு வழிகள் - Start Early :

நாம் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே எப்படி ரோட்டை க்ராஸ் செய்வது, தீக்குச்சிகளுடன் விளையாடக்க் கூடாது, தண்ணீரில் எப்படி பாதுகாப்பாக விளையாடுவது என்று சொல்லித்தருவது போல முன்னேச்சரிக்கையாக விளையாட்டு போல இந்த Child Sexual Abuse யைப் பற்றியும் சொல்லித் தரவேண்டும். இதை முன்று அல்லது நான் கு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் எதையும் எளிதாக புரிந்து கொள்வார்கள். இதை நாம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் அவர்கள் குழப்பம் அடைந்துவிடுவார்கள் அல்லது வெட்கப் பட்டு சொல்லாமல் இருந்துவிடுவார்கள். அது போல எந்த விதமான் தொடுதல் நல்லது அல்லது கெட்டது என்று சொல்லிட் தாருங்கள்



குழந்தைக்கேற்றவாறு உடல் உறுப்புக்களையும் அதற்கான சரியான வார்த்தைகளையும் சொல்லிதாருங்கள். இதை ஒரு விளையாட்டு போல கதை சொல்வது போல சொல்லிட்தாருங்கள்.தவறாக நடப்பவர்களிடம் தைரியமாக "நோ' சொல்லி அவர்களிடமிருந்து விலகி ஓடி நம்பிக்கையானவர்களிடம் வந்து வெட்கப்பாடாமல் சொல்ல சொல்லுங்கள்.



குழந்தைகளின் பழக்க வழக்கம் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்;

குழந்தைகள் பயத்தினாலோ அல்லது வெட்கத்தினாலோ சொல்லாமல் இருக்கலாம், ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வந்தால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும்.

கிழ்கண்ட செயல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிய முடியும்.

  • திடீரென அவர்களின் வழக்கமான பழக்க வழக்கங்களில் மாறுதல், அளவுக்கு அதிகமாக பயப்படுதல், காரணமின்றி அழுதல்

  • சரியாக உணவு அருந்தாமல் இருத்தல்

  • இருட்டிற்கு பயப்படுதல், சரியான உறக்கமின்மை, கனவு கண்டு அஞ்சுதல்.

  • படுக்கையை நனைத்தல், அதிகபடியாக அழுதல்,

  • கரைபடிந்த ஜட்டி அல்லது கிழிந்திருந்தல்

  • வெஜினல் அல்லது ரெக்டலில் இரத்தம், வீங்கியிருப்பது, அதிகப் படியான அரிப்பு

  • சில பேரை அதிக அளவு திடீரென வெறுத்தல். சிறிது வயது அதிகம் இருப்பவர்களிடம் செக்ஸுவலில் அதிக ஆர்வம் காட்டுதல்

  • முரட்டுதனமாக நடத்தல், வீட்டை விட்டு ஓடுதல்...படிப்பில் பெயிலாகுதல் கவனமின்மை



இது போன்ற பழக்க வழக்கங்களை கண்டால் குழந்தைகளையோ அல்லது உங்களையோ குறை கூறி வருந்தாமல் நம்மைவிட பெரியோர்களிடம், டாக்டர்களிடம் அல்லது சோசியல் வொர்க்கர்களிடமோ சென்று ஆலோசனை செய்யலாம் .

இந்த சமயங்களில் குழந்தை சொல்வதை முழுமையாக நம்புங்கள். அவர்கள் பொய் சொல்லவது கிடையாது இந்த மாதிரி தருணங்களில்.....எண்ண நடந்தது என்பதை தெளிவாக விளக்குமாறு சொல்லஸ் சொல்லுங்கள்.நீங்களும் பொறுமையாக கேளூங்கள்.

அவர்களின் பாதுகாப்புக்கு உறுதிதாருங்கள் & உங்களின் முழு சப்போர்ட்டும் குழந்தைகளுக்கு உண்டு என்று உணர்த்துங்கள்.

ரிப்போர்ட் ரைட் டிபார்ட்மெண்ட்டுக்கு...

வேறு ஒரு புதிய இடத்துக்கு அழைத்து செல்லுங்கள்...



கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளுக்கென தினசரி நேரம் ஒதுக்கி அவர்களிடம் அன்புகாட்டி எப்போதும் ஆதரவு கொடுத்து உங்களை எந்த நேரமும் நம்பும்படி வளர்த்தாள். எப்போதும் அவர்கள் பாதுகாப்பாக வளர்வார்கள்.



Parenting corner Q &A Sexual Abuse ( Source: Child Sexual Abuse (Copyright © 2007 American Academy of Pediatrics )

What can I do to prevent my child from being sexually abused?

Sexual abuse of children is more common than most people think. But there are steps you can take to help prevent and recognize sexual abuse in children.

The following are things parents can do based on a child's age:

18 months?3 years

Teach your child which body parts are private (parts covered by a bathing suit). Also, teach your child the proper names of those parts (breasts, vagina, penis).

Know the adults and children that spend time with your child. Make surprise visits to your child's caregiver.

3?5 years

Teach your child about private parts of the body. Children may touch their genitals and be curious about the genitals of others. Use these opportunities to teach your child how to show respect in the ways that he talks to and touches others.

Ask for advice. Many sexual behaviors may be normal in this age group, but if a child asks an adult to perform a sexual act or becomes forceful in his sexual behaviors, call your pediatrician for advice.

Give simple answers. When children ask questions about sex or the genitals, give simple and understandable answers so they know these topics are not "off-limits."

5–8 years

Teach your child to respect the private parts of others and to expect others to do the same.

Talk about whom the child can tell if someone makes him feel uncomfortable when he is away from home.

Listen when your child tries to tell you something, especially when it seems hard for him to talk about it. Make sure your child knows it's OK to tell you about anyone that makes him feel uncomfortable, no matter who that person may be. Ask your child what he would do in certain situations (like if a stranger tries to talk to him or calls him to a hidden area) and how to recognize danger.

8–12 years

Stress personal safety. Your child should be aware of places where sexual abuse could happen, such as video arcades, malls, locker rooms, and out-of-the-way places outdoors.

Talk about peer pressure. Make safety plans with your child so he knows what to do if he is asked to use drugs or alcohol, smoke, touch someone sexually, steal, cheat, or bully.

Teach your child about sexual abuse. And if your child's school has a sexual abuse program, discuss what he learned.

Always know what your child is viewing and sharing on the Internet. Keep the computer in a room where you can watch your child. (Internet safety is important for all children.)

12–18 years

Set aside time each week to talk about the good, bad, and confusing experiences. Topics may include the following:

Types of sexual abuse, including date rape, sexual harassment in chat rooms or schools, pornography, and people who ask for sex through the Internet

Preventing sexually transmitted infections and pregnancy

Effects of drugs and alcohol on sexual behavior

Respect for others and by others, stressing the importance of honoring other people's wishes when it comes to how they are treated and touched (A person should have to say "no" only once.)

Good communication with your child is one of the best ways to prevent sexual abuse. Children should know they can and should talk with their parents about anything that makes them sad, scared, or confused. Remember that if you need advice, you can talk with your pediatrician

13 comments:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு...ஆனால் ஒன்னு முழுக்க தமிழ் இல் போடுங்க..இல்லை முழுக்க ஆங்கிலத்தில் போடுங்க..ஏன் பாதி..பாதி...???!! கீழே ஆங்கிலத்தில் இருப்பதையும் தமிழ் படுத்தி போட்டு இருந்தால் இந்த கட்டுரை இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்னு நினைக்கிறேன்..நன்றி தங்கள் பகிர்விற்கு...

    ReplyDelete
  2. நான் இந்த பதிவை பப்ளிக் செய்யும் நேரத்தில் இந்த parents Q& A வை பார்க்க நேர்ந்ததால் அதை அப்படியே பதிவு செய்து விட்டேன்.இந்த பதிவு பெற்றோர்களிடம் ஒரு ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் கூட....
    இது பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஏற்படும் இழப்பு அல்ல ஆண் குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை. தங்களுக்கு தெரிந்த பெற்றோர்களுக்கு இதை பற்றி நேரம் கிடைத்தால் எடுத்து சொல்லுங்கள்...நன்றி

    ReplyDelete
  3. I am thinking of writing about this. We are planning to have this educational program through our Church.

    ReplyDelete
  4. நன்றி அவர்கள்-உண்மைகள். என்ன நடந்தது என்று சொன்னதுடன், எப்படி தடுக்க முடியும், என்ன செய்ய வேண்டும் என்றும் நான் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ”என் இனிய தமிழ் மக்களே” என்ற பதிவு எழுதும் அன்னு என்பவர் இதுபோல ஒரு தொடரே எழுதியிருந்தார், அந்த லிங்க் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துவிட்டேன். இதோ: http://mydeartamilnadu.blogspot.com/2010/11/blog-post_09.html

    ReplyDelete
  5. சித்ரா மேடம் நீங்கள் இந்த பதிவை வேண்டுமானல் உங்கள் தளத்தில் அப்படியே எடுத்து போட்டு கொள்ளூங்கள். என் நோக்கம் இது எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்பதுதான். உங்கள் ப்ளாக் அதிக பாப்புலராக இருப்பதால் நிறைய பேர்களை சென்று அடையும் என்பது என் எண்ணம். வேண்டுமானால் இமெயில் பண்ணுங்கள். முழுதகவல்களை உங்களுக்கு இமெயில் அனுப்புகிறேன். உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  6. ஹுசைனம்மா நீங்கள் மற்றும் உங்களை போன்ற அநேக பெண்கள் அழகாக எழுதுகின்றீர்கள்.உங்களை போன்ற பதிவாளர்களை படித்ததின் ஆர்வத்தினால்தான் நானும் பதிவை எழுத தொடங்கியுள்ளேன். பெண்களே வலையுலகத்தின் மூலம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். என்னைப் போன்றவர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு

    ReplyDelete
  7. Konjam Ithai padinga... Intha kodumaiyai ennanu solrathu?

    http://allinall2010.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  8. this is an essential ,awareness post.
    thanks.

    ReplyDelete
  9. நல்ல விழிப்புணர்வு பதிவை கொடுத்துருக்கீங்க... வாழ்த்துக்கள்...!!

    கண்டிப்பாக இந்த பதிவு பல பெற்றோர்களை விழிப்படைய செய்யும்...

    மீண்டும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. ஆமினா உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. முடிந்தால் உங்கள் நண்பர்களூக்கும் இதை படிக்க அறிமுகப்படுத்துங்கள்

    ReplyDelete
  11. அழகான முறையில் எடுத்துரைத்துள்ளீர்கள்.

    நல்ல விழிப்புணர்வு பதிவு . நானும் இந்த லிங்கை கொடுத்து பதிவு போடுகீறேன், முடிந்த மட்டுக்கும் எல்லோரையும் சென்றடையட்டும், விழிப்புணர்ச்சி ஏற்படட்டும்.

    ReplyDelete
  12. நல்ல விழிப்புணர்வு பதிவு. எல்லா பெற்றோரும் செய்ய வேண்டியது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.