நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போயிருந்தேன். ஒரு பொருளை எடுத்து, "இது என்னடா இவ்ளோ விலையான்னு பாக்குறப்போ, யாரோ என்னை உற்றுப் பாக்குற மாதிரி ஒரு குறுகுறுப்பு. திரும்பி பாத்தா, ஒரு பெண் என்னையே ஜிகு ஜிகுனு பாத்துட்டு இருந்தா. நான் பாத்ததும், அவ சட்டுனு ஒரு புன்னகைய விட்டா. நானும் ஒரு செகண்ட் திகைச்சு, "என்னடா இது?"னு யோசிச்சு, பதிலுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
திகைப்பு காரணம் என்னவென்றால், இங்கு இருக்கும் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, இந்தியரும் பாகிஸ்தானியரும் சந்திக்கும் போன்ற ஒரு மனப்பான்மை கொண்டு நடந்து கொள்வதுதான்.. "யாரு இவன், என்ன பண்ணுறான்?"னு ஒரு சந்தேக பார்வை தான் வழக்கம். ஆனா இவ என்னடான்னா சிரிக்கிறா!
அப்புறம் அந்த பெண் நடந்து வந்து, "உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு, எனக்கு தெரிஞ்சவர் மாதிரி தோணுது"னு சொன்னா.
நாம்தான் மதுரைக்காரணாச்சே உடனே அவளை சீண்டிப் பார்ப்போமே என்று நம்ம் புத்தி சொல்ல . "நீங்க போர்னோ மூவி பாக்குறவங்களோ?"னு கேட்டுட்டேன். அவ உடனே, "ச்சீ ச்சீ, நான் அப்படி எல்லாம் பாக்க மாட்டேன்!"னு முகத்தை சுளிச்சா. அப்புறம் ஒரு பீடிகையோட, "ஏன் அப்படி கேட்டீங்க?"னு என்னையே பாத்து கேட்டா.
நான் சிரித்துக் கொண்டே, "நான் போர்னோ மூவியில் நடித்து இருக்கிறேன். அதை பாத்திருந்தா, என்னை பரிச்சயமா தெரிந்திருக்கலாம் என நினைத்துதான் கேட்டேன்," என்றேன்.அவ "களுக்"னு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு, "நீங்க ரொம்ப குறும்புக்கார பேர்வழி மாதிரி இருக்கீங்க போல! உங்க போன் நம்பர் சொல்லுங்க"னு கேட்டா.
அப்போ எனக்கு மனைவி நியாபகம் வந்து, ஒரு செகண்ட் தயங்கி நின்னேன். என் தயக்கத்தை பாத்துட்டு, அவளே தன் நம்பரை சொல்லி , "நேரம் கிடைக்கும்போது கால் பண்ணுங்க"னு ஒரு சிரிப்பு விட்டு, ஸ்டைலா நடந்து போயிட்டா.
இப்போ கையில இந்த நம்பர் இருக்கு. "என்னடா பண்ணலாம்? கால் பண்ணி சும்மா பேசி பாக்கலாமா, இல்ல மனைவி கண்ணுல படாம சீக்ரெட்டா வெச்சுக்கலாமா?"னு ஒரு குழப்பம். ஹ்ம்ம்... இது என்ன புது சோதனையா இருக்கே!
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.