Saturday, April 12, 2025

 
அண்ணாமலைக்கு அரோகரா
   



ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்விட்டர்ல ரவுசு பண்ணி, அதிமுகவ "பழைய பஞ்சாங்கம்"னு கேலி பண்ணி, லைக்கு மேல லைக் அள்ளின மாஸ் ஹீரோ!  ஆனா இப்போ பாஜக தலைமையால "நீ தான் அவுட்"னு ஒரே போடா போட்டுட்டாங்க! அவர டெல்லிக்கு "டூர் பேக்கேஜ்" அனுப்பி வச்சுட்டாங்க! மைக் புடிச்சு திராவிடத்தை துவம்சம் பண்ணி, தெரு மேடைய தெறிக்க விட்டவர், இப்போ அதிமுக கூட்டணி முன்னாடி "எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்ட்" ரோலுக்கு ஒதுங்கி, ஏசி ரூம்ல "தேசிய புரட்சி" பத்தி பவர்பாயிண்ட் பிரசென்டேஷன் குடுக்குற நிலை! என்ன கொடும சார் இது?
தமிழ்நாட்டு மேடையில சூப்பர் ஸ்டார் ஆக வந்தவர், இப்போ "கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்" டிக்கெட் வாங்கி ஓரமா உக்காந்துட்டாரு! அரசியல் மேடையில் "மாஸ்" காட்ட வந்தவர், இப்போ "பாஸ்" கேட்டுக்கிட்டு இருக்காரு!




குடும்பம் நடத்த நண்பர்களிடம் நன்கொடை வாங்கியவரை விட தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்க 4 கோடியை கடத்தியவர்தான்  கட்சிக்கு தலைவர் பதவிக்கு லாய்க்கு :பாஜக  தேசிய தலைமை முடிவு



செய்தி : திமுகவிற்க்கு தொல்லை தர நெல்லை நயினார் பாஜக தலைவாராக களம் இறக்கப்பட்டு இருக்கிறார் : தமிழிசை

அடடே, திமுக-வுக்கு தலைவலி கொடுக்க நெல்லை நயினாரை பாஜக தலைவரா களத்துல தள்ளிவிட்டாங்கன்னு தமிழிசை மைக் புடிச்சு மார் தட்டுறாங்க! அய்யோ, சிரிப்பு தாங்கல! இந்த தமிழிசையை மூதேவின்னு சொன்னா ஒரு நொடி கூட மனசு அழாது, ஏன்னா நயினார் தமிழக மக்களுக்கு நல்லது பண்ணப் போகிறார் என்று சொன்னாலாவது அதில் அர்த்தம் உண்டு  ஆனால்  இது ஒரு நல்ல பெண்மணி வாயில இருந்து வர டயலாக்கா, இல்ல மூதேவி வேஷம் போட்டு காமெடி ஷோ நடத்துற கலகலப்பு பஞ்சாயத்தா? இதையெல்லாம் கேட்டு சில பேர் இவரை "நல்லவங்க"ன்னு கும்பிடுறது... அட கடவுளே, முட்டாள்தனத்துக்கு கவுண்டமணி வந்து சர்டிபிகேட் கொடுக்கணுமே!




செய்தி : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை காலணி அணியமாட்டேன் என அண்ணாமலை சபதம் ஏற்றிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று காலணி அணிந்தார் அண்ணாமலை....!

நயினார் புத்திசாலி தலைவாரக பதவி ஏற்றவுடனே தமிழக நிலையை நன்றாக புரிந்து கொண்டார் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தவே முடியாது என்று அதனால் சபதம் எல்லாம் வேண்டாம் என்று செப்பல் அணிந்து கொள்ளுங்கள் என்று தொன்டன் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் போல


  


 ரோட்டுல நல்லவன் போனால் ஒரு பயலும் திரும்ப மாட்டான் ஆனால் அதே சமயத்தில் பைத்தியக்காரன் போனால் நாலு பேர்  பயந்து பேசத்தான் செய்வார்கள்


ஒரு சங்கியின் பதிவிற்கு இப்படி ஒரு கமெண்ட் போட்டேன் பயபுள்ள ப்ளாக் பண்ணிட்டான்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

12 Apr 2025

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.