Saturday, April 12, 2025

 மக்களின் நலனுக்கு  எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
 

 





தமிழக அமைச்சர்  பொன்முடியின் சமீபத்திய பேச்சு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் பரவலான  விவாதங்கள் கொதிக்கும் அளவில் எழுந்துள்ளன. இவை இரண்டும் தமிழக மக்களிடையே பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன,


அமைச்சர் பொன்முடி, மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.  இதைப் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரு ஃப்ளோவில் பேசியதாக எடுத்துக்  கொள்ள முடியாது. தாம் பேசியதன் அர்த்தம் என்ன என்பதைத்  தெளிவாகத் தெரிந்து கொண்டுதான் பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லக் காரணம் இப்படிப் பேசுவதற்கு முன்பு இந்த கூட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் பேசி இருக்கிறார் என்கிற போது  ஒரு ஃப்ளோவில் பேசியதாகக் கருத முடியாது. இதைச் சாதாரண திமுக பேச்சாளர் பேசி இருந்தார் என்றால் அதற்கு கண்டனத்தைப் பதிவு  செய்து விட்டுக் கடந்து இருப்பார்கள் ஆனால் பேசியது அமைச்சர் என்பதால் அது முக்கியத்துவம் பெறுகிறது அதுவும் பொது இடத்தில் பேசியதால்.

இதனைக் கண்டித்த ஸ்டாலின் அவரை திமுகவின் முக்கிய பொறுப்பு பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார். ஸ்டாலினின் அவர்கள் செய்திருக்க வேண்டியது கட்சிப் பதவியிலிருந்து அல்ல அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி இருந்தால்  மக்களின் மனதில் இன்னும் சற்று அதிகமாகசெல்வாக்கு பெற்று இருப்பார்.



அடுத்தாக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை உருவாக்கி வருகின்றன. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பியது உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. இந்த மசோதாக்கள், குறிப்பாகப் பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பானவை, மாநில அரசின் கல்வி மற்றும் நிர்வாக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை. ஆளுநரின் இத்தகைய தாமதங்கள், மாநில அரசின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை அவமதிப்பதாகவும் கருதப்படுகிறது.மேலும், ஆளுநர் ரவி, பொன்முடியின் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பதற்கு மறுப்பு தெரிவித்தது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான செயலாக அமைந்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உரிமைகளை மறுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த பொன்முடியின் பேச்சு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் இதில் எது மிகவும் மோசமானது என்று பார்க்கும் போது  ,பொன்முடியின் பேச்சு, சமூக உணர்வுகளைப் புண்படுத்தியது உண்மை என்றாலும், அது தனிப்பட்ட கருத்தாகவும், உடனடியாக மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத ஒரு நிகழ்வாகவும் உள்ளது.

ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், மாநில அரசின் நிர்வாகத்தையும், மக்களுக்கு உரியச் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமலாகுவதையும் தடுப்பதாக அமைகிறது. குறிப்பாக, கல்வி, நிர்வாகம், மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான மசோதாக்களைத் தடுப்பது, நீண்டகால அளவில் மக்களின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, ஆளுநர் ரவியின் செயல்பாடுகளே மக்களுக்கு எதிரானவையாகவும், மிகவும் மோசமானவையாகவும் தோன்றுகின்றன. இது மாநிலத்தின் ஜனநாயக செயல்பாடுகளையும், மக்களின் நலனையும் நேரடியாகப் பாதிக்கிறது. பொன்முடியின் பேச்சு கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், ஆளுநரின் செயல்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளன.

இந்த இரு நிகழ்வுகளும் மக்களுக்கு எதிரானவை என்றாலும், ஆளுநரின் செயல்பாடுகளின் தாக்கம் மிகவும் ஆழமானது மற்றும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

பொன்முடியின் பேச்சிற்காவது தமிழக முதல்வர் கண்டித்து அவரை கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கி  தண்டித்து இருக்கிறார். ஆனால் தமிழக மக்களுக்கு எங்களால்தான் நல்லது செய்ய முடியும் என்று சொல்லும் மத்திய அரசு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளைப் பற்றி எந்த ஒரு வித அறிக்கையையோ அல்லது கண்டத்தையோ பதியவில்லை என்பது இங்கு மிகவும் கவனிக்கதக்கது. இந்த விஷயத்திற்கு தெளிவாக விளக்கம் கொடுக்காத மத்திய அரசா இநு அவ்ந்து ஆட்சி அமைஸ்த்து மக்கள்க்கு நல்லது செய்யப் போகிறது

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து  தூக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்  தமிழக மக்களுக்கு எதிரான செயல்களை செய்யும் ஆளுநர் ரவியின் செய்லகளை கண்டித்து அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று குரல் எழுப்பாமல் இருக்கிறார்கள்


ஆளுநர் செயலை  கண்டித்துத்தான் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான அதிமுக தேதிமுக பாமக போன்றவை தொடங்கி இருக்க வேண்டும் . ஆனால் அதிமுகவின் தலைவர் எடப்பாடி மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக இல்லாமல்  ஒரு அமைச்சர் பேசி தனிப்பட்ட கருத்துக்காகப் போராட்டத்தை அறிவித்து இருக்கிறார் என்கிற போதே அவருக்கும் தமிழக மக்களின் நலத்தில் அக்கறை இல்லை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்


ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதிமுகவின் கவனம், பொன்முடியின் தனிப்பட்ட கருத்துக்களிலேயே உள்ளது. "மக்களின் நலனுக்கு போராடாத அதிமுகவால்  மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் இந்த ஏமாற்றம் அதிமுகவிற்கு  எதிரான வாக்குகளை பெற்று தந்து தோல்வியின் குழியில் விழச் செய்யும் என்பது தின்னம்

அண்ணாமலைக்கு அரோகரா  


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 Apr 2025
Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.