சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
அமெரிக்க அரசு, இமிகிரென்ட்ஸ் மற்றும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 9, 2025 அன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், "யூத விரோத நடவடிக்கைகளை" கண்டறியும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கிரீன் கார்டு , வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதற்காக சமூக ஊடகங்களை கண்காணிக்கும் என்று அறிவித்துள்ளது. "அமெரிக்காவில் வாழ அல்லது படிக்க விசா பெறுவது ஒரு சலுகை. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் இங்கு இருக்க தகுதியற்றவர்கள்" என்று உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையாக பார்க்கப்படுகிறது.ஆனால், இந்த முடிவு உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை நிபுணர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இதை "பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்" மற்றும் "இமிகிரெண்ட்ஸ்களை குறிவைக்கும் கண்காணிப்பு" என்று விமர்சிக்கின்றனர். சில யூத அமைப்புகள் உட்பட, இஸ்ரேலின் காசா நடவடிக்கைகளை விமர்சிப்பது அல்லது பாலஸ்தீன உரிமைகளை ஆதரிப்பது "யூத விரோதம்" என்று தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
"இது அமெரிக்காவின் சுதந்திரமான உரையாடல் மரபை பயம் மற்றும் மௌனத்திற்கு மாற்றுகிறது" என்று FIRE அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியேறிகளுக்கு ஆதரவான குழுக்கள் இதை எதிர்த்து போராட திட்டமிட்டுள்ளன.
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.