Sunday, October 17, 2021

 

@avargal unmaigal

எனக்கொரு ஆசை & மருத்துவர் ராமதாஸ் அய்யாவுக்கும் ஒரு ஆசை

எனக்கொரு ஆசை. மோடிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் மதுரை எய்மஸ் மருத்துவமனையில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று...






மோடி ஆட்சி செய்து ஏதோ சாதிக்க நினைக்கிறார் ஆனால் என்ன சாதிக்க நினைக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை


நிலக்கரி பற்றாக்குறை பற்றி இந்தியர்கள் கவலைப்படுவது குறைவு. காரணம் அவர்கள் 2014 முதல் இருண்ட யுகத்தில் இருக்கிறார்கள்


இந்தியாவின் சீர்திருத்தங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது, நிர்மலா சீதாராமன் செய்தி

ஒருவேளை இந்தியாவின் சீர்திருத்தங்கள் அமெரிக்க முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறதோ என்னவோ அதனால்தான் அமெரிக்க வரவேற்று உள்ளது போல. ஆனால் அதே சமயத்தில்  இந்திய மக்கள் வரவேற்கவில்லை அதனால் ஒத்த வோட்டு கிடைத்து இருக்கிறது



ரபேல் விமானங்களை மோடி யாருக்காவது விற்றுவிட்டாரா என்ன? இந்த வருஷ ஆயுத பூஜைக்குக் கூட வெளியே எடுக்கவே இல்லை போல இருக்கிறதே


மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை வளம் பெற வைக்கத் தலைவர்கள் செயல்படுவார்கள் ஆனால் தமிழகத்தில் மட்டும் மனநலம் குன்றியவர்கள் கட்சித்தலைவர்களாகி நாட்டை நாசமாக்கச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்


பாஜக தவிர மற்ற கட்சிகளில் அந்த கட்சித் தலைவர்களின் வாரிசுகளே மீண்டும் தலைவராக முடியும் ஆனால் பாஜகவில் அப்படி அல்ல அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஒரு தெரு நாய்களைத்  தமிழக தலைவர்களாக தேர்தெடுத்துவிடுவார்கள் அதனால்தான் அவர்கள் எப்போதுமே குரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

ஸ்டாலின் சிவகாசி பட்டாசு விற்பனைக்காக மற்ற மாநில முதல்வர்களிடம் கோரிக்கை விடுவிப்பதற்குப் பதிலாகத் தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கத் தடை என்று ஒரு சட்டம் போட்டால் உடனே தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் இது இந்து மதத்திற்கு எதிரானது என்று சொல்லி சங்கிகள் எல்லாம் சேர்ந்து பட்டாசுகள் வாங்கி வெடிப்பார்கள்.. விற்பனையும் அமோகமாக இருக்கும். சிவகாசி மக்களும் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா? இதை ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்


பணமதிப்பிழப்பு:
அரசு சொன்னது : பணத்தாள்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
ஆனால் நடந்தது மக்கள் அவதிப்பட்டனர்.

கோவிட்:
அரசு சொன்னது: ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை.
ஆனால் நடந்தது மக்கள் இறந்தனர்.

நிலக்கரி நெருக்கடி:
அரசு சொல்வது : நிலக்கரிக்குத் தட்டுப்பாடு இல்லை.
ஆனால் நடக்கப் போவது மக்கள் பாதிக்கப்படுவார்கள்


"என் மூச்சு உள்ள போதே அன்புமணி கோட்டையில் உட்கார வேண்டும்".- மருத்துவர் அய்யா
 இப்படித்தான் அன்புமணி உட்கார முடியும், அதுவும் ஸ்டாலின் அவர்கள் மனசு வைத்தால் மட்டுமே



தமிழனுக்கு சமயமோ, மதமோ இல்லை... அதைத்தான் கீழடியும் நிரூபித்துள்ளது என்று சொல்லுகிறார்கள் அதனால்தான் என்னவோ தமிழர்கள் பட்டாசு பாக்கெட்டில் கடவுளின் படங்களைப் போட்டு அதை வெடிக்கவோ எரிக்கவோ செய்கிறார்கள் அது புரியாமல் எல்லோரும் வாங்கி மகிழ்ச்சியாக  வெடிப்பது போலக் கடவுள் படங்களை எரிக்கிறார்கள்
 
@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்



2 comments:

  1. ரசமில்லாத, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அல்லது மதிக்காத யோசனைகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் இயேசு அல்ல ஒரு கன்னத்தில் அறை விழுந்தால் அடுத்த கன்னத்தை திருப்பி காட்டுவதற்கு. சிலர் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவவோ சேர்ந்து கொண்டு மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் போது அவர்களுக்கு இப்படித்தான் பதில் அடி கொடுக்க வேண்டி இருக்கிறது


      மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் போது வராத வலி தம் உணர்வுகள் காயப்படும் போது வருகிறது மேட்டர் அவ்வளவுதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.