Saturday, October 9, 2021

 

@avargal unmaigal

நஷ்டத்தில் ஓடும் ஏர் இந்தியாவை எந்த முட்டாளாவது வாங்குவானா என்ன?


ஏர் இந்தியாவை மோடி அரசு டாடா நிறுவனத்திற்கு விற்று விட்டது. அதற்குக் காரணம் அது நஷ்டத்தில் இயங்குகிறது என்பது தான்  என்று ஒரு காரணம் என்று சொல்கிறது.. ஒருவேளை லாபத்தில் இயங்கி இருந்தால் விற்காதா என்றால் இல்லை என்று சொல்லவும் முடியாது. காரணம் மோடி அரசு லாபத்தில் நடக்கும் அரசு நிறுவனங்களையும் விற்கத்தானே முயல்கிறது. பரம்பரை சொத்து ஒரு முட்டாளுக்குக் கிடைத்தால் அவனால் என்ன செய்ய முடியும் அதை வைத்து அவனால் லாபம் சம்பாதிக்க முடியுமா என்ன? அவனுக்குத் தெரிந்து எல்லாம் விற்றுத் தின்பதுதானே? அதுதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது


எந்த ஒரு தனியார் வியாபாரியும் நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தை வாங்கமாட்டான். அவன் வாங்குகின்றான் என்றால் அதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும் என்று அவனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும் பட்சத்தில்தான் வாங்குவான் அப்படி அவனுக்கு நன்றாகச் சம்பாதிக்க முடியும்  அதற்கான வழி முறைகள் தெரிந்து இருக்கலாம் ஏன் அதே வழிமுறைகள் இந்தியாவில்  மிக உயர்ந்து பிஸிசினஸ் ஸ்கூலில்  படித்த அல்லது வெளிநாட்டில் உள்ள தலை சிறந்த பிஸிசினஸ் ஸ்கூலில் படித்த ஒரு இந்தியருக்குக் கூட ஏர் இந்தியாவை லாபத்தில் இயங்க வைக்கும் வழி முறைகள் தெரியவில்லையா அல்லது அப்படித் தெரிந்து இருக்கும் ஒருவரை மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையா என்ன?


மோடி அரசு தான்  போடும் திட்டங்கள் எல்லாம் மிக வெற்றி என்று சொல்லிக் கொள்ளும் போது ஏர் இந்தியாவை  லாபத்தில் இயங்க ஒரு திட்டம் போட்டு அதைச் செயல்படுத்தி இருக்க முடியாதா என்ன?

நஷ்டத்தில் ஒடிய ரயில்வேயையே ஒன்றுமே படிக்காத  லல்லு பிரசாத் அதைக் கொஞ்சம் லாபத்தில் ஒட்டிக் காண்பிக்கவில்லையா என்ன? அதை அறிந்து அமெரிகவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் அவரை அழைத்து அவர்களது மாணாக்கர்களுக்கு கெஸ்ட் லெக்சர் கொடுக்கவில்லையா என்ன?

 இப்படிப் படிக்காத லல்லு பிரசாத் செய்து காட்டியதைப் "படித்து பட்டம் பெற்ற மோடியாலும்" அவரை சுற்றியுள்ள அறிவுச் ஜீவிகளாலும் செய்ய முடியவில்லையா என்ன?

மோடி இப்படி விற்பதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள படித்த அறிஞர்களோடு உலகில் வேறு எங்குமுள்ள திறமையான பிஸிசினஸ் மேகங்களை ஏன்  இன்று ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கிய டாடாவை கன்சல்ட்ண்டாக சேர்த்து அதை லாபத்தில் இயங்க வழிவகைகளைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தி இருக்கலாமே ?அதுமட்டுமல்ல ஏர் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் விமான சர்வீஸ் நிறுவனமாக மாற்றி உலகே பெருமை கொள்ளுமாறு ஏர் இந்தியாவை மாற்றி இருக்கலாமே அதை ஏன் மோடி முயற்சிக்கவில்லை

நாட்டை திறமையாக ஆள்பவர் என்று சொல்லிக் கொள்பவர்க்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தத் தெரியாத என்ன?


ஏர் இந்தியா நஷ்டம் அடைவதற்குக் காரணம் அங்கு வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் லாபம் அடைந்ததே மிக முக்கிய காரணங்களில் ஒன்று  என்று அடித்துச் சொல்வேன் காரணம் சென்னையில் உள்ள மிக முக்கிய ஏர் இந்தியாவின் நம்பர் ஒன் என்று சொல்லப்படும் டிராவல் ஏஜென்சியில் நான் சேல்ஸ்மெனாக பணி புரிந்த போது கண்கூடாகப் பார்த்த சம்பவங்கதான் காரணம்.. ஏர் இந்தியாவில் சேல்ஸ் & அக்கவுண்ட் துறையில் வேலை பார்த்த உயர் அதிகாரிகளிலிருந்து அந்த டிபார்ட்மெண்டுகளில் வேலை பார்த்த கடை நிலை ஊழியர்கள் வரை சம்பாத்தியத்தை விட அதிக அளவு  சொத்துக்கள் சேர்த்ததே முக்கிய காரணம், நானே என் டிராவில் ஏஜென்சி ஒனருடன் பல முறை சென்னையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்குச் சென்று  அங்குள்ள அதிகாரிகளுக்குப் பல முறை தங்க நகைகளைக் கொடுத்த அனுபவம் உண்டு இப்படி உயர் அதிகாரிகள் பெற்ற இது போலப் பல பண வருமானங்களுக்குப் பதிலாக அவர்கள் ஏர் இந்தியாவின் லாபத்தை எங்கள் நிறுவனத்திற்குப் பல வகைகளில் பகிர்ந்து அளித்தார்கள் ,இது போலப் பல டிராவல் ஏஜென்ஸிகள் செயல்பட்டு இருக்கும், நான் அந்த நிறுவனத்தில் பணி புரியும் போது செளத் இண்டியா முழுவதும் நாங்கள் விற்பனை செய்யும் அளவிற்கு விலை குறைந்த டிக்கெட்டை வேறு ஒரு சிலரைத் தவிர வேறு யாராலும் விற்க முடியாது ஏன் அப்போது மிகப் பெரிய புகழ் பெற்ற தாம்ஸ் குக் போன்ற நிறுவனங்களால் கூட எங்கள் நிறுவனப் பக்கத்திற்குக் கூட வரமுடியாது என்பதுதான் உண்மை

ஏர் இந்தியா நஷ்டம் அடைவதற்கு மற்றொரு காரணம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சிய மனப்பான்மை போன்றகளையும் மிக முக்கிய காரணமாகச் சொல்லலாம்,

மேலும் ஒன்றை இங்குச் சொல்ல விரும்புகின்றேன், என் நெருங்கிய நண்பன் அமெரிக்காவில் வசிப்பவன் என் கூட இங்கே வேலை செய்தவன் அதன் மூலம் எனக்கு நெருங்கியவனாக மாறியவன். முக்கியமான செய்தி அவன் மோடி பக்தன்,

அவன்  என்னைப் போலவே இங்கு வந்து க்ரீன்கார்ட் வாங்கி அதன் பின் முழு அமெரிக்கக் குடிமகனாகவும் மாறிவிட்டவன்.. இப்ப அதை இங்கு ஏன் சொல்கின்றேன் அமெரிக்கக் குடிமகனாக மாறிய அவன் இந்தியா செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில்தான் செல்லுகின்றான் அதுவும் ஒவ்வொரு முறையும் செல்லும் போது இலவசமாகச் செல்கின்றான். மேலும் அவன் விமானத்தில் வரும் போது அவனுக்கு விலை உயர்ந்து மதுபாட்டில்களும் ஏர் ஹோஸ்டல்கள் மூலம் கொடுக்கப்படுகின்றன.இது எப்படி சாத்தியம் என்றால் அவனது சகோதரன் ஏர் இந்தியாவில் வேலை பார்ப்பதுதான் இவ்வளவிற்கும் அவன் சகோதரர் உயர் அதிகாரி அல்ல அவராலேயே இப்படிப் பண்ண முடிகிறது என்றால் உயர் அதிகாரிகளாலும் அரசியல் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாலும் என்னவெல்லாம் பண்ண முடியும் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன்.


என்னுடைய கேள்வி இதுதான் இது போன்ற செயல்களை மோடியால் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியாதா என்ன? அப்படிச் செய்து நிர்வாகத்தில் மேலும் சில சீர் திருத்தங்கள் செய்தால் லாபம்  பெற முடியாதா என்ன?

 ஏர் இந்தியா தனியாரின் கைக்கு வந்ததில் தவறு ஒன்றுமில்லை அப்படி வந்ததினால் மக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்று சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட சிறப்பான சேவைக்குத் தகுந்த விலை நாம் கொடுக்க வேண்டும்.. எனது ஆதங்கம் எல்லாம் ஏன் அரசு நினைத்தால் அதிலும் மிகச் சர்வாதிகாரப் பவர் கொண்ட மோடியால் இதை லாபத்தில் இயங்க வைக்க முடியவில்லையா என்பதுதான்.. இந்தியாவில் அறிவாளிகள் அதிகம் இருப்பதாகப் பேசி பெருமைப் பட்டுக் கொள்ளும் போது அந்த அறிவாளிகளில் ஒருத்தர் கூட மோடி கூட கை கோர்த்து லாபத்தில் இயங்க முயற்சிக்கவில்லையா என்பதுதான் என் ஆதங்கம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நியாயமான கேள்விகள் தமிழரே...

    ReplyDelete
  2. ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் நாட்டின் மீதும் மக்கள் மீதும் ஓரளவாவது அக்கறையுள்ளவர்களாக குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவர்களால் மட்டுமே நீங்கள் நினைப்பதுபோல எண்ணிச்செயல்பட முடியும். மோடியை வைத்துக்கொண்டு நீங்கள் இப்படி எதிர்பார்ப்பது பேராசைக்கும் மேலே!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.