Tuesday, October 19, 2021


@avargal unmaigal

மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்



மற்றவர்களைப் புரிந்துகொள்வது என்பது அவர்களின் கருத்து அல்லது உணர்வுகளுடன் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களின் பார்வையை அங்கீகரித்து, அது உங்களுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதாகும்.


நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதபோது. அவர்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு உரிமை இல்லை


 உங்களுக்கு ஏற்படும் உணர்வும் தாக்கமும் மற்றவர்களுக்கு நடக்கு வரை  அவர்கள் வலியை அனுபவிக்கும் வரை அதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.



மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் போது வராத வலி தம் உணர்வுகள் காயப்படும் போது வருகிறது மேட்டர் அவ்வளவுதான்


 
@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. வலியை உணர்ந்தவன் அவற்றை பிறருக்கு ஏற்படுத்த முயல்வதில்லை...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வலியை ஏற்படுத்தியவரை அடித்தவரை மன்னித்து அப்படியே அமைதியாக செல்ல நான் மகாத்தமாவும் அல்ல புத்தனும் அல்ல. எனக்கு வலியை ஏற்படுத்தியவருக்கும் அந்த வலியை உணரவைப்பேன் அப்படி செய்யவில்லை என்றால் அவர் மற்றொருவனுக்கு அந்த வலியை ஏற்படுத்தி கொண்டிருப்பார் தனபாலன்

      Delete
    2. ஓ மதுரை இப்படிச் சிலர் சொல்வதைக் கேட்டுள்ளேன்.

      அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க மதுரை ஆனால் உணர்ந்தால் மட்டுமே சாத்தியம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு உணர்த்தினாலும் உணராதவர்கள் அல்லது உணர்ந்தாலும் அதீதமான ஈகோவினால் மேலும் மேலும் அவர்கள் செய்து கொண்டேதான் இருப்பார்கள்.

      கீதா

      Delete
  2. மதுரை முதல் படத்தில் உள்ள வரிகளும், கடைசி படத்தில் இருக்கும் வரிகளும் செம. நிச்சயமாக நமக்கு ஏற்படும் வலிகள் மற்றவர்களுக்கு ஏற்படாத வரையில் புரிந்து கொள்ள மாட்டாங்க. சரியாகப் புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கமாட்டான் அந்த வலியை. நான் அடிக்கடிச் சொல்வது இது. ஆனால் புரிந்து கொண்டும் சிலர் கொடுக்கிறார்கள் பாருங்கள் அதை என்ன சொல்ல?!!

    கீதா

    ReplyDelete
  3. கறுப்பும் சிவப்புமாக வரும் வரிகளை டிட்டோ செய்கிறேன் மதுரை.

    நல்ல பதிவு.

    கீதா

    ReplyDelete
  4. முதல் படத்தில் ஆண் சொல்வது போல் வருவது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அபூர்வம் மதுரை. ஸாரி என்ற அந்த வார்த்தை!!!

    கீதா

    ReplyDelete
  5. மதுரைத் தமிழன் பதிவின் கருத்து அம்சமான கருத்து. யாராக இருந்தாலும் மனைவியோ, கணவனோ நட்போ, மகள், மகன் உறவுகள் யாராக இருந்தாலும் நாம் மற்றவரை ஒரு வேளை அறியாமல் கூட வேதனைப்படுத்தியிருந்தால் அவர்கள் வேதனையுற்றதாகச்சொன்னால் நாம் ஸாரி சொல்வது நல்லது. அவர்கள் சொல்லாமல் நாம் உணர்ந்தாலும் உடனே மன்னிப்பு கேட்பதுநல்ல விஷயம். நல்ல குணம்.

    மற்றவர்கள் நமக்கு வலி ஏற்படுத்தினால் நாம் சொல்லிப் பார்க்கலாம். அவர்கள் உணரவில்லை என்றால் சற்று விலகி இருப்பதே நல்லதோ என்றும் தோன்றும்.

    துளசிதரன்

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு. முதல் படம் நன்று.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.