Sunday, October 10, 2021

 

@avargal unmaigal

யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஒரு மதச்சார்புள்ள நிறுவனம் அல்ல என்பது அங்குள்ள மெத்தப் படித்த மேதாவிக்கு தெரியுமா?

யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஒரு பொது நிறுவனம் அது எல்லா மக்களுக்கும் சேவை செய்ய உள்ள ஒரு மதச்சார்பற்ற நிறுவனமே தவிர ஒரு மதச்சார்புள்ள நிறுவனம் அல்ல.. இது எனக்கு மட்டுமல்ல படிக்காதவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். அப்படி இருக்க ஒரு மெத்தப் படித்த சங்கி அந்த வங்கியின் ஜெனரல் மேனேஜராக வந்ததும் தன் சங்கி புத்தியை  இந்த நவராத்திரி காலத்தில் காண்பித்து இருக்கின்றான்.


அவனது புத்தியில் வெளிப்பட்டதுதான் இந்த அறிக்கை . அதில்  நவராத்திரியை முன்னிட்டு இந்த  இந்த நாட்களில் இந்த இந்த  கலர்களில்தான்  உடைகள் அணிந்து வர வேண்டும் என்றும் அப்படித் தவறினால் ரூபாய் 200 அபராதம் எனவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

@avargal unmaigal



அந்த அதிகாரி சங்கி என்பதற்கு ஒரு உதாரணம் ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த கலர் வண்ணத்தில் உடை அணிந்து வரவேண்டும் என்பதுதான் ஹைலைட் காரணம் ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் மூடி இருக்கும் என்பதை அறியாத சங்கியாகத்தான் அவர் இருக்கிறார். ஒருவேளை விடுமுறை நாளிலும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றுதான் சொல்லுகிறாரா அப்படி வந்தால் சம்பளம் கிடைக்குமா? அல்லது வராவிட்டால் அபராதம் செலுத்தனுமா? சங்கியின் ஒரு சிறிய அறிக்கையிலே இவ்வளவு குளறுபடி...

வங்கிகளில் அத்தனை யூனியன்கள் இருந்தும் இந்த மாதிரியான அராஜகமான சுற்றறிக்கைக்கு எதிராக என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை. எம பி வெங்கடேஷன் இதனைக் கண்டித்து ட்வீட் செய்ததைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.


ஆனால் அறிக்கை திரும்பப் பெற்றுவிட்டார்கள் என்பதால் அமைதியாகச் சென்றுவிடாமல் அந்த அதிகாரியைப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்து தூக்கி ஏறியும் வரை போராட வேண்டும்


நல்ல வேளை இது போன்ற பொது நிறுவனங்களில் ஜெனரல் மேனேஜர் ஒரு இஸ்லாமியராக இருந்து அவர் ரமலான் மாதத்தில் எல்லோரும் கட்டாயம் நோன்பு இருக்க வேண்டும் யாரும் அலுவலகத்திற்கு உணவுகள் எடுத்து வரக் கூடாது அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருந்தால் இந்த நவராத்திரி அறிக்கைக்கு அமைதி காத்து இருக்கும் மக்கள் அப்போதும் அமைதி காத்துத்தான் இருப்பார்களா என்ன?


சங்கிகளே உங்கள் கொட்டங்கள் அடங்கட்டும் இல்லையென்றால் நீங்களும் ஒரு நாள் நிச்சயம் அடக்கப்படுவீர்கள் இப்போது மோடி இருப்பதினால் ஆட்டம் கொள்ள வேண்டாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் புகழ் பெற்ற பல தலைவர்கள் எல்லாம் பலரும் பல காரணங்களினால்  சுட்டுக் கொல்லப்பட்டு மரணித்துப் போனார்கள் சிலர் விபத்தில் இறந்து போனார்கள் சிலர் மர்மாக இறந்து போனார்கள்.. அப்படி இருக்க மோடி மட்டும் சாவா வரம் வாங்கி வந்தர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள் அவருக்கு அதிகாரம் இருக்கும் வரையில் நீங்கள் ஆட்டம் போடலாம் ஆனால் அவை இல்லாமல் போனால் அவர் மட்டுமல்ல நீங்களும் பாதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்.. அது சொல்லித் தரும் பாடங்கள் அனுபவங்கள் அதிகம் அதிகம்



இங்கே ஒரு சங்கி அதிகாரி தனக்கு இருக்கும் அதிகாரத்தை தன் மதம் சார்ந்து மொத்த ஊழியர்கள் மீது திணித்து அவர்களின் சுய ஆடையுரிமையில் தலையிட்டு  இருக்கிறார். இதைப்  பார்த்தும் நீதிமன்றங்கள் கைக்கட்டி வாய் பொத்திதான் நிற்குமா அல்லது வாய் திறந்து கண்டிக்குமா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.