Sunday, October 17, 2021

@avargal unmaigal

 வேலைக்கு வந்தோமா வேலையைப்  பார்த்தோமா  என்று இருக்க விடமாட்டேங்கிறார்கள்

நேற்று  ஒரு அமெரிக்கரிடம் பேசினேன்.. அவருக்கு  ஏழு குழந்தைகளாம் 25 வருடக் கல்யாணம்  வாழ்க்கையாம் கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த மனைவியை விவாகரத்து செய்து விட்டு இப்போது வேறு ஒருவனுக்கு மனைவியாகி இரண்டாவது வருடத் திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினாராம்.

இன்னொருத்தர் இந்தியர் என் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அவருக்கும் கல்யாணம் ஆகி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அவருக்கு ஒரு பையன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இப்போது வேலையில் சேர்ந்து இருக்கின்றான். இந்த இந்தியர் பழைய நிறுவனத்தில் இருந்து வேலையைவிட்டு என் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தர்க்கு காரணம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று இருக்கிறார் அவர் ஹெச்.ஆரில்ரிப்போர்ட் பண்ண அங்கு இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படு இருக்கிறார்


முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் கூட வேலை பார்த்த அமெரிக்கர் அவருக்குக் கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டு இருந்தன. அதன் பின் அவர் மனைவியின் நெருக்கமான தோழியிடம் மனதைப் பறிக் கொடுத்து அதன் பின் முதலாம் மனைவியை விவாகரத்து பண்ணிவிட்டு மனைவியின் தோழியை மணந்து இருக்கிறார். இந்த மனைவிக்கு உற்ற தோழி அவரின் முதல் மனைவி என்பதால் அவருக்கு மீண்டும் சீட் பண்ண வாய்ப்பு இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இப்படியும் மனிதர்கள்!! என்ன மனிதர்களோ?

    துளசிதரன்

    ReplyDelete
  2. ஹா ஹா..

    எப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி என்று தோன்றுகிறது

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.