Saturday, May 4, 2019

@avargalUnmaigal
மறக்காமல் வாங்கி சாப்பிட சிறந்த ஊட்டச்சத்து உள்ள  8 சூப்பர் உணவு பொருட்கள்


Superfoods !! பெயர் குறிப்பிடுவது போல, அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவைகளால் நிறைந்துள்ளன, அவை நமது உடலை கடுமையான மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. நம்முடைய  உடல்  வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் உயிர்வாழ்வையும் நாம்  மேம்படுத்தலாம்,அதுமட்டுமல்ல  வாழ்க்கையில்  உண்மையான சூப்பர் ஹீரோவாகவும் உணரலாம்.


அப்படியானால், இந்த சூப்பர்ஃபுட்ஸ் எங்கிருந்து கிடைக்கும்?" என்று நீங்கள் கேட்கலாம்.  அதற்காக இதை தேடி காடு மலை ஏறி எல்லாம் அலைய வேண்டாம் .. இது  நீங்கள் வழக்கமாக செல்லும் உள்ளூர் சூப்பர்மார்க்கெட்டில் பெரும்பாலான சூப்பர் ஃபுட்ஸை காணலாம்.

இங்கே சில சூப்பர் ஃபுட்களின் பட்டியலும், அவை சூப்பர் என்பதற்கான காரணங்களும்:


    அவோகாடோஸ்:  இதில் ஆரோக்கியமான கொழுப்புக்களை  உள்ளடக்கி இருக்கிறது, இவை திசு மற்றும் இரத்த மீளுருவாக்கம்( tissue and blood regeneration) மற்றும் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகின்றன. இது நீரிழிவு மற்றும் இதய நோய் எதிராக போராட உதவ முடியும், மற்றும் புற்றுநோய் ஆபத்து குறைக்கிறது.


    ஆப்பிள்கள்:  சுத்தமான மிகவும் தரமான ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் டாக்டரை தேடி செல்ல வேண்டாம் என்பதும் மிக உண்மை . ஆப்பிளில் antioxidants  ஆன்டி ஆக்ஸிடன் மிகவும் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள நல்ல செல்களை சேதப்படாமல் பாதுகாக்கிறது . ஆப்பிளை தோலுடன் உண்ணுவது மிக அவசியம்

    பாதாம்: அவை அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகளால் நிரம்பியுள்ளன, இதை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட் ரால் குறைந்து   இதய நோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது  .   இதை சாப்பிடுவதால் உண்ட திருப்தி ஏற்படுவதால் அதிகம் சாப்பிடாமல் நம் உடல் எடை குறைக்க உதவுகிறது 


    புளுபெர்ரி: மூளை செயல்பாடு, கண்பார்வை மற்றும் மோட்டார் ஒருங்கிணைப்பு motor coordination ஆகியவற்றை மேம்படுத்தும் சக்திகளைக் கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அனைத்து நாள்பட்ட நோய்களோடு தொடர்புடைய வீக்கத்தை குறைப்பதற்கான  உணவாகவும் இது பயன்படுகிறது

    முட்டைக்கோசு: முட்டைக்கோஸில் compounds இருப்பதால், பெருங்குடல் புற்றுநோய் colon cancerஆபத்தை குறைத்துவிடும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உங்கள் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை 66% வரை குறைக்கலாம்.


    முட்டை: அவை அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும் உயர்தர புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும்.

    மீன்: சால்மன் போன்ற மீன், மத்தி, மற்றும் ஹெர்ரிங் இதய நோய், கீல்வாதம், புற்றுநோய், மற்றும் நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது. சில ஆய்வுகள் கொழுப்பு மீன் உண்ணும் உங்கள் மனநிலை மற்றும் மன அழுத்தம் எதிராக போராட முடியும் என்று சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் ஒரு வாரம் குறைந்தபட்சம் 2 மீன் உணவைப் பரிந்துரைக்கிறது.


    சிவப்பு ஒயின்: சிவப்பு ஒயின் உங்கள் இதயத்திற்கு நல்லது .இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்  உள்ளது. இது  நல்லகொலஸ்டிரா அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.  தினமும் ஒரு முறை ஒரு சிறிய  க்ளாஸ் அளவு குடிக்கலாம்

உங்களின் அடுத்த  சூப்பர்மார்க்கெட் ட்ரிப்பின் போது, இந்த ருசியான சூப்பர் ஃபூட்களை உங்கள் பைகளில் நிரப்ப மறக்க வேண்டாம் . உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கான மாற்றத்திற்கு இது அவர்கள் ஒரு  பெரிய தொடக்க புள்ளியாக இருக்க முடியும்!


இது வாட்ஸப்பில் வந்த தகவல் அல்ல அமெரிக்காவில் உள்ள சர்ஜிக்கல் மருத்துவமனையின் இணையதளத்தில் வந்த தகவல்களின் தமிழாக்கம்தான் இது 


ஆங்கிலத்தில் வந்தவையும் இங்கே உங்கள் பார்வைக்காக பதிந்து இருக்கிறேன், படியுங்கள்  இந்த பதிவு பயனுள்ளவையாக இருப்பதாக கருத்தினால் மற்றவ
ர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்

The Best Nutrition Is In These 8 Superfoods


Superfoods!! As the name suggests, they are packed with healthy nutrients, vitamins, and minerals that fortify your body against deadly heart attacks, cancer, diabetes, obesity, and stroke. They also improve your strength, stamina, and vitality making you feel like a real-life superhero. “So, where can you find these superfoods?” you might ask. Not surprisingly, most superfoods can be found at your local supermarket. Here is a list of some superfoods and the reasons why they are super:

    Avocados: They contain healthy fats which aid in tissue and blood regeneration and stabilize blood sugar. This can help fight against diabetes and heart disease, and reduces the risk of cancer.
    Apples: It is true what they say – an apple a day keeps the doctor away. Apples are loaded with powerful antioxidants which protect against cell damage. Make sure you eat the skin as well for added protection.
    Almonds: They are loaded with lots of fiber and good fats which lower cholesterol resulting in reduced risk of heart disease. They also help you lose weight by creating a sense of fullness that prevents overeating.
    Blueberries: They have been credited with antiaging powers that include improving brain function, eyesight, and motor coordination. These effects are brought about due to their ability to reduce inflammation which is linked to almost all chronic diseases.
    Cabbage: Cabbage contains compounds that dramatically reduce the risk of colon cancer. Eating cabbage at least twice a week can reduce your colon cancer risk by as much as 66%. How’s that for a superpower?
    Eggs: They are an excellent source of high quality protein containing all the essential amino acids and other important nutrients. They also help to conserve and build up your muscle mass.
    Fish: Fish such as salmon, sardines, and herring reduce the risk of heart disease, arthritis, cancer, and diabetes. Some studies have indicated that eating fatty fish can even alleviate your mood and fight against depression. The American Heart Association recommends having at least 2 fish meals a week.
    Red Wine: Red wine contains powerful antioxidants which are good for your heart. It has also been noted to improve the levels of good cholesterol. Moderation is important to ensure health benefits. Stick to one drink a day.

On your next visit to the supermarket, be sure to load your cart with these delicious superfoods. They can be a great starting point for the transformation to a healthier and happier lifestyle!

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. இந்த லிஸ்டில் உடனடியாக சாப்பிட விரும்புவது பளு பெரீஸ்தான்...
    இங்கே இருக்கும் ...
    அருமையான தகவல் மச்சான்.

    ReplyDelete
    Replies
    1. புளு பெர்ரி நிறைய சாப்பிடுங்க ஞாபகசதியும் கூடும் என் ஞாபகமும் வரும் உங்களுக்கு மாப்பிள்ளை

      Delete
  2. ஆஆஆஆ ட்றுத் எப்போ அரசியலை விட்டு வெளியே வந்தார்ர்:)....

    அருமையான தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அரசியலா அப்படின்னா என்ன?

      Delete
  3. 80 , 90 வயசு வாழ்ந்த , வாழுற பெருசுகல்லாம் அவகேட்டா,ஆப்பீளு, புளூ பெர்ரி,பாதாமு சாப்டு செவப்பு ஒயின் எல்லாம் குடிச்சிருக்கும் போல.
    நமக்கெல்லாம் இந்த க்ரீன் டீ யே பெரிய விசயம்

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சாப்பிடாதினால்தான் இப்ப பல இளம் வயதினர் (25 30 40 ) பொட்டுன்னு சிறிய குழந்தைகளையும் மனைவியையும் தவிக்க விட்டு போகின்றனர் ப்ரோட்டா சாப்பிட்டா இப்படித்தான் போவாங்க

      Delete
  4. பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  5. இது அவர்கள் உண்மைகள் பதிவுதானா

    ReplyDelete
    Replies
    1. இது அ..உ பதிவுதான் மனைவிக்கு நடந்த சர்ஜரி சம்பந்தமாக ஹாஸ்பிடல் இணையதளத்திற்கு சென்ற போது அவர்கள் ஆங்கிலத்தில் பதிந்து இருந்த பதிவை பார்த்து இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதினால் அதை தமிழில் பதிந்து இருக்கிறேன் அவ்வளவுதான் சாரே

      Delete
  6. நல்ல இன்ஃபொர்மேஷன் மதுரை தமிழன்.

    துளசி, கீதா

    கீதா: இங்கு ப்ளூ பெரி மற்றும் இதர பெர்ரி வகைகள் நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் மற்றும் பெரிய சூப்பர் மார்க்கெடுகளில் கிடைக்கிறது. சன் ட்ரைட் என்று. பழமாக என்றால் ஸ்டரா பெர்ரி ப்ளூபெரியும் கிடைக்கிறது ஆனால் ஸ்ட்ரா பெர்ரி நம்ம விலைக்கு வந்துரும் ஆனால் மற்ற பெரிகள் விலை கூடுதல். மகனும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறான்...ப்ளூபெர்ரி, க்ரான்பெர்ரி சாப்பிடு என்று..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.