Friday, December 16, 2011

பிரபல பதிவாளரின் வலைத்தளம் அல்ல ஆனாலும் அதிக ஹிட்டுக்களை பெற்று அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு சாதாரணமான பதிவாளரின்  வலைத்தளம் எது????



பெருமளவு வாசகர்களின் ஆதரவையும், பதிவாளார்களின் ஆதரவையும் கொண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் வலைத்தளம் அவர்கள்...உண்மைகள். இந்த வளைத்தளத்தில் எந்தவித காப்பி பேஸ்ட் பதிவுகளும் வெளிவருவதில்லை என்பது மட்டுமல்லாமல் எந்த வித குருப்புகளுடன் சேர்ந்து தனிப்பட்ட யாரையும் அல்லது எந்த வலைதளத்தையும் தாக்கியது இல்லை.



ஆரம்பித்த நாள் முதல்(ஜூலை 15 2010) இன்று வரை (டிசம்பர் 16 2011)  2,00,448 ஹிட்டுகளையும், 216 ஃப்லோவர்களையும் இண்டலியில் 102 ஃப்லோவர்களையும் மேலும் கூகுல் ப்ளஸிலும் பேஸ் புக்கிலும் ஃப்லோவர்களாக வந்ததுமட்டுமல்லாமல் மிக சிறந்த  ஆதரவு கொடுத்து என்னை தமிழ் தெரிஞ்ச அன்பு நெஞ்சங்கள்  இந்த வளைத்தளத்தை வளர்த்து வருகின்றன.

அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.



இப்படி உங்கள் ஆதரவால் வளர்ந்து வரும் இந்த வலைதளம் தீடீரென ஒரு வலைத்திரட்டியின் மூலம் ஒதுக்கிவைக்கபட்டு அந்த தளத்தின் அட்மின் பிரிவுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்து அதன் பின் மீண்டும் அந்த வலைத்திரட்டியில் எனது பதிவுகள் மீண்டும் வெளி  ஆரம்பித்தன. புரிந்து உணர்வு கொண்ட அந்த வலைத்தளத்திற்கு எனது நன்றியை மீண்டும் இங்கே தெரிவிக்கிறேன்..



உங்கள் ஆதரவால் வளர்ந்து வரும் இந்த வலைத்தளத்தின் மீது பொறாமை கொண்டு கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளார்கள். அதை மீண்டும் மீண்டும் ரெகவரி செய்து பதிவுகள் போட்டு கொண்டுருக்கிறேன். இந்த ஹேக்கரகள் வேறு யாரும் அல்ல அவர்கள் நம் தமிழர்கள்தான். நல்ல எண்ணம் கொண்ட இந்த தமிழர்கள் வாழ வாழ்த்துகிறேன்.



இந்த வலைதளம் ஒரு பொழுது போக்குகாக ஆரம்பித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்து மகிழ்வுற நடத்தப்படுகிறது. இது பணம் சம்பாதிக்க ஆரம்பித்து நடத்தப்படுவது அல்ல.



அதனால் ஹேக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் இதன் மூலம் தெரிவிப்பது என்ன வென்றால் நீங்கள் உண்மையில் மிக திறமையானவர்கள் என்றால் லாப நோக்கில் செயல்பட்டு பொய் செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி ஊடங்களில் போய் உங்கள் திறமையை காண்பியுங்கள் என்பதுதான். மேலும் நான் போடும் பதிவுகளுக்கு உங்களுக்கு மாற்று கருத்துக்கள் ஏதும் இருந்தால் அதை நாகரிகமான மூறையில் பின்னூட்டமாக போட்டால் அதை நான் வெளியிடுவேன். அநாகரிக குறைவும் ,முதல் வடை போன்ற பின்னுட்டங்கள் எனது வலைதளத்தில் வெளிவராது என்பதை நான் இங்கு பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.



நான் போடும் பதிவுகளில் எனது கருத்துக்கள் இறுதியானது அல்ல . நான் என் அறிவுக்கு எட்டியமட்டில் எனக்கு தெரிந்ததை எனக்கு தெரிந்த தமிழில் தருகிறேன். அதனால்தான் மாற்று கருத்து இருந்தால் சுட்டிகாட்ட சொல்லுகிறேன். நான் மிக சாதாரணமான எளிமையான அனைவரையும் நேசித்து வரும் ஒரு மதுரைத்தமிழன் அவ்வளவுதான்.



நான் இங்கு வருவது எழுதுவது என்பது யாரையும் காயப்படுத்தவோ அல்லது வாக்கு வாதத்தில் ஈடுபடவோ அல்லது சண்டை  போடவோ அல்ல அதே நேரத்தில் அப்படி பண்ணிதான் நான் ஒரு பெரியவன் ஒரு புத்திசாலி என்று காட்டிகொள்ளவோ அல்ல என்பதை இதை படிக்கும் அனைவருக்கும் சுட்டிக் காட்ட கொள்ள விரும்புகிறேன்.



எனக்கு தெரிஞ்சு இந்த வலைத்தளத்தின் மூலம் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியுள்ளேன் என்றால் அவர் ஒருத்தர்தான் அவர் எனக்கு மட்டுமல்லாமல் எல்லோரின் அன்புக்கும் பாத்திரமான அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் தான்.அதை நான் எழுதிய காரணம்  அந்த நல்ல மனிதர் ஒரு தலைவராக வந்து நம் தமிழகத்தை சிறிது நாளாவது ஆண்டு ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டை ஒரு சிறந்த நாடாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதை தவிர அவரின் மேல் எனக்கு எந்தவித தனிப்பட்ட காழ்புணர்ச்சியும் இல்லை என்பதுதான் உண்மை.



அவர் ஒரு நடிகர் அவ்வளவுதான் அவர் எதுக்கு தலைவராக வந்து நாட்டை ஆள வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அவர் ஏன் தலைவராக வரக்கூடாது என்பதற்கு காரணம் ஏதும் இருக்கிறதா? அப்படி சொல்லுபவர்கள் அவரைவிட ஒரு நல்ல அரசியல் தலைவர் யார் என்பதை சொல்லுங்களேன்?( வைகோவைத்தவிர)





ஏதோ என் மனதில் தோன்றியதை உங்களிடம் மனம் திறந்து கொட்டியுள்ளேன். இதை புரிந்து தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் புரியாதவர்கள் யாரும் இருந்தால் பின்னுட்டமாக உங்கள் மனதில் ஏதும் இருந்தால் வெளிப்படுத்தவும் எனது அறிவுக்கு எட்டியமட்டில் விளக்கம் தர முயல்கிறேன்.





வாழ்க வளமுடன்

அன்புடன்

எல்லோரும் இன்புற்று வாழ நினைக்கும் ஒரு உண்மை மதுரைத்தமிழன்




டிஸ்கி : எந்த விதமான ஒட்டுகள் இன்றி அதிகமான ஹிட் பெரும் வலைத்தளமான எனது வலைத்தளத்திற்கு எனக்கு நானே கொடுத்து கொள்ளும் அவார்டுதான் மேலே உள்ள அவார்டு. நான் மற்றவர்களிடம் இருந்து எதும் எதிர்பார்ப்பதில்லை.
16 Dec 2011

6 comments:

  1. சுய அலசல் நல்லா சொல்லி இருக்கீங்க நீங்களே உங்களுக்கு அவார்டும் கொடுதுகிட்டீங்களா சூப்பர்

    ReplyDelete
  2. பொய்யான பிற பலங்கள்
    திறமையானவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும்
    நிச்சயம் தேவையில்லை
    குறுக்கு வழியில் புகழ் பெற நினைப்போருக்கே
    அது அவசியத் தேவை
    தொடர்ந்து வருகிறோம்
    சிறந்த பதிவுகளை தொடர்ந்து தர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தன்னம்பிக்கையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  4. நான் இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மென் மேலும் எழுத வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நாமே ராஜா
    நம்க்கே விருது
    வாழ்த்துகள்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.