Thursday, December 1, 2011


அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் மிகவும் உதவகூடிய தகவல்கள்



நீங்கள் அமெரிக்கா வருவதற்கு முன்பு இன்ஸ்பெக்.ஷன் ப்ராஸாஸ் ( US Entry Inspection Process ) பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் முதலில் மிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதுதான். நீங்கள் அமெரிக்கா வருவதற்கு யூ.எஸ் தூதரகத்தில் விசா பெற்றுவிட்டால் மட்டும் அமெரிக்காவிற்குள் வந்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விசா மட்டும் உத்திரவாதம் அல்ல. அமெரிக்காவிற்குள் நுழைய விசாவுடன் CBP என்ற அழைக்கபடும் (Customs and Border Protection ) என்ற டிபார்ட்மெண்டின் அனுமதி கிடைக்க வேண்டும் அப்போதுதான் அமெரிக்காவிற்குள் நுழைய முடியும்.அதுமட்டுமல்லாமல் விசாவில் கொடுத்த கால அளவிற்கும் குறைவாக அனுமதி அளிக்கும் அதிகாரம் இந்த துறைக்கு உண்டு. இந்த துறையை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இதற்கு தற்போதைய உதாரணம் நடிகர் சீமான் அவர்களை விமானநிலையத்தில் திருப்பி அனுப்பிய சம்பவம். அதுமட்டுமல்லாமல் இங்கு வந்து தங்கி நீண்டகாலம் வேலைபார்க்கும் தங்கள் வயதான பெற்றோர்களை அழைக்கும் போது சிலநேரங்களில் சீமானை போன்றே ஏர்போர்ர்டில் வைத்தே திரும்பி அனுப்பபடும் நிகழ்ச்சிகளும், சில நேரங்களில் அடிக்கடி வரும் பெற்றோர்களுக்கு சில நேரங்களில் அவர்களுக்கான அனுமதியின் கால அளவை மிக குறைத்து அனுமதி அளிக்கும் அநேக சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஏன் என் குடும்பத்திலேயே இது நிகழ்ந்துள்ளன. அடிக்கடி வரும் என் மாமனார்&மாமியார் கடந்த தடவை வரும் போது என் பேச்சை(அறிவுரையை) கேட்டகாமல்  டாக்டருக்கு மெத்த படித்த அவர்களது இளைய மகளின் பேச்சை கேட்டு வந்து போது அவர்களின் கால அளவை குறைத்து திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர்களூக்கு உடல் நலம் சிறிது குறைந்து இருந்த காரணத்தினால் மட்டும் அப்படி அனுமதித்தார்கள் இல்லையென்றால் அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பி இருப்பாரகள் என்பது இப்போது அவர்கள் அறிந்த உண்மை.





இப்போது மேலும் சில US Entry Inspection Process பற்றி தெரிந்து கொள்வோம் :



விமான நிலையத்தில் நீங்கள் வந்தி இறங்கியதும் அமெரிக்க கவர்மெண்ட் ஆபிஸாரால் நான்கு வித பரிசோதனைக்கு உட்படுத்த படுவீர்கள் அவையாவன ஃப்ளிக் ஹெல்த், இமிகிரேஷன்,கஸ்டம்ஸ், அக்ரிகல்ஷர் இந்த எல்லாவித பரிசோதனைகளும் ஒரே ஆபிஸாரால் வழக்கமாக பரி சோதிக்கப்படும் ஆனால் சில நேரங்களில் நீங்கள் தனித்தனியான ஆபிஸராலும் பரிசோதிக்கபடுவீர்கள். இதை பற்றி மேலும் விபரமாக பின் வரும் பதிவுகளில் காண்போம்.



விமானம் & நிலையத்தில் :



நீங்கள் விமானத்தில் வரும் போது விமான நிலையத்தை நெருங்கும் போது விமான பணிப் பெண் உங்களிடம் (all non-United States citizen ) ஒரு விண்ணப்ப படிவத்தை தருவார்கள் (either Form I-94 (white), Arrival/Departure Record, or Form I-94W (green), Nonimmigrant Visa Waiver Arrival/Departure Form ) அதை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு உதவி வேண்டுமென்றால் விமான பணிப் பெண்ணிடம் வெட்கபடாமல் கேட்கலாம்.

இதற்கான மாதிரிபடிவத்தை இணைத்துள்ளேன் ஒரு வேளை அது தெளிவாக தெரியவில்லை என்றால் அதற்கான லிங்கை இதனுடன் இணைத்துள்ளேன். அந்த மாதிரி படிவத்தில் உள்ள கேளிவிகளுக்கான பதிலை உங்கல் வீட்டிலேயே பூர்த்தி செய்து விமானத்தில் அந்த விண்ணப்பததை பூர்த்தி செய்யும் போது சில பதிவளார்கள் செய்வது போல காப்பி பேஸ்ட் செய்து கொள்ளவும்.. ஆங்கிலத்தில் பேச கூச்ச்சப்பட்டு உதவி கேட்கமால் இருக்கும் வயதானவர்களுக்கு இது உதவும் என்று நம்ப்புகிறேன்




விமானத்தை விட்டு இறங்கியதும்  அதற்கான வரிசையில் நிற்கவும் வரிசை சிறிதாக இருந்தால் அதில் நிற்காதீர்கள் பெரும்பாலும் அது அமெரிக்கன் சிட்டிசனுக்கான வரிசை அது. மற்றவர்களுக்கான க்யூ எப்போதும் மிக நீளமாக இருக்கும்.

அமெரிக்கன் சிட்டிசங்களிடம் அவர்கள் பாஸ்போர்ட் அல்லது க்ரின் கார்டை பரிசோதித்துவிட்டு வெல்கம் பேக் என்று சொல்லி அனுமதி தருவார்கள் மற்றவர்களிடம் அவர்கள் திருப்திபடும் அளவுக்கான கேள்விகள் கேட்டு அனுமதி அளிப்பார்கள். அவர்களின் மனைவியோ அல்லது கேர்ல் ஃப்ரெண்டோ ஏதாவது அவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கி இருந்தால் அந்த விளைவுகள் இந்த பரிசோதனையில் நன்கு தெரியும். இந்த என்கொயரி 2 நிமிடங்களில் முடிந்துவிடும்.



அதன் பிறகு உங்கள் அனுமதிக்கான கால அளவை இந்த விண்ணப்பத்தில் பதித்து அதில் ஒரு பகுதியை உங்கள் பாஸ்போர்ர்டில் இணைத்து கொடுத்துவிடுவார்கள். ( This I-94 Form, not your visa, indicates how long you may stay in the U.S ) அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது ஓன்றுதான் அந்த சிறு கார்டை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியதுதான்.  அமெரிக்காவிட்டு திரும்பும் போது இது மிக அவசியம்.





மேலும் பலவித   தகவல்களுக்கு கிழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்

Entry Process



US Visa Forms, Wait Times, and Status






Nearest US Consulate


 Green Card Holders (Permanent Residents, Immigrants)




http://www.foreignborn.com/visas_imm/entering_us/1entering_us.htm


8 comments:

  1. அடடடா அமெரிக்கா போவதி கேன்சல் செய்யப்போறேன், இம்புட்டு சோதனையா, வேதனையா ஹி ஹி...!!!

    ReplyDelete
  2. பல அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. தேவைப்படுவோருக்குப் பயன்படும் பதிவு.

    ReplyDelete
  4. very good for new entries to USA.... thanks to share.... www.rishvan.com

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்ச நாள்தான் பொருத்துக்குங்க. இந்த அமெரிக்காகாரனே இந்தியா கால்ல விழும் நாம் ரொம்ப தூரத்தில்லில்லை
    AZIFAIR-SIRKALI.BLOG

    ReplyDelete
  6. அடேங்கப்பா... இம்புட்டு விஷயம் அமெரிக்க விஜயத்துக்குப் பின்னால இருக்கா? எனக்கு அங்க வர்ற உத்தேசமில்லை. ஆனாலும் அந்த எண்ணம் உள்ளவர்களுக்கு மிகமிகப் பயன்படும் தகவல்களை வழங்கிட்டிருக்கீங்க. தொடருங்கள்...!

    ReplyDelete
  7. ஐ - 94 கார்ட் அமெரிக்கா விட்டு திரும்பும்போது அவசியம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த நடைமுறை மாறிவிட்டது. இப்போது போர்டிங் கவுண்டரில் இருப்பவர்கள் ஐ-94 கார்ட்டை கேட்பதில்லை. உங்கள் பாஸ்போர்ட் ஸ்வைப்பிலேயே அந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்கின்றனர். ஆனால் திரும்பும்வரை பத்திரமாக வைத்திருப்பது நலம். காரனம் வெளியில் காவல்துறை அல்லது பிற ஏஜென்சியினர் உங்களை சோதிக்கும் நிலை ஏற்பட்டால் எத்தனை நாள் தங்க அனுமதிக்கபட்டு உள்ளீர்கள் என்பதை அதை வைத்தே அறிவார்கள்.

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி. முன்பு ஒரு காலத்தில் I94 மிக அவசியம் இப்போது மாறிவிட்டது என்பது எனக்கு தெரியவில்லை. நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.