உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 13, 2015

தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்avargal unmaigal
தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்.


சிம்பு & அனிரூத் வெளியிட்ட பீப் சாங் என்ற பாடல் ஆபசத்தின் உச்சத்தை தொட்டு இருக்கிறது. இது வரை இலைமறையாக பாடல்கள் பாடப்பட்டு வந்து இருக்கிறது அதை உடைத்து இருக்கிறார்கள் இந்த இழிபிறவிகள்.


இந்த இழிபிறவிகளை கண்டித்து உலகமெங்கும் உள்ள தமிழகர்கள் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஒரு பெண்ணாக இருந்தும் இதை கண்டித்து நடவடிக்கை எடுக்கவில்லை அது மட்டுமல்லாமல் தமிழக தலைவர்களும் கண்டிக்கவில்லை என்பது மிக வருத்ததைதான் தருகிறது/ எதெற்கெல்லாம் கண்டித்து அறிக்கை விடுபவர்களுக்கு இதை கண்டிக்க மனம்வில்லை போல இருக்கிறது.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் கூட இதனை கண்டித்து ஒரு சிறு அறிக்கைகூடவிடவில்லை . இவர்களுக்கு எதற்கு சங்கம். இவர்கள் தங்கள் சங்கத்தை வெட்கம் கெட்ட  தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மாற்றி வைத்து கொள்ள வேண்டியதுதானே


avargal unmaigal

மானமுள்ள தமிழ்மக்கள் இந்த இருவரின்  படங்களை மட்டுமல்ல  குடும்பத்தையும் ஊரில் இருந்தே ஒதுக்கிவைக்க வேண்டியதுதானே......அவர்கள் வீட்டிற்கு செல்லும் தண்ணிர் மின்சாரம் கழிவு நீர் போன்றவற்ரை தடை செய்யலாமே.... அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்கள் செயல்படாமல் முடக்க வேண்டியதுதானே.. இதை செய்ய உங்களால் முடியவில்லை என்றால் மயிருக்கு நீங்கள் பதிவு எழுதி கண்டனம் தெரிவிக்கின்றீரகள் .

இன்னும் எதற்கு பொறுமையாக இருக்கின்றீர்கள்...செயல்படுங்கள் தமிழனின் மானம் மரியாதையும் பெண்மையும் காப்பாற்றுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி :சிம்பு காதலர்தினத்தன்று தன் அம்மா அப்பாவின் காதலுக்கு டெடிகேட் பண்ணுவதற்காக வைத்திருந்த பாடலை அனிரூத் திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு இருக்கிறராம்.

பெண்களை மிக அவமானப்படுத்தியுள்ள சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்தனர்.

இந்நிலையில் சமூக வலை தளங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், முறையாக விசாரணை நடக்கும் என்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.

20 comments :

 1. தமிழா...
  வளர்ப்பு அப்படி.. என்னத்த சொல்ல..
  TR அவர்கள் திரையில் தான் அம்மா - தங்கை -பெண்கள் பாசத்தை காட்டி இருகின்றார். இல்லத்தில் இதில் எதையுமே சொல்லி கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமே.
  தென் இந்திய சங்கம் கண்டனம் தெரிவித்தால், விஷால் ரெட்டி சிம்பு என்னும் தமிழனை என்ன பாடு படுத்துகின்றார் என்று நாயுடு குடும்பத்தில் இருந்து கிளன்பி விடுவார்கள். அதனால் தான் கண்டனம் இல்லை.

  ReplyDelete
 2. அந்தப் பாடலைக் கேட்க இஷ்டப்படவில்லை. மனதில் உள்ளதுதான் இவர்களுக்கு வெளியே வந்திருக்கும். அதற்கேற்ற பலனையும் பெற்றுத்தரும்.

  ReplyDelete
 3. இந்தச் சொம்பு ஏற்கெனவே பல இளம் நடிகைகளைக் காதலிப்பதாக விளம்பரம் செய்துகொண்டதை ரகசியமாக ரசித்தனர் இவனது ரசிகக் குஞ்சுகள். இவனது “வெட்ரா அவள” எனும் ஆண்திமிர் கொண்ட பாடலையும் வௌக்கமாத்தால் போடாம ரசித்தனர். அது இப்ப ஓவராட்டம் ஆடுது. ஆனால் இந்த முறை சமூக வலைத்தளங்கள் அனைத்தும் பொங்கியிருக்கின்றன - நான் உட்பட ஏராளமான பதிவுகளில் இந்த நாய்களைக் குதறியிருக்கிறார்கள். பல்வேறு சமூக இயக்கங்களும் களமிறங்கியிருக்கின்றன. இம்முறை விழும் அடியில், இவர்களின் அடிமுடியே ஆடப் போகிறது! எப்போதும் ஜாலியாக எழுதும் மதுரைத் தமிழனே ஆவேசப் பதிவில் இறங்கிவிட்டார் என்றால் நாட்டு நிலைமை சரியாகத்தான் இருக்கிறது என்று பொருள். நன்றி நண்பரே.

  ReplyDelete
 4. இவங்க எதிர்த்தார்களா, அவங்க எதிர்த்தார்களா என்று பார்க்க வேண்டாம் ம.த. நாம எதிர்க்கிறோம். அவ்வளவுதான். வலையுலகின் சக்தி ஓங்கட்டும்.

  ReplyDelete
 5. சிம்பு எழுதிய பாடல்கள் எல்லாமே ஒருமாதிரியான ரகத்தை சேர்ந்தவை. அந்த பாடல்களையெல்லாம் ரசித்ததின் விளைவு இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

  ReplyDelete
 6. இந்த பாடலை பற்றி பேசுவதே அவர்களுக்கு வெற்றிதான் ..இதை ignore செய்வதுதான் இவர்களுக்கு தரும் சரியான treatment..

  ReplyDelete
 7. டி ஆர் முதலில் மகனை கண்டிக்க வேண்டும். டி. ஆர் காமெடி பீசாக கருதப்பட்டாலும். பாடல்களில் கண்ணியத்தையே கடை பிடித்தார். தந்தையிடம் இருந்து ஒழுக்கத்தை கற்க தவறி விட்டார் சிம்பு.
  ராகவேந்தர் என்ற இசை அறிவும் கொண்ட நடிகரின் மகன்தான் அனிருத். குறுகிய காலத்தில் கிடைக்கும் புகழ் பணம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  ஆஸ்கார் வாங்கியும் அடக்கமாய் இருக்கும் ரகுமானிடம் பாடம் பயில வேண்டும் அனிருத்.
  தமிழ் மக்கள் இவர்களை புறக்கணிக்கவேண்டும்

  ReplyDelete
 8. ஏனிந்த அவலம்... நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய பாடல். அவர்கள் இனிமேல் படங்கள் எடுத்தால் படங்களைப் பார்க்க முடியாது என அனைவரும் மறுக்க வேண்டும்.... தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்...

  ReplyDelete
 9. ஆண்மையுள்ளவன் பெண்மையை மதிப்பான் எதைவிட இந்த கேடுகெட்டவர்களுக்கு சொல்ல வேறென்ன வேண்டும். ஆனால் சில சைகோ, பெர்வெர்ட் கள் இந்த அர்ச்சனைகளை குரூரமாக ரசிக்கவே செய்யும்:(((

  ReplyDelete
 10. கேவல ஜென்மங்கள் ...

  ReplyDelete
 11. தமிழா யார் என்ன எதிர்ப்பு கொடுக்கின்றார்களோ இல்லையோ நாம் கொடுப்போம். ஒருவேளை இதுவே அவர்களுக்கு விளம்பரம் ஆகிவிடுமோ...

  ReplyDelete
 12. அதை யூட்யூபிலிருந்து எடுக்க வேண்டும் முதலில். இல்லை என்றால் சூப்பர் சிங்கரில் வேறு வந்து விடும்..

  கீதா

  ReplyDelete
 13. இயலாமை ஆண்கள் - உண்மை சகோ...அதே தான்! மக்கள் ஒதுக்கிவைக்கத்தான் வேண்டும் இந்த இழிபதர்களை!

  ReplyDelete
 14. போராட்டங்கள் வலுப்பெறுகின்றன....இந்த ஒற்றுமை உணர்வு மழுங்கிவிடக்கூடாதென்பதே என் இப்போதைய கவலை...

  ReplyDelete
 15. இந்து படத்தில வாலி என்கிற பெரிய கலைஞர் எழுதிய படு ஆபாசமான பாடலை நாமெல்லாம் ரசிச்சு கை தட்டுன பயலுக தானே, இப்போ என்னவோ சிம்புவால தான் நாசமா போச்சுனு புலம்புறீங்க.

  ReplyDelete
 16. https://www.facebook.com/senthoorran/posts/10153770847566054

  ReplyDelete
 17. தென்னிந்திய நடிகர் சங்கம் சென்ற ஞாயிறன்று கூட்டிய செயற்குழுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், விஷால், கார்த்தி மூவருமே இந்தப் பாடலைக் கண்டித்திருக்கின்றனர். அது எல்லா ஊடகங்களிலும் குறிப்பிடத்தக்க செய்தியாகவே வந்தது. 'இந்தப் பாடலைத் தான் வெளியிடவில்லை' என்று சிம்பு தரப்பில் சொல்லப்படுகிறது. யார் வெளியிட்டார்கள் என்பது பிரச்சினையில்லை. எப்படியோ வெளியாகிவிட்டதல்லவா? அப்படி வெளியான பின்னர் அந்தப் பாடலை உருவாக்கியவர்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? அப்படிப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்று சிம்புவிடம் பேசிப்பார்த்தேன். 'முடியாது' என்று சொல்லிவிட்டார். விஷாலும் கார்த்தியும்கூட சிம்புவிடம் பேசினார்கள். 'ஒரு மன்னிப்பு கேட்டுவிடு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடட்டும்' என்று சொல்லிப் பார்த்தார்கள். "முடியாது. நான் சட்டரீதியாக இதனை சந்தித்துக்கொள்கிறேன்" என்று சிம்பு சொல்லிவிட்டார்.

  "உங்கள் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கட்டுமா?" என்றுகூட சிம்புவின் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை" என்று நாசர் பேசியது எல்லா ஊடகங்களிலும் வெளிவந்ததே.

  மதுரைத் தமிழன் கவனிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இங்கே மறுமொழி எழுதியிருக்கும் யாருமே இதனை கவனிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 18. எதுக்குப் பெண்டாட்டி என்னச்சுத்தி வைப்பாட்டின்னு வைரமுத்துப் பாட நல்லா இருந்த சமுதாயம் இப்ப கெட்டுப் போச்சா?

  ReplyDelete
 19. B**p song

  சிம்பு, இவரைப்பற்றி சொல்லணுமுன்னா, இவர் ஒரு கலைக்குடும்பத்தின் செல்ல வாரிசு. இவரு அப்பா ஒரு ஆபிரிக்கன் ரம்ஸ் மாஸ்டர், அம்மா ஒரு வெஸ்ரேன் கிளாசிக்கல் டான்சர். அப்பா வாசிக்க அம்மா டான்ஸ் ஆட அதப்பாத்துப் பாத்து வளர்ந்தாலயோ என்னமோ இவரு வாய் கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே ஜாஸ்திதான்.

  பொதுவாவே ஒருசிலரை பாத்த உடனேயே பிடிக்கும், சிலரை பார்க்கப் பார்க்கப் பிடிக்கும், சிலரை எப்பிடிப் பார்த்தாலும் பிடிக்காது. இதில நம்ம சிம்பு முதலாவது category எண்ணு அவரே நினைச்சாலும் மூன்றாவது என்பதுதான் யாதார்த்தம். வம்பு பண்ணினாத்தான் சிம்பு, எங்கிறதுக்காக பயபுள்ள ஏதாச்சும் சின்னச்சின்ன வம்பு பண்ணுறதும் வழக்கம்தான். அப்பப்ப பெரிசா ஏதாச்சும் பண்ணிணானாலும், இதுவரைக்கும் ஜெயிலுக்கு போற அளவுக்கு எதுவுமே பண்ணலங்கிறது எல்லாருக்குமே வருத்தம்தான்.

  சுறுசுறுப்புக்கு எறும்புக்கு அடுத்ததா உதாரணம் சொல்லுறதுன்னா நம்ம TR பெத்த தங்கக்கட்டி சாட்சாத் சிம்புவேதான். ஏன் சொல்றேன்னா, மற்றவன கடிக்கிறதிலும் குடையிறதிலும் அவர்தான் டாப்பு. அவரோட exஓட புருசன் கொலவெறிப்பாட்ட ரிலீஸ் பண்ண அதுவேற ஐம்பது மில்லியன் பேர் பாத்தாங்களா, அப்பதான் சிம்புவ கெட்டியாப் பிடிச்ச சனியன், இப்ப அவரு தலையில ஏறி Gangnam ஸ்டைல்ல டான்ஸ் ஆடுதுன்னு நினைக்கிறன்.

  லவ் அந்தம்ன்னு ஏதோ ஒரு கருமாந்திரத்த ரிலீஸ் பண்ணினாரு, டான்ஸ் ஆடினாரு, விரல்வித்தை காட்டினாரு ஆனாலும் ஒரு அரை மில்லியனுக்கு மேல அவரைப் பார்க்க தயாரில்லை. இம்புட்டு பேராச்சும் நம்மள பாக்கிறாங்களேன்னு சந்தோசப்படுறத விட்டுட்டு இன்னும் பலபேர கவர அவர் எடுத்த விபரீத முடிவுதான் பீப் சாங். ஒல்லிப்பிச்சான் டைரக்டர் மியூசிக் போட சிம்புவே பாட்டெழுதி பாடினதுதான் பீப் சாங். ஆழமான கருத்துக்கள், நேர்த்தியான சொல்லமைப்புகள், பலரைக் கவரும் அற்புதமான மன்மத இசை போன்ற சூப்பரான பல
  விடங்களைக் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அடிக்கடி வரும் 'பீப்' ஒலி நம்மள சங்கடப்புத்துவது மறுக்கமுடியாத உண்மையாகும். அதனாலயோ என்னமோ பாட்டு ரிலீஸ் நாள்ல இருந்து பிரச்சனை மேல பிரச்சனை!!

  நம்ம தமிழ் சினிமாவ எடுத்துப்பாத்தா பல லச்சக்கணக்கான பாட்டு வந்திருக்கு, ஆனாலும் எனக்குத் தெரிஞ்சு கேள்வியிலயே பதில் இருக்கிற முதலாவது பாட்டு இதுதான். ஒரு ஆம்பள என்னத்துக்கு லவ் பண்ணுறான் எங்குறத அற்புதமா ஒரே வரியில சொல்லியிருக்கிறார். என்ன ஒரே வருத்தம்னா அந்த முக்கியமான இடத்தில beep ஒலிய போட்டிருக்கிறார்.

  இது சிம்புவோட private collection. அதாவது தனி மனித சுதந்திரம். அதில தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவர் தன்னை nudeஆ படம் எடுத்து வைச்சிருக்கலாம். அத எவனாவது திருடி வெளியிட்டா வெளியிட்டவன பிடிப்பீங்களா இல்ல சிம்புவ பிடிப்பீங்களா? சமீபத்தில வசுந்தரா, திவ்யா அவங்கட ஆபாச selfie போட்டோ நெட்டில வந்திச்சு! அதுக்கு போய் அவங்களயா பிடிச்சீங்க? அவிங்களுக்கு ஒரு நீதி சிம்புக்கு வேறோரு நீதியா. என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களேமா!!! நித்தியானந்தாட privacyய ரிலீஸ் பண்ணினவன விட்டுட்டு நித்தியானந்தாவ புடிச்சு ஜெயில்ல போட்டோ ஆட்கள்தேனே!!! உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்???

  என்னைப் பொறுத்தவரை இந்தப்பாட்டுக்கு ஒரு 16+ rating குடுத்து பப்ளிக்கா ரிலீஸ் பண்ணியிருக்கலாம். அந்த beep ஒலியும் போடாம இருந்தா 18+ ன்னு rate பண்ணலாம்.

  இதோ பீப்பாடல் lyrics

  என்னா p*****iku லவ் பண்றோம்
  என்னா p*****iku லவ் பண்றோம்
  என்னா p*****iku லவ் பண்றோம்
  லவ்வ ஏண்டா பண்ணுறோம்???
  X2

  சந்தோசமா இருக்கும்போது லவ்வ பண்ணுறோம்
  சந்தோசத்த கெடுக்கும் வழி அவளும் பண்ணுறாள்
  X2

  பொண்ணுகள திட்டாத மாமா
  உன்ன நீயே திருத்திக்க மாமா
  X2

  என்னா p*****iku!!!!!!!
  என்னா p*****iku!!!!!!!
  என்னா p*****iku லவ் பண்றோம்
  என்னா p*****iku லவ் பண்றோம்
  என்னா p*****iku லவ் பண்றோம்
  லவ்வ ஏண்டா பண்ணுறோம்???

  தண்ணிய அடிக்காத
  தாடிய வளக்காத
  தம்ம பிடிக்காத
  ரோற்ரலா வேஸ்ற்று
  என்ன ஆனாலும் அவளுக்காக அழுவாத
  போனாப் போறாடா பாஸ்ட் இஸ் பாஸ்டு
  விட்டுட்டுப் போயிட்டான்னு அழுவாதடா - உன்னை
  விட்டுட்டோமோன்னு அவ அழுதிடுவா
  தோத்திட்டோமேன்னு நீ கலங்காதடா -உன்
  காதலோட தோல்விதான் வாழ்கையோட வெற்றியே

  பொண்ணுகள திட்டாத மாமா
  உன்ன நீயே திருத்திக்க மாமா
  லவ்வ வேனா பண்ணாத மாமா - அவள
  வேனா ***க்க மாமா

  ஆம்பள மனச உடைக்கத் தெரிஞ்சாத்தான்டா - அவ பொம்பள அவ பொம்பள
  உடைஞ்ச மனசோட வாழத் தெரிஞ்சாத்தான் அம்பள- நம்ம ஆம்பள
  போடு மாமா
  மாமா மாமா மாமா மாமா
  ஓஓஓ உனக்காக ஒருத்தி பிறந்திட்டா அவள பாக்கல நீ பாக்கல
  உன்ன நார்நாரா கிழிச்சு ***த்திட்டுப் போனவள மறக்கல ஏன்டா இன்னும் மறக்கல
  உனக்காக ஒருத்திய ஆண்டவன் முடிவி பண்ணிட்டான் அதனால இவள உன்கிட்ட இருந்து புடுங்கிட்டான்
  வருவா அதுவரைக்கும் நீ மூடிட்டு சும்மா இருடா
  மாமாஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog