உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 31, 2012

பொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )




பொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )

இதோ அந்த டாப்  பொய் பட்டியல்  எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை நீங்கள்  சுலபமாக யூகிக்கலாம்.

இங்கு கறுப்பு கலரில் இருப்பவைகள் நீங்கள் சொன்ன பொய்கள் சிவப்பு கலரில் இருப்பது உங்கள் மைண்ட் வாய்ஸ்

1.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ( பன்னி மாதிரி )

2.உங்க டிரெஸ் ரொம்ப அழகா இருக்கு (நல்லா இல்லாத டிரெஸ்சை நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு அதேயே போட்டுகிட்டு திரிவா ஹஹஹா)

3.கவலைபடாதீங்க ...எதிர்காலத்தில் எல்லாம் சரியாக போய்விடும் ( ஆமாம் உங்க கனவுலமட்டும்தான் )

4.உங்க ஹேர் ஸ்டைல், உங்களுக்கு ரொம்ப  நல்லா இருக்கு! ( தலையில உள்ள வழுக்கையை மறைக்கிறதே இருக்கிற நாலு முடிதான்)

5.முப்பது வயசுனு சொல்லவே முடியாது! ( நாப்பதுன்னு சொல்லலாம்.)

6.இவரு பொய்யே பேச மாட்டாருங்க (மௌன விரதத்தின்போதுமட்டும்தான்!)

7.இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.(எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தானோ)

8.இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க ( கடைசியா ஒரு நல்ல டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கா )

9.எங்கள் குழந்தையின் விருப்பத்தில் நாங்கள் தலையிடுவதில்லை  எந்த பாடம் பிடிச்சுருக்கோ அந்த பாடத்தை கல்லுரியில் எடுத்து படிக்க சொல்லிட்டோம் ( அம்மா தாயே பரிட்டைசையில் மார்க் ரொம்ப குறைவா வாங்கி இருக்கான்னு நேரடியா சொல்லலாமில்லை)

10 ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் ( ஆனா அதை எப்ப தருவோம் என்ற உறுதி மொழி தரமாட்டோம்)

11. நான் அவசர அவசரமாக சமைத்தேன் அதுனால இன்னைக்கு சமையல் ரொம்ப சுமார்தான்( ஆமாம் இவ மெதுவா சமைச்சாலும் கூட வாய்யில வைக்க முடியாது இதுல வேற )

12. நீங்க சமைச்ச சாப்பாடு ரொம்ப சூப்பர் ( இப்பவே வயித்த வலிக்க ஆரம்பிச்சுடுச்சு)

13. உங்க  ஐடியா  மிக நல்ல ஐடியாவா இருக்கு ( இவனும் இவன் ஐடியாவும் குப்பையிலதான் கொண்டு போடனும்)

14. நீங்க உபயோகிக்கிற பெர்பியூம் பேர் என்ன ரொம்ப நல்லா இருக்கு (குப்பைதொட்டியின் வாசனையே நல்லாதான் இருக்கு.நான் அந்த செண்டை வாங்கி இருந்தால் இந்நேரம் அதை தாயாரித்தவன் மீது வழக்கு தொடர்ந்து இருப்பேன்)

15. உனக்கு உதவி எதாவது தேவைப்பட்டால் என்னை கூப்பிடு ( அப்பதான் எனக்கு பிஸி என்றூ சொல்லிவிட்டு போக முடியும்)

மக்காஸ் இது போல பல பல பொய்கள் யாரையும் பாதிக்காமல் தினம்தினம் சொல்லப்படுகின்றன.

இந்த மாதத்தில் நீங்கள் சொன்ன பொய்கள் ஏதாவது இருந்தால் அதை இங்கு பின்னுட்டத்தில் சொல்லலாம். அட நான் எல்லாம் பொய் சொன்னதே இல்லை என்று இங்கு வந்து பொய் சொல்லவேண்டாம்


இறுதியாக நான் ரொம்ப நன்றாக எழுதுகிறேன் அதனால் நீங்கள் நாவல் எழுதலாம் என்று பின்னுட்டத்தில் சொல்லிவிட்டு (உங்கள் மனதுக்குள் இவனெல்லாம் எழுத வந்துட்டான் என்று நீங்க நினைப்பது என் மைண்ட்டுக்கு புரிந்துவிட்டது மக்காஸ் அதுனால நல்லா உள்ளதை நன்றாக இருக்கு என்றும் இல்லாததை இல்லை என்ற உண்மையை மட்டும் பின்னுட்டதில் போடவும்.

டிஸ்கி ; நீங்க நல்லா எழுதவில்லை என்று பின்னுட்டத்தில் சொன்னாலும் நான் எழுதுவதை விடப் போவதில்லை. என்ன அவ்வள்வு சீக்கிரம் நான் உங்களை விட்டு போய்விடுவேன் என நினைத்தீர்களா? விட்டு போய்விடமாட்டேன் மக்கா விட்டு போய்விடமாட்டேன்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

Wednesday, May 30, 2012

புதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா?



புதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா?

அதிமுகவுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த செயலாளர் கே.ஸ்ரீதர் இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்ததும் அவரை உடனே போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டளையிட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்டளையை தொடர்ந்து ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகினார். ""சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன்''  என்று ஸ்ரீதர் தெரிவித்தார். ""தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருவதால் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது'' என்றும் அவர் கூறினார்."பாபா' படம் திரையிடப்பட்டபோது பாமகவினர் மிரட்டல் விடுத்தனர். அப்போது தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பை கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் ஸ்ரீதர் கூறினார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேரில் தெரிவித்தார். அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர்களும், நிர்வாகிகளுமான ஓ.பன்னீர்செல்வம், கே..செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரையும் சந்தித்து தங்கள் மன்றத்தின் ஆதரவை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தி இன்றைய (மே 29: )பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

ரஜினியின் சொல்படி போட்டியில் கே.ஸ்ரீதர் விலகினார்.ஆனால் அதே  கே.ஸ்ரீதர் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

எனது கேள்வி  இந்த அதிமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவு .கே.ஸ்ரீதர் மட்டும் எடுத்த முடிவா? அல்லது இது ரஜினிகாந்த எடுத்த முடிவை இந்த ரசிக மன்ற செயலாளர் அறிவித்து இருக்கிறாரா?

இது ரஜினிகாந்தின் முடிவு என்றால் ஜெயலலிதாவின் ஒராண்டு ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறது என்று நினைத்துதான் ஆதரவு அளித்து இருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. அல்லது இவர் அந்த முடிவை எடுக்க வில்லையென்றால் அவர் இன்னொரு அறிக்கை அளித்து தாம் அந்த முடிவை எடுக்க வில்லை என்று அறிவித்து அந்த ரசிக மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா?

இது ரஜினி ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா அல்லது அவர் ரசிக மன்ற செயலாளர் ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா? பொருத்து இருந்து பார்ப்போம்.

Monday, May 28, 2012

ஜூலை 9-ம் தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை




ஜூலை 9-ம் தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

எஃப்பிஐ சில மாதங்களாகவே எச்சரிகை ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதன் மூலம் சோதித்து பார்த்தால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம் என்றும் அதன்பின் அதனை  எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி செய்யவில்லையென்றால் அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுல் தளத்தால் தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உங்கள் கம்பியூட்டர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த லிங்கை க்ளிக் http://www.dcwg.org/detect/ செய்து  பரிசோதித்து கொள்ளலாம்.

Google plans to warn more than half a million users of a computer infection that may knock their computers off the Internet this summer.

Unknown to most of them, their problem began when international hackers ran an online advertising scam to take control of infected computers around the world. In a highly unusual response, the FBI set up a safety net months ago using government computers to prevent Internet disruptions for those infected users. But that system will be shut down July 9 -- killing connections for those people.

The FBI has run an impressive campaign for months, encouraging people to visit a website that will inform them whether they're infected and explain how to fix the problem. After July 9, infected users won't be able to connect to the Internet.

மேலும் அதிக விபரத்திற்கு இங்கு சென்று தெரிந்து கொள்ளலாம். http://www.foxnews.com/scitech/2012/05/25/google-warns-hundreds-thousands-may-lose-internet-in-july/

To check if you’re infected and how to clean your computer click here: http://www.dcwg.org/detect/

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog