பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.. அது சந்திரபாபு நாயுடுவிற்கு மிகப் பொருந்துகிறது அதனால்தான் நம்ம ஜீயோட சேர்ந்த பின் சந்திரபாபு நாயுடுவும் கோவில் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார் அதுதான் திருப்பதி கோவில் லட்டு பிரச்சனை..
எந்தவொரு கோவிலோ அல்லது வேறு ஒரு மத ஸ்தலங்களோ அது பக்தர்களின் உணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.. அந்த உணர்வைச் சேதப்படுத்துவது என்பது மிகவும் கொடும் செயலாகும்.
இந்த திருப்பதி லட்டு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்... அதில் மாமிச கொழுப்புகள் கலக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்தால் அரசோ அல்லது அந்த கோவில் நிர்வாகமோ மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து அதற்குச் சம்பந்தப்பட்டவர்களை மிகக் கடுமையாகத் தண்டித்து அது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க மேலும் பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதைத்தான் ஒரு நல்ல அரசோ தலைவரோ செய்து இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் ஆய்வு முடிவே சரியாக வெளி வருவதற்கு முன்பே சந்திரபாபு நாயடு அதைப் பற்றி பொது வெளியில் பேசி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வையும் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார் .ஜீ க்கு ராமர் கோவில் தமிழக பாஜகவினருக்கு முருகன் கோவில் போல ,சந்திரபாபு நாயுடு பெருமாள் கோவிலைக் கையில் எடுத்து அரசியல் விளையாட்டை விளையாட ஆரம்பித்து இருக்கிறார்.
இந்துத்துவா வாதிகள் அல்ல . உண்மையான இந்து மத பக்தர்கள் இது போன்று மத உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தலைவர்களை அப்படியே ஒதுக்கி வைக்க வேண்டும் இல்லையென்றால் உங்களின் மத உணர்வுகள் மிக மோசமாகச் சிதைக்கப்படும் என்பது நிச்சயம்.
திருப்பதி கோவிலின் லட்டை மட்டுமல்ல அங்குப் பலமுறை சென்று வந்த எனக்கே இந்த சம்பவத்தைக் கேட்ட போது மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வோடு கூடிய வலி தெரியும் போது உண்மையான இந்த பக்தர்களின் மனதில் இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் .
கோவிலை சுத்தம் செய்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பக்தர்களின் உணர்வை எப்படி சரி செய்ய முடியும் அது அவர்களுக்கு உறுத்திக் கொண்டேதானே இருக்கும்
இந்த பிரச்சனையைச் சரியாக நம் நாட்டில் உள்ள தலைவர்களுக்குக் கையாள தெரியவில்லை என்பதா அல்லது இதை வைத்து அவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடுகிறார்கள் என்பதா?
ஹும்ம்ம் இதற்கு மேல் என்ன எழுதி அல்லது சொல்லி என்ன பயன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.