Friday, September 6, 2024

 பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?

 




பண்டைய இந்தியக் காவியமான "மகாபாரதத்தில்" திரௌபதி ஆண்கள் நிறைந்த நீதிமன்றத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு  துகில் உரிக்கப்பட்டார்  . அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடுமையை வெல்ல அனுமதித்ததால், நீதிக்கான அவளது கூக்குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

இது அவள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, எல்லாப் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல், பெண்கள் மீதான வெறுப்பு அந்தச் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, திரௌபதியின் துன்பத்தின் வலி இன்னும் உணரப்படுகிறது, பெண்கள் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களில் கூட வன்முறையை எதிர்கொள்கின்றனர்.


இன்று கோல்கட்டா டாகடர் பாலியல் படுகொலை கேஸ் என்னாச்சீன்னு கேட்டால் அதற்கு ஒருத்தர் பதில் சொல்லுறார் அடேய் அதற்கு அப்புறம் ஸ்டாலின் அமெரிக்கா போனார் அண்ணாமலை லண்டன் போனார் மோடிஜி சிங்கப்பூர் போனார். முருகனுக்கு விழா விஜய் படம் ரிலீஸ் இன்று மஹாவிஷ்ணு மேட்ர்ன்னு ஒடிக்கிட்டு இருக்கு ஆனால் நீ என்னென்ன அரியர் வைத்த காலேஜ் பசங்க மாதிரி அதே இடத்தில் நிற்கிறேனென்று கேலி பண்ணுறான் .

அப்படி அவன் கேலி பண்ணிய சில நிமிடங்களில் அடுத்த பலாத்கார நிகழ்வு இந்த புண்ணிய மண்ணில் நிகழ்த்தப்பட்ட செய்தி வந்து இருக்கிறது.


இந்தியாவில் ரேப் இப்போது சர்வ சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பொது வெளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது  அதைப் பார்த்தவர்கள் அவனை அடித்து விரட்டி அந்த பெண்ணிற்கு உதவி செய்வதற்குப் பதிலாக வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியச் சமுகம் எங்கே சென்று  கொண்டிருக்கிறது.

 



இது பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்ததால், கொல்கத்தா வழக்கில் செய்த கோபத்தைப் பிரதான ஊடகங்களும், பாஜக தலைவர்களும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

நாமும் நம் வீட்டுப் பெண்களுக்கு நடக்கும் வரை ட்ரெண்ட் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.