Sunday, September 10, 2023

 

avargal unamaigal

G20 மாநாடு இந்தியாவில் நடப்பதற்குப் பதிலாக அமெரிக்காவில் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்?

G20 மாநாடு ஒரு பெரிய, குறிப்பிடப்படாத மாநாட்டு மையத்தில்  (convention center) நடைபெற்றிருக்கும்.

மாநாட்டு மையத்தின் வாசலில் இயேசு கிறிஸ்து சிலை வைக்கப்பட்டு இருக்காது.

மாநாட்டு மையத்திற்கு வரும் வழியில்  உள்ள குடியிருப்புக்கள் துணிகளால் மூடப்பட்டு இருக்காது.

தலைவர்களை வரவேற்க 'cheer girls 'ஆடிக் கொண்டு இருக்கமாட்டார்கள்,

தலைவர்களுக்கான உணவுகள் தங்கத் தட்டில் பறிமாறப்பட்ட்டு இருக்காது.

ஜோ பைடனின் பெருமைகளைச்  சொல்லிக் கொள்ளும்   பேனர்கள்  வழி நெடுக இருக்காது.

ஜோ பைடனின் கட் அவுட்டுகள் எங்கும் காட்சி அளிக்காது.

ஜோ பைடன் வெளிநாட்டுத் தலைவர்களை வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

வரும் பல்வேறு  வெளிநாட்டுத் தலைவர்களுக்கு  பைடன் டூரிஸ்கைடாக இருந்து, எந்த நினைவிடத்திற்கும் கூட்டிச் சென்று இருக்கமாட்டார்.
 
avargal unmaigal


அமெரிக்கப் பெயரைப் பேரிக்கா என்று மாற்றிக் கொண்டு இருக்கமாட்டார்.

அமெரிக்க ஊடக சேனல்கள் பைடனின் புகழ் பாடிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க ஆளும் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் இந்த G20 மாநாடு  அமெரிக்காவில் நடப்பதை ஒரு மாபெரும் சாதனையாகப் பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள்.


ஆனால் மோடி  அமெரிக்கா வந்து  இறங்கும்   போது  இங்குள்ள குஜராத்திகள் மற்றும் சங்கிகள் மட்டும் சொல்லிக் கொடுத்தபடி  விமான நிலைய வாசலிலிருந்து மோடி மோடி என்று கோஷம் எழுப்பிவிட்டு அவர்களுக்குக் கொடுக்கும்   இலவா குஜராத்தி சைவ உணவு பொட்டலங்களையும் ,பட்டேல் ஸ்டோரில் கொடுப்படும் ஸ்வீட் பாக்கெட்டுகளை வாங்கி சாப்பிட்டு அன்றைய நாட்களை ஜாலியாக  பாடி ஆடிக் கழித்து கொண்டிருப்பார்கள்


இதை எல்லாம் பார்த்துச் சென்று கொண்டிருக்கும் தலைவர்கள் எல்லாம் பைத்தியக்கார தலைவனும் பைத்தியக்கார மக்களுக்கும் வேற வேலை இல்லை என்பது போலச் சென்று கொண்டிருப்பார்கள்


இறுதியாக மாநாட்டின் முடிவில் God Bless America  என்று கோஷம் போட்டுச் செல்லுவார்கள் .


ஆனால் மோடி மட்டும் ஆயுத பூஜைக்காக அமெரிக்க ராணுவ தளவாடங்களை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலருக்கு ஒரு ஒப்பந்தம் செய்து விட்டை அதை பெரும் சாதனை என்று சொல்லிக் கொண்டு இந்தியாவிற்குச் சென்று இருப்பார்


அதுமட்டுல்ல விமானம் வான் நோக்கி சென்றதும் அங்கிருந்து ஜன்னல் வழியாக அமெரிக்க மக்கள் அவருக்கு கையாட்டிக் கொண்டிருப்பதாக தானே கற்பனை செய்து கொண்டு அங்கிருந்து கையசைத்து கொண்டிருப்பார்

 




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.