Sunday, September 17, 2023

 

avargal unmaigal


'இவர்களின்' வேலையே  மொத்த சமுகத்தையும் சாக்கடைக்குள் இழுத்துவிடுவதுதான்

சீமாச்சு என்று அழைக்கப்படும் சீனிவாசனுக்கும் கருப்பசாமிக்கும் வந்த வாய்த் தகராறு

சீமாச்சு என்று அழைக்கப்படும் சீனிவாசனும் , கருப்பு என்று அழைக்கப்படும் கருப்பசாமியும் அடுத்த அடுத்த வீட்டில் வசித்து வந்தனர். பல வருடங்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும், ஒரு கட்டத்தில் இருவருக்குள் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.   கருப்பசாமி வளர்த்த நாய்க் குட்டி   குரைப்பதைப் பற்றி கருப்பசாமியிடம் சீமாச்சு புகார் செய்த போதிலிருந்து  இது தொடங்கியது.

சீமாச்சுவின் புகார் தொடர்ந்து வந்தபோது, ​​ஒரு நாள் கருப்பு,  உங்களால் தானும் பல   தொல்லைகளைத் தானும் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார்,  நீங்கள் உங்கள் வீட்டில்  வளர்க்கும் மரங்களின் கிளைகள்  என்னுடைய வீட்டுப் பகுதிக்குள் வளர்ந்து  நூட்டிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம்  தேவையற்ற பூச்சிகள் என் வீட்டிற்குள் வருகின்றன .அதோடு  அந்த மரத்தின்  இலைகள் என் தோட்டம் முழுவதும்  விழுகின்றன .ஆனால் அதுபற்றி  நான் ஒருபோதும் புகார் செய்யவில்லையே என்றார்.


அதற்க்காக நான் என் மரத்தை வெட்டுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா அதெல்லாம் முடியாது .நீ முதலில் உன்  நாயை ஒழிப்பதற்கு  வழியைப்பாரு என்று சீமாச்சு  கத்தி சண்டையிட்டார்.


ஒரு நாள், சீமாச்சு  கருப்பசாமியின் வளாகத்திற்குச்சென்று, அவர் மீது அவதூறுகளை வீசத் தொடங்கினார். அவர் நிறையப் புண்படுத்தும் விஷயங்களைச் சொன்னார், அவரை ஒரு கோழை என்று அழைத்தார் மற்றும் அவரது குடும்ப பெண்களைப் பற்றியும் தவறாகவும் பேசி  குற்றம் சாட்டினார்.

சீமாச்சு தொடர்ந்து திட்டிய போதும் , கருப்பு முற்றிலும் அமைதியாகவும், கலங்காமலிருந்தார். அவரைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு எதையும்  அவர் செய்யவில்லை.  இருந்தும் சீமாச்சு அவரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து அவமதித்து வந்தார்.

இப்படி ஒருநாள் சீமாச்சு  அவமதித்து வெளியேறிய சிறிது நேரத்தில், எல்லாவற்றையும் பார்த்த மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ்  கருப்புவை நீ என் இவ்வளவு அமைதியாக இருக்கிறாய் பதிலுக்கு ஏன் அவரை திருப்பி அவமானப்படுத்தவில்லை என்று  கேட்டவாறு  

 தைரியமாக என்னோடு வாருங்கள், அந்த சீமாச்சுவின்  வாயை  மூடுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன. அவர் ஒருமுறை கருவுற்றிருக்கும் தனது மனைவியைக் கருச்சிதைவு ஆகும் வரை அடித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அவர் பல வருடங்கள்  வெளிநாட்டில் படிக்கும் போது அங்குள்ள  உள்ளூர்  இறைச்சிக் கடையில் கசாப்புக் கடைக்காரராக  வேலை பார்க்கவும் செய்தார்தானே.  அவர் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு போலீஸ் கேஸ்ஸானது வரை பல விஷயங்கள் உண்டு .இந்த விஷயங்களையும் பலவற்றையும் கொண்டு நீங்கள் அவரை அவமானப்படுத்தலாம் அப்போதுதான் அவருக்கு புத்தி வரும் என்றார்.

அதைக் கேட்ட கருப்பு ஜேம்ஸிடம்  நீங்கள் சேற்றில் பன்றியுடன் மல்யுத்தம் செய்யும்போது, ​​என்ன நடக்கும்? என்றார்
அதற்கு ஜேம்ஸ் பன்றியிடம் மல்யுத்தம் செய்பவரும்  சேற்றுச் சகதி பட்டு அழுக்காகி நாறிவிடுவார்  என்றார்.

அதைக் கேட்ட கருப்பு  சிரித்துக்கொண்டே   நல்லது அப்படியானால் நீங்கள்  அழுக்காகிவிட்டால், பன்றிக்கு அது பிடிக்கும், இல்லையா?

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்,  யாராவது உங்களை அவமானப்படுத்தினால், நீங்கள் அவரைத் திருப்பி அவமானப்படுத்தினால், நீங்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதால் நீங்களும் அவருடைய வகைக்குள் வருவீர்கள்.

யாரோ ஒருவர் குப்பையை எல்லா இடங்களிலும் வீசுகிறார், நீங்கள் அவருடன் சேர்ந்து குப்பைகளை வீசுகிறீர்கள், அதாவது இரண்டு பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள், நம்மை அவர்களின் நிலைக்குக் கொண்டு வர நாம் ஒருபோதும் மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது? நாம் ஒருபோதும் சேற்றில் விளையாடி மல்யுத்தம் செய்யக்கூடாது  பன்றியைத் தவிர வேறு யாரவது சேற்றை உண்மையாக விரும்புபவர்களா?யாராவது உங்களை அவமானப்படுத்தினால், அவர்கள் அவ்வாறு செய்வது அவர்களின் சொந்த பாதுகாப்பின்மை மற்றும் வாழ்க்கையில் உள்ள போதாமைகளால் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தகையர்களிடமிருந்து நாம் அமைதியாக விலகி, அது நமது நேரத்தையும் சக்தியையும் மதிப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கொடுமைக்காரனை அங்கீகரிப்பது அவர்களுக்கு அதிகாரத்தை மட்டுமே தருகிறது, மேலும் நீங்கள் அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்க விரும்பவில்லை".


இப்போது புரிகிறதா நான் ஏன் அமைதிக் காக்கிறேன் என்று கேட்டார்.


இது சிறுகதைதான் இந்த சீமாச்சுவை சங்கியாக நினைத்துப் பாருங்கள். அதன் பின் கதையில் நான் சொல்ல வரும் மொத்த அர்த்தமும் செய்தியும் உங்களுக்குப் புரியும்..

சங்கிகளின் வேலையே உங்களைச் சாக்கடைக்குள் இழுத்துவிடுவதுதான்.

உட்கார்ந்து யோசியுங்கள் அப்போது உங்களுக்குப் புரியும் அடித்தவன்  அடிவாங்கியவனின் கதை


அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.