Monday, September 25, 2023

 "அந்த ஒரு நாள்" ஜாக்கிரதை

 

avargal unmaigal



ஒரு நாள், நீங்கள் உங்கள் கதவைப் பூட்டுவீர்கள்,
ஆனால் நீங்கள் அதைத் திறக்க மாட்டீர்கள்.

ஒரு நாள், உங்களுடைய  ஆடைகளைத்  துவைப்பீர்கள்
ஆனால் அப்படித் துவைத்த ஆடைகளை உங்களால் அணிய முடியாது.

ஒரு நாள், உங்களுக்குப் பிடித்தமான உணவு தயாராகி இருக்கும்
ஆனால் இனி அதைச் சாப்பிட நீங்கள் இருக்க மாட்டீர்கள்

ஒரு நாள், நீங்கள் மூச்சை உள்ளே இழுப்பீர்கள்.
ஆனால் அப்படி இழுத்த மூச்சை வெளியிட முடியாமல் இருப்பீர்கள்.

ஒரு நாள், உங்களுக்கு வேண்டியவர் உங்கள் செல்போனுக்கு போன் பண்ணுவார்.
ஆனால் அதை எடுத்து உங்களால் பேச முடியாது.

ஒரு நாள்,   மிக நெருக்கமானவர்கள் உங்களுக்கு அருகிலிருந்து அழுவார்கள்.
ஆனால் அவர்களை ஆறுதல் படுத்தி அவர்களை உங்களால் தேற்ற முடியாது.

ஒரு நாள், நீங்கள் ஏடி.எம்.மில் எடுத்த பணம் அப்படியே உங்கள் பர்ஸில் இருக்கும்
ஆனால்  அதை உங்களால் செலவு செய்ய முடியாது


ஒரு நாள், உங்கள் பெயருடன் "த லேட்" என்ற தலைப்பு சேர்க்கப்படும்
ஆனால் அந்த பட்ட பெயர் வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடியாது


ஒரு நாள், நீங்கள் நீண்டகாலமாக நட்பு அழைப்பு அனுப்பிய தோழி உங்களை அக்சப்ட் பண்ணி இருப்பாள்.
ஆனால் பதிலுக்கு நன்றி சொல்லி குட்மார்னிங்க்/குட்நைட் சொல்ல நீங்கள் இருக்கமாட்டீர்கள்


ஒரு நாள், நின்று கொண்டிருக்கும் நீங்கள் கீழே விழுவீர்கள்,
ஆனால் மீண்டும் எழுந்து நிற்க உங்களால் முடியாது

ஒரு நாள்,  உங்கள் பெட் ரூமில் இருந்து கல்லறைக்கு அழைத்துச் செல்வார்கள்.
ஆனால் உங்களால் மீண்டும் உங்கள் பெட் ரூமிற்கு வர முடியாது


ஒரு நாள், மோடிஜி மங்கி பாத்  நிகழ்ச்சியில் பேசுவார்.
ஆனால் அதைக் கேட்டு ஆனந்தம் அடைய உங்களால்  முடியாது.



வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள், நல்லதைச் செய்யுங்கள், தீயவற்றிலிருந்து விலகி இருங்கள் . எல்லோருடனும் சமாதானமாக இருங்கள், உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டாரையும் நேசிக்கவும். எல்லா மதத்தாரையும் நேசியுங்கள்


வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது




அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு செய்தியை  என் பாணியில் இங்கே எழுதி பதிவிட்டு இருக்கிறேன்


2 comments:

  1. நல்ல பதிவு.
    எல்லா மதத்தையும் மதிக்கவும், சக மனிதர்களை நேசிக்கவும், கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.