Saturday, September 10, 2022

 வலிக்கும் வரை சிரிக்கவும்


   

@avargal unmaigal



நேற்று எனது மனைவியின் தோழிகளின் குடும்பத்தோடு மாலைப் பொழுதில் நேரம் கழிக்க நேர்ந்தது. அப்போது 9/11 ட்வின் கோபுரம் தகர்ப்பு பற்றி எங்களது அனுபவங்களைப் பகிர நேர்ந்தது. அப்போது மனதில் எழுந்த நினைவுகளின் விளைவுதான் இந்த பதிவு..

எனக்கு விபரம் தெரிந்த நேரத்தில்  நான் வசிக்கும்  மாநிலத்திற்கு அருகில் ஏற்பட்ட 9/11 மனதில் மிக அதிர்வை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது எட்டுமாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி அதிலிருந்து தப்பினாள். அப்படித் தப்பி இருக்கவில்லை என்றால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கும். அதன் பின் உலகில் தொடர்ந்து நடந்த  நிகழ்வுகளான சுனாமி கொரோனா உலகில்  பல இடங்களில் நடக்கும் போர்கள் ஏன் சமீபத்தில் பேஸ்புக் தோழியின் கணவர் விபத்தில் இறந்த நிகழ்வு இப்படிப் பல சம்பவங்கள் மனதில் அதிர்வை ஏற்படுத்தியே வருகின்றன..

நாம் இப்போது வாழும் தருணந்தான் நம்முடையது அடுத்த நொடியில் என்ன நிகழும் எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் அறியோம் அதனால்  ஒவ்வொரு தருணமும்  நம் வாழ்க்கையில் விலைமதிப்பற்றது . அதனால் நிகழ்காலத்தில் வாழ்வது மற்றும் ஒவ்வொரு கணத்தையும் ரசிப்பதுதான் வாழ்க்கை என்று அறிந்து வாழ்வோம்.அதை எடுத்து என் வழியில் சொல்வதுதான் இந்த பதிவு படித்து வாழ்க்கையைச்  சந்தோஷமாக வாழுங்கள்

இந்த தருணத்தில் வாழுங்கள்,   அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.  எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள், அங்கேயே மற்றும் அப்போதே அந்த நொடியிலே ,அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று  நினைத்து  உங்கள் மனதை அலைய விடாதீர்கள் இந்த தருணத்தை நேசித்து உங்களால் முடியும் அளவிற்குச் சிறந்ததைக் கொடுக்க முயற்சியுங்கள்.நாளை என்று இன்றைய தினத்தை விட்டுவிடாதீர்கள் இன்றே இப்போதே என்று உங்களது நேரத்தைப் பயன்படுத்துங்கள் அப்படியில்லை எனில்  பல சிறந்த தருணங்கள் வீணாகிவிடும்.

உங்களுடன் இருக்கும் நபருடன் நீங்கள் இருக்கும் அந்த நொடியில் உங்கள் கவனம் அனைத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள்;முற்றிலும் அங்கேயே அவருக்காக இருங்கள்.வலிக்கும் வரை சிரிக்கவும் கண்ணீரும்  வரட்டும்.உங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு ஒவ்வொரு கணத்தையும் நிரப்புங்கள் .

ஒவ்வொரு விஷயங்களையும் விவரங்களைத் தவறவிடாதீர்கள்; கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது. மனநிறைவு கொள்ளாதீர்கள்;கூர்மையாகவும் விழிப்புடனும் இருங்கள். உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்ற  ஒரு கணம் மட்டுமே ஆகலாம்  ஒருமுறை டிக் தெரிவு  செய்துவிட்டால்,  அது திரும்பப் போவதில்லை


நண்பராகட்டும் அல்லது வாழ்க்கையில் நம் கூட சேர்த்து வாழப் போகும் உறவாகட்டும் அல்லது நம் வாழ்க்கையின் ஆரம்பமோ அல்லது முடிவோ எல்லாம் ஒரு சில 60வினாடிகளில்  உருவாக்கலாம்.நீங்கள் யாராகவும்  இருக்கலாம் ஆனால்  அந்த தருணங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள். அதுவும் நீங்களாகவே இருக்கிறீர்கள்


 நீங்கள் வாழும் அந்த தருணங்களில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள். மேலும் வளர்ச்சி என்பது எடுப்பதில் இல்லை ஆனால் நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வாழ்க்கை வெறும் கணங்கள், மிகவும் விலைமதிப்பற்ற மற்றும் சில. மதிப்பு மிக்கதா அல்லது வீணடிக்கப்படுகிறதா, எல்லாம் உங்களுடையது!

அந்த விலை மதிப்பு மிக்க தருணங்களில்  அது அன்பாக  அக்கறையாகக்  காதலாக வளர்ச்சியாகப் பொறுப்பாகக் கண்ணியமாக  மரியாதையாக இப்படி பலவற்றைச் சொல்லி செல்லாம் அதை மற்றவர்களிடம் இருந்து பெறுவதைவிட நீங்கள் எவ்வளவு அதிகமாக மற்றவர்களுக்கு கொடுக்கீறிர்கள் என்பதில்தான் நமது வாழ்க்கையின் சந்தோஷமும் வளர்ச்சியும் இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்.

7 comments:

  1. சிறப்பான கட்டுரை தமிழரே...

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்கள்... வாழ்க...

    ReplyDelete
  3. சூப்பர் கருத்துகள். மதுரை. ஹையோ உங்கள் மனைவி ட்வின் டவர் தகர்ந்த அந்த கோரச் சம்பவத்திலிருந்து தப்பியது மகிழ்வான விஷயம். இப்போது நினைத்தாலும் திடுக்கிடவைக்கும்.

    கீதா

    ReplyDelete
  4. தலைப்பு பார்த்ததும் நகைச்சுவைக் கட்டுரை அலல்து துணுக்குங்கள் வழக்கமான உங்க குறும்போடுன்னு நினைத்தேன்...அப்புறம் புரிந்தது தலைப்பின் பொருள்!

    கீதா

    ReplyDelete
  5. நல்ல பதிவு.நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. சிறப்பு சகோ! உங்கள் மனைவி அந்தப் பெரும் அதிர்ச்சிகரமான தாக்குதலில் இருந்து தப்பித்தார் என்பதைக் கேட்க மகிழ்வாகவும், இப்போதும் கூட ஓர் அதிர்வையும் உணர முடிகிறது.
    உண்மை சகோ, எந்தவொரு இடரும் துக்கச் செய்தியும் மனத்தை மிகவே பிசைகிறது.
    நிகழ்நிமிடத்தில் வாழ்வோம், அன்புடன்!

    ReplyDelete
  7. நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.