Sunday, September 18, 2022

 யாரு கோமாளி?

  

@avargal unmaigal



இந்தியச் செய்தி சேனல்களில் வெளிவரும்  ஒவ்வொரு நிகழ்ச்சியும் நிரலும், பாஜகவின் நிகழ்ச்சி நிரலாகத்தான் இருக்கிறது   என்பதை  சுய சிந்தனை உள்ள  சாதாரண இந்தியருக்கும் புரியும். செய்தித் தலைப்புகளின் தேர்வு, மொழி, விவாத நடை,  எல்லாமே பா.ஜ.க.வைக் காக்கும் வகையிலும்  ,எதிர்க்கட்சிகள் தாக்கப்படும் வகையிலும்தான்  அமைக்கப்பட்டு நடை பெற்றுவருகிறது



இதற்கு உதாரணமாக ராகுல் காந்தியை தாக்குவதை எடுத்துக் கொள்ளலாம்.. ராகுல் காந்தி மேலை நாட்டுக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். மேலை நாட்டுக் கல்லூரியில் படித்து பட்டம் பெற வேண்டுமானால் கொஞ்சமாவது சுய அறிவு இருக்க வேண்டும் .அப்படி இல்லையெனில் யாராலும் படித்து பட்டம் பெற முடியாது  .ஆனால் இந்தியாவில் பட்டம் பெறுவது என்பது அப்படி அல்ல புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகளில் வாந்தி எடுத்தாலே போதும் அவர்கள் எளிதில் பட்டம் பெற்றுவிடலாம் அல்லது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பட்டம் வாங்கிவிடலாம்


ராகுல் காந்தியோ மேலை நாட்டில் பட்டம் பெற்றவர் மோடிஜியோ  இந்தியாவில் அதுவும் அவர் வகுப்பில் அவர் கூட யாரும் சேர்ந்து படிக்காத ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றவர். மேலும் மோடிஜி பொது மக்களிடமோ அல்லது ஊடக செய்தியாளர்களிடமோ நேரடியான கேள்விப் பதிலுக்குக் கூட சந்திக்க இயலாத பேசத் தெரியாத கோமாளி.


ஆனால் ஊடங்களில் நாம் பார்ப்பதோ ராகுல் பப்பு என்றும் மோடிஜி  சாணக்கியர் என்ற போலி பிம்பத்தைத்தான். இப்ப சொல்லுங்கள் யார் பப்பு மோடியா ராகுலா?அல்லது மோடியை  கண்மூடித்தனமாக ஆதரிக்கும் படித்த முட்டாளாக இருக்கும் இந்தியர்களா?



இவர்கள் எல்லாம் எனக்கு வினோதமானவர்களாகத் தெரிகிறார்கள் 
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.