Sunday, September 18, 2022

 இவர்கள் எல்லாம் எனக்கு வினோதமானவர்களாகத் தெரிகிறார்கள் They are all strange to me

  

@avargal unmaigal




நாட்டில் சமுக மற்றும் அரசியல்  பிரச்சனைகள் பல  தொடர்ந்து  எழுந்து மக்களைப் பாதிக்கின்றன.. ஆனால் இவைகள் எல்லாம் தங்களை எந்தவிதத்திலும் பாதிப்பது இல்லை என்பது போலப் பலரும் சமுக இணைய தளங்களில் அன்றைய ட்ரெண்ட், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறேன் . சினிமா, கதை, கவிதை, கடிதம், நகைச்சுவை. இலக்கியம் போன்றவற்றை மட்டும்  பேசிக் கொண்டும் ,அதைப் பற்றி எழுதிக் கொண்டும் அதற்காகப் போட்டிகளை நடத்திக் கொண்டும் , அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு விருதுகள் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இதையெல்லாம் அவர்கள் செய்யக் கூடாது என்று நான் சொல்லவரவில்லை.. ஆனால் இதையெல்லாம் எழுதும் இவர்கள் தங்கள் எழுதும் கதை கவிதை கட்டுரை மற்றும் பதிவுகளில்  தங்களை,  சமுகத்தை அன்றாடம் பாதிக்கும் அன்றைய சமுக அரசியல் பிரச்சனைகளை எழுதிப்  பேசி  அலசலாம்தானே. ஆனால் அப்படி எல்லாம் செய்யாமல் தங்களுக்கும் இந்த சமுகத்திற்கும் எந்தவித சம்பந்தமில்லாமல்  ஒதுங்கி இருக்கிறார்கள்.


இவர்கள் இப்படித்தான் என்றால் ,சமுக அரசியல் பிரச்சனைகளை எழுதுபவர்களோ எந்தவொரு பிரச்சனையையும் ,அந்த பிரச்சனையின் உள்நோக்கத்தை அறிந்து  ,அதை வெளிப்படுத்தாமல் அந்த பிரச்சனைகளை, தங்கள் சமுகம் அல்லது அரசியல் கட்சி சார்ந்த கண்ணோட்டத்தில் பார்த்து மட்டுமே எழுதுகிறார்களே தவிர பொது நல நோக்கில் பார்த்து எழுதவில்லை அது ஏன்?


ஒவ்வொருவரும் பிரச்சனைகளை  தாங்கள் சார்ந்த சமுக அரசியல் கட்சி சார்பாகப் பார்த்துப் பேசும் போது அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு சரியாகக் கிடைப்பதில்லை இதையெல்லாம் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு இவர்கள் எல்லாம் வினோதமாகவே தோன்றுகிறார்கள்


பலர் முக்கிய பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் எழுதாமல் இருக்கக் காரணங்கள் இவையாகத்தான் இருக்க முடியும்



அது அவர்களின் அரசியல் கட்சியைப்பற்றிய நம்பிக்கை அல்லது பார்வை/யோசனைக்கு ஆதரவாக அவர்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியிலிருந்து வந்ததாக இருக்கும்

அவர்களின் மதம்/சாதி .. அல்லா ஹூ அக்பர் என்று சொல்லி வேற்று மதத்தினரை கொல்லும் போது எழும் சினம் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லிக் கொல்லும் போதும் எழ வேண்டும் அதுபோல Vs வாக ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லிக் கொல்லும் போதும்  எழும் சினம் அல்லா ஹூ அக்பர் என்று சொல்லிக்  கொல்லும் போதும் எழ வேண்டும்


 அல்லது  கடைசியாகப் பிரச்சினையை எதிர்கொள்ள அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதாக இருக்கலாம்.


இந்த மூன்று காரணங்களால்தான் பலரும் வாய் மூடி மௌனமாக நல்லவர்களா இருப்பது போலக் காட்சிதரக் கதை கவிதை கட்டுரைகள் எழுதி தங்களை நல்லவர்களாக இந்த சமுகத்தில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

ஆம் இப்படிப் பட்டவர்களின் செயல்கள் எனக்கு வினோதமாகவே இருக்கிறது




அன்புடன்
மதுரைத்தமிழன்

18 Sep 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.