இந்தியாவை இந்துஸ்தான நாடு என்று அறிவிக்க மோடிக்கு இன்னும் தயக்கம் ஏன்?
கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி இந்தியாவை ஆண்டு வருகிறார் அதிலும் இப்போது அதிக பெரும்பான்மையுடன் ஆண்டு வருகிறார். உலக நாடுகள் பலவற்றிற்குப் பயணம் செய்து எல்லா நாட்டுத் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். அவர் சொன்னதை அதுவும் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட ஜனாதிபதி , துணை ஜனாதிபதி இருக்கிறார்கள். மோடிஜி சொல்வதுதான் சட்டம் அதுதான் தீர்ப்பு என்று சொல்ல நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்திய ராணுவம் மோடி தரும் தீபாவளி லட்டுகளைச் சாப்பிட்டு அவர் சொல்லும் சொல்லுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம் கேரளா தவிர்த்த அனைத்து மாநிலங்களும் மோடிக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்
இப்படி அனைத்தும் மோடிக்கும் சாதகமாக இருக்கும் போது இந்தியாவில் இனி ராமராஜ்ய ஆட்சிதான் நடக்கும் இந்தியா இனிமேல் இந்துஸ்தான என்றுதான் அழைக்கப்படும் என்று அறிவிக்க ஏன் தயக்கம்.
அப்படி அறிவித்தால் சில எதிர்க்கட்சிகள் எதிர்க்கலாம் அதைச் சமாளிப்பதோ மிக எளிது, மேலும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த ஒரு சில சிறு குழுவைச் சார்ந்தவர்கள் எதிர்க்கலாம் நன்றாகக் கவனியுங்கள் சிறுபான்மை மக்கள் அனைவரும் அல்ல ஒரு சிறு குழுவை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கலாம் அதையெல்லாம் சட்டையில் படிந்த தூசு போல எளிதாகத் தட்டிவிட்டு மோடி செல்லாம்தானே
இப்படி எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது மோடி ஏன் தயக்கம் காட்டுகிறார்
ஒருவேளை இப்படி அறிவித்துவிட்டால் அதன் பின் மக்கள் இந்த மதப் பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு வேலை வாய்ப்பு பொருளாதார பிரச்சனைகளைப் பற்றிப் பேசி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால்தான் அறிவிக்காமல் இந்துஸ்தான ராமராஜ்யம் என்பதை தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டு செல்கிறாரா என்ன?
அப்படி அறிவித்தால் அழிவு உறுதி...
ReplyDelete