Tuesday, March 9, 2021

 

@avargal unmaigal

வீட்டுக்காரி பின்னால் போற ஆண்களை  விட வீட்டு வேலைக்கார பெண்கள் பின்னால் போகும் ஆண்கள்தான் இந்த காலத்தில் அதிகம்.


இதற்காக ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.. இதற்கெல்லாம் வீட்டுப் பெண்கள்தான் முழுக்காரணம். இப்படி ஆண்கள் வீட்டு வேலைக்காரி பின்னால போகத் தூண்டிவிடுவதே இந்த பெண்கள்

ஆண்கள் ஒன்றும் வேலைக்காரி மீது ஆசைப்பட்டு ஒன்றும் மார்கழி மாத நாய்கள் போலப் போவதில்லை. அவர்கள் அப்படிப் போகக் காரணம் அவர்களது மனைவிக்கு வேலைக்காரி மீது நம்பிக்கை இல்லாததே காரணம்

அதனால் அவர்களது கணவர்களை வேலைக்காரி பின்னாலே போய் அவள் எல்லா இடத்தையும் நல்லா சுத்தம் பண்ணுகிறாளா? அப்படிப்பண்ணும் போது வீட்டில் உள்ள முக்கிய பொருட்களைப் புடவைக்குள் ஒழித்து வைக்கிறாளா என்பதைக் கண் காணிக்கவே அனுப்புகிறார்கள்
 



அப்படி வேலைக்காரி பின்னாலே சிபிஜ அதிகாரி போல பின்னாலே செல்லும் ஆண்கள் அந்த பெண்ணின் பின்னழகினால் கவரப்பட்டு அவளைக் கவரச் செய்ய வூட்டுக்கார அம்மாவிற்குத் தெரியாமல் அவளுக்குக் கடன் கொடுப்பது போல நிறைய பணங்களை தாராளமாக அள்ளிக் கொடுக்கிறார்/ அப்படி அள்ளிக் கொடுப்பவர்களுக்கு  அந்த பெண்களால் என்ன திருப்பிக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து தங்கள் நன்றிக் கடனை தீர்த்துக் கொள்கிறார்கள்

இப்ப சொல்லுங்கள் யார் மேல தப்பு?


ஏங்க.. கல்யாணம் ஆன புதுசுல  என்ன தூக்குவீங்களே அதே மாதிரி தூக்கிட்டு ஃபிரிட்ஜ் கிட்ட போங்க நான் ஐஸ் கிரீம் சாப்பிடணும்.
நீ அப்படியே இருமா நான் ஃபிரிட்ஜை  இங்க தூக்கிட்டு வரேன்!




அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எங்க வூட்டல வேலைக்காரி கிடையாது வேலைக்காரன் மட்டும்தான் உண்டு அந்த வேலைக்காரன் நான் தான்


12 comments:

  1. எங்கள் வீட்டில் வேலைக்காரி கிடையாதே...!

    கடைசி ஜோக் ஸூப்பர்!!!!

    ReplyDelete
    Replies

    1. உங்க ஊரில் வேலைக்காரி வைச்சுக்க முடியும் என்றாலும் வைச்சுக்காம இருக்கீங்க என்றால் நீங்கள் மகாத்மா தான் ஸ்ரீராம்... ஹும்ம் இங்க வைச்சுக்க ஆசைப்பட்டாலும் நம்ம ஊர் மாதரி வைக்க முடியாது

      Delete
  2. ஏன் ஒரு பெண்ணை வேலைக்கு இப்போ வச்சுப்பார்க்கலாமே ஸ்ரீராம்:)).

    ReplyDelete
    Replies
    1. மேலே படத்தில் உள்ள பொண்ணு மாதிரி வேலைக்காரி கிடைக்குமா என்று ஸ்ரீராம் வெயிட்டீங்க் பண்ணுகிறார் போல

      Delete
    2. ஹ்ஹஹ்ஹா :)) எப்படியாவது ஸ்ரீராமை அடி  வாங்க வைக்க பிளான் போடறாங்க :))

      Delete
  3. மத்தியானமே கொமெண்ட்ஸ் போட்டேன், அது என்னமோ தெரியவில்லை, இப்போ பலசமயம் மொபைல் கொமெண்ட்ஸ் வருகுதில்லை புளொக்குகளுக்கு.

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட் டைப் பண்ணிய பின் அங்கே பப்ளிஸ் என்ற பட்டன் இருக்கும் அதை அமுக்கினால் உடனே வெளி வந்துவிடும்

      Delete
  4. ஒன்று மட்டும் புரியுது, இப்பவே மாமிக்கு ஒரு புதுப் பூரிக்கட்டை வாங்கி அனுப்பப்போகிறேன்:))..

    ஆண்களைப்பற்றிச் சொல்லிப்போட்டு, டிஸ்கி யில் உங்களை ரொம்ம்ம்ம்ம்ப நல்லவராக்கிட்டீங்க ட்றுத் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
    Replies
    1. அதிராவின் அகராதியில் வேலைக்காரன் என்றால் நல்லவர் என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்.. ஹீஹீ

      Delete
  5. இது தான் மதுரை அலப்பறை...

    ReplyDelete
  6. ஹாஹா... பூரிக்கட்டைக்கு வேலை வந்துடுச்சு! இருக்கறது பத்தாதுன்னு அதிரா வேற வாங்கி அனுப்பப் போறாங்க! :)

    ReplyDelete
  7. ஹலோவ் ட்ரூத் :) நான் ரொம்ப சீரியஸா மன நோய் பற்றி போஸ்டுக்கு பாயிண்ட்ஸ் கலெக்ட் பண்ணிட்டிருந்தேன் :) இப்போ டைவர்ட் பண்ணி விட்டுட்டீங்க.மாமிக்கு பூரிக்கட்டை பார்சல் அனுப்பறதைவிட மாமியை  கிக் பாக்சிங் கிளாசுக்கு அனுப்பறது பெட்டர்னு தோணறது 

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.