Sunday, September 13, 2020

 

NEET deaths to be avoided

தவிர்க்கப்பட வேண்டிய  நீட் மரணங்கள்


ஒன்றை அடையப் போட்டிதான் என்று சட்டம் வந்தபின் நாம் அந்த ஒன்றை அடைய ஆசைப்பட்டால் அதற்காக நம்மை நாம் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அந்த ஆசையை மறந்துவிட வேண்டும். நீட்டும் அதில் ஒன்றுதான்... இந்தியாவை ஆளும் சர்வாதிகார அரசு கொண்டு வந்ததுதான் இந்தச் சட்டம் . இதற்குத் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அதிக எதிர்ப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு இல்லை என்பதால் இந்தச் சட்டம் சரி என்று சொல்லிவிட முடியாது.. அவர்களுக்கு அது பற்றிச் சரியான விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்... தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் அது அரசியல் சார்ந்த எதிர்ப்பாகவே இருக்கிறது.. அதனால் நீட் தேர்வு வரும் போதும் அந்த தேர்வு காரணமாக மன உளைச்சலில் யாரவது தற்கொலை செய்து கொள்ளும் போதுதான்... அதை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் சுத்தமான வெள்ளை வேட்டி சர்ட் அணிந்து வந்து ஊடக மைக்குகள் முன்னால் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டுச் சென்று விடுகின்றனர். இப்படி ஒரு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் சட்டம் கொண்டு வந்த சர்வாதிகார அரசு அதைச் சட்டை கூடப் பண்ணுவதில்லை..

 
ஒரு சில தினங்களுக்கு முன்னால் நீட் தேர்வு காரணமாக ஒரு பள்ளி மாணவி தற்கொலை என்ற செய்தி அறிந்தேன்.. இதற்கு நீட் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதுமட்டும் முழுக்காரணம் என்று சொல்லிவிட முடியாது.. அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவரது பெற்றோர்களும் கல்வி நிறுவனமும்தான் பொறுப்பாகும்.காரணம் ஒரு மாணவி டாகடராக வர ஆசைப்படும் போது அந்த நிறுவனம் தான் அளிக்கும் கல்வி முறை அதற்குத் துணை நிற்குமா அப்படி இல்லை எனில் அந்த மாணவியும் ஆசை நிறைவேறக் கல்வி நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும் அவர்களால் அதைச் செய்ய இயலாத போது அதை அவர் எங்கிருந்து எப்படிப் பெறலாம் என வழிமுறைகளைச் சொல்லித் தரவேண்டும். மேலும் பெற்றோர்களும் தம் குழந்தை ஆசைப்படும் போது அதை அடைய அந்தக் குழந்தையால் முடியுமா அதற்கு நம்மால் எந்த அளவு உதவ முடியும் அப்படி இல்லை என்றால் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லி தைரியத்தையும் அல்லது மாற்று வழியில் செல்ல அறிவுரைகளையும் சொல்லி அவர்களை மனப்பக்குவம் அடையச் செய்யவேண்டும்.. அதைவிட்டு விட்டு அவர்களுக்கு அதிகப் அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. ஆனால் அதற்கு மாறாகப் பெற்றோர்களும் சமூகமும் தங்கள் குழந்தைகள் மேல் சுமத்தும் படிப்பு-அந்தஸ்து என்ற அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் படித்தால் அறிவு மற்றும் சிந்தனை வளர வேண்டும். ஆனால் படிப்பு என்பது வேறு, அறிவு என்பது வேறு என்று தமிழகத்தில் கல்வி ஆக்கப்பட்டதன் காரணத்தால் படித்த அறிவுக்குப் பரீட்சை என்றாலே தமிழக மாணவர்கள் மரணபயம் கொள்ளும்படி ஆக்கி விட்டனர் நம் சமூகத்தினர்..


அதுமட்டுமல்ல வாழ்க்கையில் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் தற்கொலைதான் முடிவு என்றால் நாம் அனைவரும் தற்கொலைதான் பண்ணி இருக்க வேண்டும்.. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசைகள் உண்டு.. அந்த ஆசைகள் அனைத்தும் அப்படியே நிறைவேறுவது இல்லை அதனால் நாம் தற்கொலை செய்து கொள்வதும் இலைதானே


மேலும் போட்டி என்று வந்த பின் அதில் கலந்து கொண்டு அதன் முடிவு தெரிந்த பின் முடிவு எடுப்பதுதான் சரி ஆனால் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அது மிகத் தவறாகும் அதற்குக் காரணம் தன் மீதே தனக்குத் தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம் ஒருவேளை இந்த மாணவி தேர்வில் கலந்து கொண்டிருந்தால் அவள் வெற்றி பெற்றும் இருக்கலாம் மருத்துவராகவும் ஆகி இருக்கலாம் அல்லவா...மீண்டும் சொல்லுகிறேன் அந்த மாணவிக்குச் சரியான வழிகாட்டுதலை அவரது பெற்றோர்களும் கல்வி நிறுவனமும் முறையாகக் கொடுக்கவில்லை அதுதான் அந்த மாணைவியிம் தற்கொலைக்குக் காரணம்


எப்படி ஒருத்தர் மருத்துவராக ஆசைப்படுகிறாரோ அது போல இன்னொருவர் கலெக்டராக இந்திய அரசின் உயர் பதவிகளை அடைய ஐ ஏ எஸ் ஐபிஎஸ் பரீட்சை எழுதி பாஸானால் மட்டுமே முடியும் தான் ஆசைப்பட்டதால் அது தானாகவே அது அவர்களுக்கு வந்து சேர்வதில்லை அதற்குப் பலகாலம் பயிற்சி எடுத்து கடும் முயற்சி எடுத்துத்தான் அதில் வெற்றி பெறுகிறார்கள்.. அது போலத்தான் மருத்துவப் படிப்பும் அதற்கான சட்டம் வந்தபின் நாம் அதற்காக முயற்சி எடுத்துத்தான் ஆகவேண்டும் அப்படி இல்லை என்றால் ஆசைப்படக்கூடாது.

இதில் உள்ள நிதர்சன உண்மை ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக் கனியாகிவிடுகிறது என்பதுதான். உண்மையைச் சொல்லப் போனால் ஏழைகளின் நலனுக்காக எந்த அரசு சட்டங்கள் இயற்றுவதுமில்லை அவர்களுக்கு உதவுவதுமில்லை... அவர்களுக்கு உதவுவது தேர்தல் வரும் போதுமட்டும்தான் அதுவும் வோட்டுகளுக்காக மட்டுமே.. அதன் பின் அந்த ஏழைகளுக்காக அந்த அரசு சிறிதும் செவி கொடுப்பதில்லை..


அரசு மட்டுமல்ல கட்சிகளும் அப்படித்தான் கட்சிகளில் ஏழை தொண்டனின் கோரிக்கைகள் கேட்கப்படுவதில்லை வசதி மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களின் கோரிக்கைகள் மட்டும்தான் செவுமெடுக்கப்படுகின்றன. ஏழை தொண்டன் தேர்தல் நேரங்களுக்கு மட்டுமே தேவைப்படுவான் மற்ற நேரங்களில் அல்ல.... அது திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி ஏன் இந்தியாவை ஆளும் பாஜகவாக இருந்தாலும் சரி இதுதான் நிலைமை.

இறுதியாக மக்கள் நலம் சார்ந்து சிந்திக்காத தலைவர்கள் இல்லாதவரை இப்படிப்பட்ட சாவுகளைத் தவிர்க்க இயலாது. இப்படிப்பட்ட சாவுகள் தவிர்க்கப்படவேண்டும்மென்றால் நாம் சுயமாகச் சிந்திக்க வேண்டும். எல்லோரும் போராட வேண்டும்

 

 

Jyothi is the third such aspirant to have died by suicide in the last month, ahead of the NEET exam slated for Sunday.
In the long letter addressed to her father, Jyothi has repeatedly stated that she fears being unable to meet their expectations and that she fears disappointing them.She repeatedly tells her parents to not blame themselves for her decision.

 



அன்புடன்
மதுரைத்தமிழன்

 

(If you need support or know someone who does, please reach out to your nearest mental health specialist.)

Tamil Nadu

State health department's suicide helpline: 104

Sneha Suicide Prevention Centre - 044-24640050 (listed as the sole suicide prevention helpline in Tamil Nadu)

 Helplines: AASRA: 91-22-27546669 (24 hours)

Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)

Listen to the latest songs, only on JioSaavn.com

iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)

Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

 


2 comments:

  1. நல்லா சொல்லி இருக்கீங்க. மாநிலங்களுக்கான் நீட்டை தங்கள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த உரிமை பெறவேண்டும்.நீட் மனேஜ்மெண்ட் கோட்டாவிலும் நீட் மதிப்பெண் முன்னுரிமை பின்பற்றப்பட வேண்டும். +2 மார்க்கும் கணக்கில் கொள்ளப்பட வழி வகைகளை ஆராய வேண்டும் மாநில அரசும் எதிர் கட்சி மக்கள் பிரதிநிதிகளும் இதனை வலியுறுத்தவேண்டும்.தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள முயல வேண்டும். மற்ற மாநில அரசியல் ப்ரதிந்திகளிடம் இந்தப் பிரச்சனைகளை புரியவைக்க வேண்டும். இதற்கு ஆங்கிலம் மட்டும் போதாது. எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவம் தான் கல்வியின் உச்ச பட்ச இலக்கு என்ற மன நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
  2. நிகழ்வுகள் கொடுமை என்பதை விட வேதனை தான் உச்சம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.