Monday, February 19, 2018

@avargal Unmaigal
தவறு செய்பவன் இஸ்லாமியன் அல்ல என்றால் அவன் "Anti Indian"  அல்ல


காவிரி நீர் தீர்ப்பும் டீவிட்டர் பதிவுகளும்  படிக்காதவர்கள் படிக்க.....
ரஜினி தமிழ் மக்களின் துரோகி காரணம் எதற்கும் கருத்து சொல்லாத அவர் காவிரி தீர்ப்பு பற்றி கருத்து சொல்லி இருப்பதில் சூட்சமம் இருக்கிறது. தீர்ப்பில் 177 டிம்சி தண்ணிர் கொடுப்பது ரஜினிக்கு பிடிக்கவில்லை.. ஒரு வேளை மறுபரிசிலனை செய்தால் தமிழகத்திற்கு தரும் தண்ணீரின் அளவு 100 டிம்சியாக குறையும் என்று அவருக்கு நன்றாக தெரியும் அதனால்தான் எத்ற்கும் கருத்து சொல்லாத ரஜினி முதல் முறையாக இந்த விஷயத்தில் கருத்து சொல்லி இருக்கிறார். ஹீஹீ இப்படியும் யோசிக்கலாம்தானே



தமிழகத்தில் எடப்பாடி அரசு ஆட்சி செய்யும் வரை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏதிர்த்து வேறு எங்கும் வழக்கு தொடுத்துவிட வேண்டாம் அப்படி செய்தால் அடுத்த தீர்ப்பில் 100 டிம்சி தண்ணீர்தான் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துவிடுவார்கள் ஜாக்கிரதை

நேற்று இரவு படுக்கும் போது காவிரி நதி நீர் தீர்ப்பு பற்றிய ப்ரேக்கிங்க் ந்யூஸ் பார்த்தேன்... இன்று காலையில் எழுந்து மீண்டும் செய்திகள் பார்த்த போது அதே செய்தி இன்னும் ப்ரேக்கிங்க் ந்யூஸாக வந்து கொண்டிருக்கிறது அடே ஒரு செய்தி வந்த நாங்கு ஐந்து மணி நேரம் அதை ப்ரேக்கிங்க் ந்யூஸ் என்று சொல்லலாம் ஆனால் நீங்க கன்னித்தீவு கதை போல அதை இன்னும் ப்ரேக்கிங்க் ந்யூஸ்ன்னு சொல்லிகிட்டே இருக்கிறீங்களேடா



தமிழகத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வருவது உறுதியாகிவிட்டது போல இருக்கிறது. அதனால்தான் டிவிட்டரில் ரஜினி காவிரி தீர்ப்பு பற்றி கருத்து சொல்லி  இருக்கிறார்

//காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.//

பேசாமல் தமிழக விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் நிலம்  வாங்கி விவசாயம் செய்து பிழைக்கலாம். அது ஓன்றுமட்டும்தான் தமிழக விவசாயிகளை வாழ வைக்கும்

பிழைப்புக்காக கடல் கடந்து படித்தவர்கள் செல்வது மாதிரி இனி தமிழக விவசாயிகளும் மாநிலம் கடந்தாவது விவசாயம் பண்ணி பிழைச்சுகிடனும் இல்லை நாடு கடந்தாவது செல்லனும்

கர்நாடகா சட்டசபை தேர்தலை வைத்து மோடியால் எழுதப்பட்ட தீர்ப்ப்பை வாசித்தவர்கள்தான் உயர் நீதிமன்ற நீதிபகள்.. ஏறிந்தவனை விட்டுவிட்டு அம்பை நாம் குறை சொல்லக்கூடாது


தன்னிடம் கருத்து கேட்பவர்களிடம் ரஜினி இப்படி பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை?

இனிமேல் எனது கருத்துகளை திரைப்படம் மூலம் சொல்லுகிறேன் பணம் கொடுத்து அதை பார்த்துவிட்டு விமர்சியுங்கள்


ஜீயர் சுவாமிகள் இருந்த உண்ணாவிரத்தை கேலி பண்ணீர்களே இப்ப பார்த்தீங்களா அதனாலதான் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணிர் அளவை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. ஜீயரின் சாபம் உங்களை சும்மாவிடா என்று ஹெச்.ராஜா இன்னும் கொஞ்ச நேறத்தில் டிவிட்டரில் பதியப் போகிறாராம்தமிழகத்தில்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.