உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 19, 2011

அறிவின் திறவு கோலான அப்பா என்ற அப்பாவித்தந்தைகுழந்தைகள்  பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள். அவர்களுக்கான  பிடித்தது  பிடிக்காதது எல்லாம் மறைத்து கொண்டு  குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது,பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.

தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள்.இளம் வயது பிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்த பின்தான்  அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை  உணர முடியும்.
இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நான்கு வயதில் குழந்தைகள் :  ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
ஆறு வயதில் அதே குழந்தை : அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.
பத்து   வயதில் : ' ..அப்பா நல்லவர்தான்! ஆனால் ரொம்ப முன் கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்து கூட இவருக்கு தெரியவில்லையே! ஹூம்.
பன்னிரெண்டு  வயதில் : நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்....ஆனால் இப்போது ஏன்................. இப்படி ?
பதினாறு  வயதில் : சே! அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை. ச்சீசீ....
பதினெட்டு வயதில் : இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு  விபரமே தெரியாதவர்.
இருபது  வயதில் : அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ?
இருபத்தைந்து  வயதில் : என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா? எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்து கொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.
முப்பது  வயதில் :  (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்) : அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள்  பிரச்சனைகளை சமாளித்தாரோ ( ஆச்சிரியம்)
முப்பத்தியைந்து வயதில் :  மைகாட்! வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே !நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப்ப பாரு...வாலுங்க இது
நாற்பது வயதில் : ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசியமாகவே இருக்கின்றது.
நாற்பதைந்து வயதில் : எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டுவந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.
ஐம்பது வயதில் : இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்க்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.
ஐம்பதைந்து வயதில் : அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை  எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார். அவரல்லவா மனிதன்.
அறுபது வயதில் : ( கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த   மனிதர் யாரும் இருக்கவே முடியாது.இளைஞர்களே... இளைஞிகளே நாமும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து , குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்யமாட்டார்கள் என்பதையும் மனதில் வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.
நேரம் கிடைத்தால் கிழேயுள்ள வீடியோ க்ளீப்பை பாருங்கள் : ஆனால் பார்க்க தவறாதிர்கள். மனதை தொட்டு செல்லும் ,கண்ணிரை வரவழைக்கும்..பார்த்த பின்பு ஏதோ ஒன்றை இழந்த ஒரு உணர்வு தோன்றும்


வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் தந்தைகள் - இது எனது முந்தைய பதிவு . தந்தையர் தின ஸ்பெஷல் பதிவுகள்


இறுதியாக ஒரு வார்த்தை தந்தையர் தினம் என்பது குழந்தை உள்ளவர்களுக்கும் மட்டும் அல்ல. தந்தை ஸ்தானத்தில் இருந்து குழந்தைகளை கவனித்து வரும் எந்த ஆண்மகனுக்கும் உள்ள கொண்டாட்ட தினம் தான். அதனால் உங்களை தந்தை போல கவனித்து வரும் மாமா, அண்ணன், ஆசிரியர் மற்றும் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாம்.

அன்புடன்,
மதுரைத்தமிழன் ( Madurai Tamil Guy )4 comments :

 1. அப்பா விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.

  ReplyDelete
 2. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/ நன்றி.

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஏற்கனவே படித்தது என்றாலும், கடசி வரிதான் நச். தந்தை போல கவனிக்கும் ஆசிரியர், அண்ணன், மாமாக்களுக்கும் இந்நாள் பொருந்தும்ன்னு

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog