அவள் ஏன் போனாள் எனக் கேட்கும் மானம் கெட்ட மனநிலை! தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி செத்துவிட்டதா?
Translations in English and Hindi are provided at the end of the Tamil post.""तमिल पोस्ट के अंत में अंग्रेज़ी और हिंदी में अनुवाद उपलब्ध हैं।
பெரும் வெட்கக்கேடு: கோவையில் ஒரு கொடூரம்!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள் என்ற செய்தி ஒவ்வொரு தமிழரின் மனசாட்சியையும் உலுக்கியிருக்க வேண்டும். ஆனால், என்ன நடக்கிறது?
அந்த மிருகத்தனமான குற்றத்தைச் செய்த சில கயவர்களைப் பற்றிப் பேசுவதை விட, அதைத் தொடர்ந்து நாம் அனைவரும் செய்துகொண்டிருக்கும் இரண்டாவது கூட்டு வன்கொடுமைதான் இப்போது இங்கு விவாதிக்கப்பட வேண்டும்!
உண்மையில் அந்தப் பெண் உடல்ரீதியாகச் சிதைக்கப்பட்டபோது, நம் மனசாட்சி சற்று வலித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் என்ன நடந்தது? கருத்துகள் மற்றும் விவாதம் என்ற போர்வையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், அவதூறும், கேள்வியும், கேலியும்-அவளுடைய மரியாதையை மீண்டும் மீண்டும் கற்பழித்தது.
அவள் ஏன் அங்கே சென்றாள்?
அவள் உடை நாகரிகமானதா?
இது அவளுக்குத் தேவைதான்!
இப்படிப்பட்ட நச்சுச் சிந்தனைகளை வெளியிடும் ஒவ்வொருவரும், அந்தக் குற்றத்தை நியாயப்படுத்தும் கூட்டத்தின் அங்கம்! நிஜத்தில் நடந்த மிருகத்தனத்தை விட, பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்கும் நம் சமூகத்தின் வக்கிரமான மனநிலைதான் மிகக் கொடூரமானது.
அக்கொடிய மிருகங்களின் பிடியில் சிக்கி, நிஜத்தில் சிதைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் காயங்களைவிட, நமது சமூகம் அவளுக்கு ஏற்படுத்தும் மனக் காயங்கள் மிகப் பெரியவை!
சில மிருகங்கள் அந்தப் பெண்ணை வன் கொடுமை செய்த பின் சமூகம் அந்தப் பெண் மீது இரண்டாவது கூட்டு வன்கொடுமை நடத்திக் கொண்டு இருக்கிறது சமூக வலைத்தளங்களில்... கருத்துச் சுதந்திரம், விவாதம் என்ற பெயரில், மீண்டும் மீண்டும் அவளைக் குற்றவாளியாக்கும், இழிவுபடுத்தும், கேலி செய்யும் வக்கிரமான பதிவுகளைப் பார்க்கும்போது, இந்தச் சமூகத்தின் மனசாட்சி செத்துவிட்டதா என்று கேட்கத் தோன்றுகிறது!
பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கி, அந்த மிருகங்களின் செயல்களை நியாயப்படுத்தும் ஒவ்வொரு கமெண்ட்டும், வார்த்தைகளால் தொடுக்கப்படும் இன்னொரு பாலியல் வன்கொடுமை!
💔 வெட்கம்! வெட்கம்! வெட்கம்! குற்றம் செய்த சிலருக்கு தண்டனை கிடைக்கும்; ஆனால், இத்தனை கோரமான மனநிலையுடன் வலம் வரும் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கு யார் தண்டனை கொடுப்பது?
ஒரு பெண்ணைக் காப்பாற்றத் திராணியற்ற, அநியாயம் நடந்த பின்பும் அவளையே அவதூறு பேசும், இழிவுபடுத்தும் இந்தச் "தமிழ் சமூகம்" எதைக் கண்டு பெருமை கொள்ளப் போகிறது? மானம் கெட்ட இந்த மனோபாவத்திற்காக, ஒவ்வொருவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும்!
இனி ஒருமுறை, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கண்ணீரைச் சுரண்டும் இழிவான பதிவுகளைப் பார்க்க நேர்ந்தால், அது தமிழ்ச் சமூகத்திற்கே மாபெரும் அவமானம்.
தமிழ் சமூகமே, இதை ஒரு பெண்ணின் கதையாக மட்டும் பார்க்காதீர்கள். இது நம் ஒவ்வொருவரின் மனச்சாட்சிக்கு எழுப்பப்படும் ஒரு கேள்வி. நாம் எப்போது மாற்றம் காண்போம்? எப்போது நம் மனநிலையை மாற்றுவோம்? எப்போது ஒரு பெண்ணின் மரியாதையை பாதுகாக்கும் சமூகமாக மாறுவோம்?
இப்போது பேசுங்கள். மாற்றத்தை ஆரம்பியுங்கள். இல்லையெனில், நம் மௌனம் தான் இன்னொரு பெண்ணின் ஏன் உங்கள் வீட்டுப் பெண்களின் வாழ்க்கையை அழிக்கும். ஜாக்கிரதை
அன்புடன்
மதுரைத்தமிழன்
The shameless mentality that asks, "Why did she go?" Has the conscience of Tamil society died?
A huge shame: A brutality in Kovai!
The news that a college student in Kovai was subjected to gang-rape should have shaken the conscience of every Tamilian. But what is happening?
Instead of talking about the few scoundrels who committed that bestial crime, the second collective rape that all of us are continuously perpetrating must be discussed now!
In fact, when that girl was physically mutilated, our conscience might have felt a slight pain. But what happened after that on social media? Every word, slander, question, and mockery thrown at the victim in the name of "opinions" and "discussion" repeatedly raped her dignity.
"Why did she go there?"
"Is her dress civilized?"
"She deserved this!"
Everyone who expresses such poisonous thoughts is part of the group that justifies the crime! The perverse mentality of our society, which blames the victim, is far more heinous than the bestiality that actually occurred.
The psychological wounds inflicted by our society are far greater than the physical injuries sustained by the girl when she was caught in the grip of those cruel beasts and physically mutilated.
After some beasts committed violence against that girl, society is now perpetrating a second collective rape against that girl on social media... When one sees the depraved posts that repeatedly accuse, degrade, and mock her in the name of free speech and discussion, one has to ask, has the conscience of this society died?
Every comment that blames the victim and justifies the actions of those beasts is another sexual assault launched by words!
💔 Shame! Shame! Shame! Some criminals will be punished; but who will punish the entire society that moves around with such a cruel mentality?
What is this "Tamil society"—which has no capacity to save a woman, and yet slanders and degrades her even after injustice has occurred—going to take pride in? Every person should bow their head in shame for this utterly disgraceful mentality!
If one more time we are forced to see vile posts exploiting the tears of a victim, it will be a massive insult to the Tamil society itself.
O Tamil society, do not look at this merely as one girl's story. This is a question posed to the conscience of every one of us. When will we see change? When will we change our mindset? When will we become a society that protects a woman's dignity?
Speak up now. Start the change. Otherwise, our silence will destroy the lives of another woman, perhaps even the women in your own home. Be careful.
Sincerely, Maduraithamizhan
वह क्यों गई, यह पूछने वाली बेशर्म मानसिकता! क्या तमिल समाज की अंतरात्मा मर चुकी है?
बहुत बड़ी शर्म की बात: कोयम्बटूर में एक क्रूरता!
#தமிழ்ச்_சமூகமே_வெட்கப்படு #இரண்டாவது_வன்கொடுமை #கோவையில்_கொடூரம் #மானங்கெட்டகேள்விகள் #இப்போதுபேசுங்கள் #மதுரைத்தமிழன் #ShameOnTamilSociety #SecondRapeBySociety #KovaiHorror #StopVictimBlaming #DigitalViolence #SpeakUpNow#तमिलसमाजशर्मकरो #दूसरासामूहिकबलात्कार #पीड़िताकोदोषदेनाबंदकरो #कोवईकीघटना #शब्दोंका_बलात्कार #अबबोलो
कोयम्बटूर में एक कॉलेज छात्रा के साथ सामूहिक बलात्कार हुआ, इस खबर ने हर तमिल की अंतरात्मा को झकझोर देना चाहिए था। लेकिन क्या हो रहा है?
उस बर्बर अपराध को करने वाले कुछ बदमाशों की बात करने के बजाय, अब उस दूसरे सामूहिक बलात्कार पर चर्चा होनी चाहिए जो हम सब मिलकर लगातार कर रहे हैं!
वास्तव में, जब उस लड़की को शारीरिक रूप से खंडित किया गया, तो हमारी अंतरात्मा को थोड़ा दर्द हुआ होगा। लेकिन उसके बाद सोशल मीडिया पर क्या हुआ? "राय" और "बहस" के नाम पर पीड़िता पर फेंका गया हर शब्द, बदनामी, सवाल और मज़ाक ने उसकी गरिमा का बार-बार बलात्कार किया।
"वह वहाँ क्यों गई थी?"
"क्या उसके कपड़े सभ्य थे?"
"वह इसी लायक थी!"
ऐसी जहरीली सोच व्यक्त करने वाला हर व्यक्ति, उस अपराध को सही ठहराने वाले समूह का हिस्सा है! हमारी समाज की विकृत मानसिकता, जो पीड़िता को ही दोषी ठहराती है, उस वास्तविक बर्बरता से कहीं ज़्यादा घिनौनी है जो घटित हुई।
उन क्रूर जानवरों के चंगुल में फँसकर, वास्तव में खंडित हुई उस लड़की के शारीरिक घावों से कहीं ज़्यादा बड़े, हमारा समाज उस पर मानसिक घाव दे रहा है!
कुछ जानवरों द्वारा उस लड़की के साथ हिंसा करने के बाद, समाज अब सोशल मीडिया पर उस लड़की के साथ दूसरा सामूहिक बलात्कार कर रहा है... जब कोई अभिव्यक्ति की स्वतंत्रता और बहस के नाम पर उसे बार-बार दोषी ठहराने, अपमानित करने और मज़ाक उड़ाने वाले विकृत पोस्ट देखता है, तो यह पूछने का मन करता है कि क्या इस समाज की अंतरात्मा मर चुकी है?
पीड़िता को दोषी ठहराने और उन जानवरों के कार्यों को सही ठहराने वाली हर टिप्पणी, शब्दों से किया गया एक और यौन हमला है!
💔 शर्म! शर्म! शर्म! अपराध करने वाले कुछ लोगों को सज़ा मिलेगी; लेकिन ऐसी क्रूर मानसिकता के साथ घूमने वाले पूरे समाज को कौन सज़ा देगा?
यह "तमिल समाज"—जिसमें एक महिला को बचाने की क्षमता नहीं है, और अन्याय होने के बाद भी उसे बदनाम और अपमानित करता है—किस बात पर गर्व करने वाला है? इस पूरी तरह से बेशर्म मानसिकता के लिए, हर व्यक्ति को शर्म से सिर झुकाना चाहिए!
अगर एक बार फिर हमें किसी पीड़िता के आँसू निचोड़ने वाले घिनौने पोस्ट देखने पड़े, तो यह तमिल समाज के लिए एक बहुत बड़ा अपमान होगा।
हे तमिल समाज, इसे सिर्फ़ एक लड़की की कहानी मत समझिए। यह हम में से हर एक की अंतरात्मा से पूछा गया सवाल है। हम बदलाव कब देखेंगे? हम अपनी मानसिकता कब बदलेंगे? हम एक महिला की गरिमा की रक्षा करने वाला समाज कब बनेंगे?
अभी बोलो। बदलाव शुरू करो। नहीं तो, हमारी चुप्पी किसी और महिला के, यहाँ तक कि आपके घर की महिलाओं के जीवन को भी नष्ट कर देगी। सावधान!
सप्रेम, मदुरैत्तमिलन

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.