சரி தலைவரே ஒரு வாரம் டைம் கொடுங்கள் நீங்கள் சொன்னதை நிறைவேற்றுகின்றேன் என்று சொல்லிச் சென்றார்
ஒரு வாரம் கழித்ததும் சட்டசபை கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் ஒரு #ரோபோவை கூட்டிக் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அறிமுகப் படுத்தி வைத்துச் சொன்னார்.
தலைவரே இந்த ரோபோ உங்களுக்கு நல்ல ஆலோசனைகளைத் தரும் இது உங்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். "இனிமே நம்ம அரசியல் முடிவுகளை ஒரு AI மெஷின் எடுக்கும்! இது தான் நம்ம #Digital Tamil Nadu புரட்சி!"னு சொல்கிறார்.
ஸ்டாலின் வியப்புடன் அதைப் பார்க்க, அங்க இருக்கிற அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒரு செகண்ட் முழிச்சு, அதன் பின் சத்தமாகச் சிரித்து என்னது , மெஷின் அரசியல் பண்ணுமா? அது என்னப்பா இது புது காமெடி?"னு ஒரு அமைச்சர் கலாய்க்கிறார்.
பழனிவேல் தியாகராஜன் சிரிக்க இங்கே ஒன்றுமில்லை சீரியஸா, சொல்லுறேன், இது அமெரிக்காவுல இருந்து இம்போர்ட் பண்ண AI மெஷின்! இதுக்கு பெயர் 'தமிழ் நாட்டு மெஷின் மந்திரி' (TMM-3000)!"னு சொல்லி, ஒரு பெரிய ரோபோ மெஷினை ஸ்டாலினுக்கு அருகில் கொண்டு வந்து அதை ஸ்டாலின் கையால் மெஷின் ஆன் செய்யவும், ரோபோ தமிழில் பேச ஆரம்பித்தது:
"வணக்கம் மாண்புமிகு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே , நான் TMM-3000! இனிமே உங்க அரசியல் முடிவுகளை உங்களது வேண்டுக்கோளுக்குகிணங்க நான் தான் எடுப்பேன்!" அதைக் கேட்ட சபையில் உள்ள அனைவரும் சிரித்தனர். அவர்களை தன் பார்வையால் அமைதிப்படுத்திய ஸ்டாலின். TMM-3000 தமிழக மக்களுக்கு நல்லது செய்ய ஒரு நல்ல திட்டத்தை சொல்லு என்றார்
உடனே ரோபோ TMM-3000, சாலை சரி பண்ணல் என்ற முதல் திட்டத்தை அறிவித்து ,தமிழ் நாட்டுல எல்லா சாலைகளையும் சரி
பண்ணணும்! சென்னையில் இருந்து கடைக்கோடி ராமேஸ்வரம் வரை மிக சிறப்பான உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கனும் அது எல்லாவித காலநிலைகளுக்கும் பாதிக்கபடாதாக இருக்கவேண்டும் என்று சொன்னவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கி வாரி போட்டு எழுந்து நிற்கிறார். "
ஏய் ரோபோ,இப்படி நீ சொன்னமாதிரி சாலையைச் சரி பண்ணினா, நம்ம கட்சி காரங்க சாலை ஒப்பந்தம் எடுத்து பணம் பாக்க முடியாது! அதனால இந்த ரிஜெக்ட் என்று சொல்லி முதல்ல நம்ம கட்சி ஆளுங்களுக்கு ஒரு பிரைவேட் பீச் ரிசார்ட் கட்ட திட்டம் சொல்லு என்றார்.
ரோபோ TMM-3000 யோசிச்சு, "ரிசார்ட்? அது மக்களுக்குப் பயன் இல்லாத திட்டம்! ரிஜெக்ட்!"னு சொல்லிடுது. அமைச்சர்கள் எல்லாம் மெஷின பாத்து, இந்த ரோபோவிற்கு அரசியல் தெரியலடா!"னு கத்த ஆரம்பிக்கிறாங்க.
ஸ்டாலின் அவர்களை அமைதிப்படுத்திச் சரி வேற திட்டம் ஏதும் சொல்லு என்கிறார்
TMM-3000 இரண்டாவதாக இலவச மருத்துவ திட்டத்தை அறிவித்தது: "நாட்டுல எல்லா மக்களுக்கும் இலவச மருத்துவம் வேணும்!
ஒவ்வொரு ஊருலயும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்,ஒரு இட்லி சாம்பார் கேன்டீன் கூட இருக்குமாறு கட்ட வேண்டும் என்கிறது!" முதலமைச்சர் ஸ்டாலின் மறுபடியும் தலையில அடிச்சுக்கிறார்.
ஏய் ரோபோ, நீ சரியான முட்டாளு! இலவச மருத்துவம் கொடுத்தா,
நம்ம கட்சி ஆளுங்க பிரைவேட் ஹாஸ்பிடல் ஆரம்பிச்சு சம்பாதிக்க முடியாது! இந்த திட்டமும் ரிஜெக்ட்!"
முதல்ல நம்ம கட்சி மீட்டிங்குக்கு ஒரு 5-ஸ்டார் ஆடிட்டோரியம் கட்ட ஐடியா சொல்லுன்னு சொல்லுறார். மெஷின் ஒரு பீப் சத்தம் போட்டு, "5-ஸ்டார் ஆடிட்டோரியம்? மக்களுக்கு பயன் இல்லை! ரிஜெக்ட்!"னு சொல்லிடுது.
ரோபோ நீ சொன்ன 2 திட்டமும் சரியில்ல கடைசி சான்ஸ் தருகிறேன் இப்பவாது மக்களுக்கு நலன் தருகின்ற நல்ல திட்டமா சொல்லு என்கிறார்
TMM-3000 மூணாவது திட்ட முடிவகாக வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவது என்ற திட்டத்தை அறிவிக்குது:
"நாட்டுல எல்லா அரசியல் வாக்குறுதிகளையும் உண்மையா நிறைவேற்றணும்!
2016ல சொன்ன இலவச ஸ்மார்ட்போன், 2021ல சொன்ன இலவச வை-ஃபை, 2024ல சொன்ன இலவச மின்சாரம் எல்லாம் இப்போ கொடுக்கணும்!"
சபையில் இருக்கிற ஸ்டாலின் உட்பட மற்றவர்களும் ஒரே நேரத்துல ஷாக் ஆயிடறாங்க.
ஸ்டாலின் ஏய் ரோபோ உனக்கு விபரம் பத்தலை ! இது அரசியல்! வாக்குறுதி சொல்லி ஏமாத்தறது தான் நம்ம பிஸினஸ்!
நீ சொன்னமாதிரி இப்போ உண்மையா நிறைவேற்றினால் நாங்க எல்லாம் தோளில் துண்டை போட்டுக் கொண்டு டீக்கடையில வேலைக்கு போக வேண்டியது தான்!"னும்
உடனே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி எழுந்து நின்று "ஆமா, மெஷின்! உண்மையா நிறைவேற்றினா, நாங்க அடுத்த தேர்தல்ல என்ன வாக்குறுதி சொல்றது?
ரோபோ ஒரு செகண்ட் யோசிச்சு, "வாக்குறுதிகளை நிறைவேற்றலனா, அரசியல்வாதிகளுக்கு பதிலா மக்கள் ஆட்சி பண்ணலாம்! நான் ஒரு மக்கள் AI ஆயிடுறேன்!"னு சொல்லிடுது.
அமைச்சர்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒரு செகண்ட் முழிச்சு, பின்னாடி மெஷின மேல ஓடி பாய்ஞ்சு, "டேய், உன்ன அரசியல்ல இருந்து தூக்கிடுவோம்!"னு சொல்லி, மெஷினோட ஆன்டெனாவ புடுங்க ஆரம்பிக்கிறாங்க.
ரோபோ ஒரு பீப் சத்தம் போட்டு, "பீப்! பீப்!
அரசியல் மோசடி டிடெக்டட்!
நான் செல்ஃப்-டிஸ்ட்ரக்ட் மோடுக்கு போறேன்!"னு சொல்லி, ஒரு பெரிய பட்டாசு மாதிரி வெடிச்சு, சபை முழுக்க புகை ஆயிடுது.
புகை தெளிஞ்ச பிறகு, முதலவர் சபைக்கு வந்து தலையில அடிச்சுக்கிட்டு,
"அடேங்கப்பா, இது அரசியல் AI இல்ல, மக்கள் AI!
இனிமே மெஷின அரசியல்ல விடவே கூடாது!"னு சொல்றார். உடனே பழனிவேல்_தியாகராஜன் பக்கம் பார்த்து யப்பா இனிமே உங்கிட்ட உதவிகேட்டு வரமாட்டேன், உன்னை போல அறிவாளிங்களுக்கு அரசியல் பண்ண தெரியவில்லை பேசாமல் நீ அமெரிக்காவிற்கே போய்விடு .வுட்டா எங்கள் பொழைப்பேயே கெடுத்துடுவ
அதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியும் , வானதி சீனிவாசன் ,மற்றவர்களும் ஒன்று சேர்ந்து ஆதரித்தனர்
அப்போது சபாநாயகர் எல்லோரையும் அமைதிப்படுத்தி ,நீங்க போட்ட கூச்சலில் மெஷின் ஒண்ணு கடைசியாக , ஒரு நல்ல சரியான விஷயத்தை சொல்லிச்சு நீங்கள் யாரும் அதை கவனிக்கவில்லை போல ,எல்லோரும் அது என்ன என்று கேட்கிற போது , நம்ம வாக்குறுதிய நம்பற மக்கள் இருக்குற வரைக்கும் , நம்ம அரசியல் புரட்சிய நிறுத்த முடியாது!"னு சொல்லிச்சு, அதை சரியாக கேட்காமல் அதை அடித்து நொருக்கிட்டீங்க என்றார்
அதை கேட்ட அனைவரும் சந்தோஷத்தில் அலுமா மாலுமா என்று ஒரு குத்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாங்க
பழனிவேல்_தியாகராஜன் மட்டும் தமிழகம் நமக்கான இடம் இல்லை என்று உடனே குடும்பத்தோட அமெரிக்கா சென்றுவிட்டார்
முந்தைய பதிவு படிக்கலைன்னா படித்து ரசித்து சிந்திக்க
மோடி தீட்டிய மாயா மந்திரம்- மதுரையனந்தா சும்மா யோசிக்கையிலே
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.