Saturday, March 29, 2025

 அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs  அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள  வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு

   



"நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்" (Permanent Resident_Green Card Holders) ) மற்றும் "அமெரிக்கக் குடிமகன்" (Citizen )என்ற சொற்களைக் கேட்கும் போது பெரும்பாலானவர் குழப்பம் அடைகின்றார்கள் அதுவும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் .அதைப் பற்றிய சிறு விளக்கப் பதிவுதான் இது

இந்த பதிவு ஜூன் 23, 2021 ல் எனது தளத்தில் வெளிவந்த பதிவு .  அந்த பதிவைச் சரி செய்து   மறு பதிவாக, படிக்க எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றி இருக்கின்றேன், மேலும் அதிகாரப்பூர்வ பக்கங்களிலிருந்து நல்ல வளங்களைச் சேகரித்து, தமிழில் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கம் 2025, மார்ச் 29 அன்று புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க குடிவரவு சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது, துல்லியமும் பொருத்தமும் உள்ளதை உறுதி செய்கிறது.


க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆனால் அவர்கள் அமெரிக்காவின் குடிமகன் அல்ல. கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்  அமெரிக்காவில் காலவரையின்றி அமெரிக்கச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்க முடியும், மற்றும் குடிவரவு சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் ஆனால் இது அமெரிக்கக் குடியுரிமை அந்தஸ்தைத் தராது.


ஒரு சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் என்பது அமெரிக்காவில் காலவரையின்றி வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்ட ஒருவர். நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு "கிரீன் கார்டு" என்று அழைக்கப்படுவது வழங்கப்படுகிறது, இது அவர்களின் அடையாளத்தை நிரூபிக்கும் புகைப்பட அடையாள அட்டை.  ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குப் பின் புதுப்பிக்கப்பட வேண்டும் இது வரை அப்படிப் புதுப்பிப்பது மிகவும் எளிதாக இருந்தது ஆனால் ட்ரெம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது  க்ரீங்கார்ட் கோல்டர்கள் அரசிற்கோ கொள்கைகளுக்கு எதிராக  சோசியல் மீடியாவிலோ அல்லது வேறு எந்த வகையிலோ செய்லபட்டாஅல்  அவர்களின்  குடியுரிமையை  உடனடியாக கேன்சல் செய்து அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்படுவார்கள் இதைத்தான் அமெரிக்கத் துணை அதிபர் வென்ஸ் கடந்த கால் பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்

இப்படி நிரந்தர  அமெரிக்காவில் பணிபுரியும் உரிமையும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு (மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகள்) நிரந்தர குடியுரிமை பெற்று உங்களுடன் சேர மனு அளிப்பதும் அடங்கும். இருப்பினும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் "விருப்பமான உறவினர்களாக" கருதப்படுவார்கள், அதாவது வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவே இந்த க்ரீன் கார்ட் வழங்கப்படுகிறது. அதுவும் இப்படி அமெரிக்கா  கொடுக்கும் க்ரீன் கார்டின் அளவானது நாட்டிற்கு நாடு  மாறுபடும். அதாவது கோட்டா சிஸ்டம் மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியா சைனா போன்ற நாடுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். காரணம் இந்த நாடுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதனால் இவர்கள் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது


நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேறொரு நாட்டின் குடிமகனாகத்தான் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு முறையும் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே பயணிக்கும்போது, ​​அவர்களின் நாட்டின் பாஸ்போர்ட்டையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அமெரிக்காவிற்கு மீண்டும் வரும் போது இந்த நிரந்தர குடியுரிமை கார்ட் அதாவது க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்
.
இவர்கள் சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் உரிமைகளில் முக்கியமான வரம்புகள் உள்ளன. அமெரிக்க  Restrictions:
மத்திய அரசு தேர்தல்களில் வாக்களிக்க முடியாது, ஆனால் சில மாநிலங்கள் (உதாரணமாக, நியூயார்க் சிட்டி, சான் பிரான்சிஸ்கோ) உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கின்றன, Laws permitting noncitizens to vote பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய தேர்தல்களில் வாக்களிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை,  இதை மீறி வாக்களித்தால்  அரசு உங்கள் மீது வழக்குத் தொடரலாம் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை இழக்கலாம். அதுமட்டுமல்ல இங்குள்ள தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது மேலும் முக்கிய அரசு வேலை வாய்ப்புகளை இவர்கள் பெற முடியாது


இவர்கள் பெரும்பாலான முதலாளிகளுக்காக பணிபுரியலாம் அல்லது தொழில்களைத் தொடங்கலாம். இவர்கள் சொத்து வாங்கலாம் மற்றும் பொது கல்லூரி நிதி உதவியைப் பெறலாம், Lawful Permanent Residents USCIS website-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில முக்கிய அரசு வேலைகளில் சேர முடியாது. எந்த நிறுவனத்திலும் எந்த மாநிலத்திலும்  பணி புரியலாம் சொந்த தொழில் ஆரம்பிக்கலாம்


இப்படி க்ரீன் கார்ட் பெற்றவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று வசிக்கலாம். ஆனால் ஆறு மாதங்களுக்கும் மேலாகச் செலவு செய்தால் க்ரீன் கார்ட் ரத்தாகும் வாய்ப்புக்கள் அதிகம் குடிவரவு அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்பது உண்மைதான்.

அமெரிக்காவிற்கு வெளியே ஒரு வருடத்திற்கும் மேலாகச் செலவிட்டால், நீங்கள் நிரந்தர குடியுரிமையைக் கைவிட்டுவிட்டீர்கள் என்று அதிகாரிகள் கருதுவார்கள்,  அதனால் மீண்டும் நிரந்தர குடியுரிமை அடிப்படையில் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நாம் நமது சொந்த நாட்டில்  6 மாதங்களுக்கு மேல் வசிக்க நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டால் ரீ எண்ட் ரீ பெர்மிட்டை அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முன்பு பெற்றுச் செல்வது அவசியம் அப்படிச் செய்தால் நிரந்தர குடியுரிமையை இழக்க நேரிடாது.. இந்த பெர்மிட் 2 ஆண்டுகள் வரை வேலிட் ஆக இருக்கும்


சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு முக்கியமான வரம்பு என்னவென்றால், அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கான காரணங்களுக்கு உட்பட்டவர்கள். நீங்கள் சில குற்றங்கள் அல்லது பாதுகாப்பு மீறல்களைச் செய்தால், அல்லது உங்கள் முகவரி மாற்றங்களைப் பற்றி யு.எஸ்.சி.ஐ.எஸ்-க்கு ஆலோசனை வழங்கத் தவறினால், நீங்கள் அகற்றும் நடவடிக்கைகளில் வைக்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படலாம் .

இப்படி கிரீன் கார்ட் பெற்றவர்கள் விருப்பப்பட்டால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஐந்து ஆண்டுகள்) நல்ல தார்மீகத் தன்மையைக் காட்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், ஆங்கிலம் பேசவும், படிக்கவும், எழுதவும் முடியும் மற்றும் அமெரிக்க வரலாறு குறித்த தேர்வில் தேர்ச்சி பெறலாம் மற்றும் அரசாங்கம் அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் அப்படி விண்ணப்பித்த பின் இவர்கள் அவர்கள் வைத்த தேர்வில் பாசாகி மேலும் அவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லையென்றால் அவர்களுக்கு அமெரிக்கக் குடிமகன் அந்தஸ்து வழங்கப்படும். அப்படி அவர்கள் குடிமகன் உரிமையைப் பெறும் போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க நேரிடும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும். அதன் பின் அவர்கள் சொந்த நாடு திரும்ப வேண்டுமானால் சொந்த நாட்டிற்கு விசா எடுத்துத்தான் செல்ல வேண்டும்

     




அமெரிக்கக் குடியுரிமை(சிட்டிஷன்) என்றால் என்னவென்று பார்ப்போம்

அமெரிக்காவில் பிறந்ததன் மூலமாகவோ, ( நீங்கள் அமெரிக்காவிற்கு எந்தவொரு  விசா எடுத்துத் தங்கி இருக்கும் போது இங்குக் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தை மட்டும் இயற்கையாகவே அமெரிக்கக் குடிமகனாகிவிடுவார்) அமெரிக்கக் குடிமகன் பெற்றோர் மூலமாகவோ (அவர்கள் பிறந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்து) அல்லது இயற்கை மயமாக்கல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலமாகவோ மக்கள் அமெரிக்கக் குடிமக்களாக மாறலாம்.

ஒரு அமெரிக்கக் குடிமகன் அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பெறத் தகுதியுடையவர், இது அமெரிக்க வெளியுறவுத்துறையால் வழங்கப்படுகிறது. பல நாடுகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கின்றன. (இனிமேல் அதிலும் மாற்றங்கள் ஏற்படலாம் காரணம் ட்ரெம்பின் செயல்பாடுகள்)

ஒரு அமெரிக்கக் குடிமகன் எந்த நேரத்திலும்  எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியிருக்கலாம் அவர்கள் அமெரிக்க வர மறு அனுமதி தேவையில்லை . ஒரு குடிமகன் அமெரிக்காவிற்கு வெளியே எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பதில் எந்த தடையும் இல்லை.

அமெரிக்கக் குடிமக்கள் அமெரிக்கக் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கலாம், சில அரசாங்க வேலைகளில் சேரலாம் , ஜூரிகளில் பணியாற்றலாம். பல மத்திய மற்றும் மாநில அரசு மானியங்கள், உதவித்தொகை மற்றும் பிற சலுகைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

இப்படி சிடிஸ்கன் சீப் பெறுபவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் போட்டியிட முடியாது அவ்வளவுதான் ஆனால் மற்ற பதவிகளுக்கு அவர்கள் போட்டியிடத் தடைகள் ஏதுமில்லை

ஒரு அமெரிக்கக் குடிமகனாக, உங்கள் உறவினர்கள் பலரும் குடியேறுமாறு மனு செய்யலாம் . உங்கள் மனைவி, 21 வயதிற்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உடனடி உறவினர்களாகக் கருதப்படுவார்கள், மேலும் அனைத்து கடித வேலைகள் மற்றும் நேர்காணல்களையும் நீங்கள் பெற முடிந்தவுடன்  அவர்களும் குடியேறத் தகுதியுடையவர்கள்.

உங்கள் திருமணமான குழந்தைகள் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அத்துடன் உங்கள் சகோதர சகோதரிகள் முன்னுரிமை உறவினர்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் குடியேறக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம். (இதற்குப் பல வருடங்கள் ஆகலாம், இருப்பினும், குறிப்பாக உடன்பிறப்புகளுக்கு.)

அமெரிக்கக் குடிமக்களை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த முடியாது; ஆனால் அவர்கள் க்ரீன் கார்ட்குடியுரிமையைப் பெறுவதற்காக மோசடி செய்தார்கள் என்றால் மட்டுமே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்


 
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள் 
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்




29 Mar 2025

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.