நேற்று இரவு தூக்கத்தின் போது எனக்குள் வந்த ஒரு கனவு
நேற்று இரவு தூக்கத்தின் போது எனக்குள் பல கனவுகள் வந்தன. அதில் இந்த கனவு நினைவில் நின்றதுமட்டுமல்ல வித்தியாசமானதாகவும் இருந்தது.
அந்த கனவில் ஒரு பஸ்ஸில் பலரும் பயணிக்கிறோம் .அனைவரும் வெள்ளை நிறத்தில்தான் ஆடை அணிந்து இருக்கிறார்கள். நானும் வெள்ளை நிறத்தில்தான் ஆடைகள் அணிந்து இருக்கிறேன் அதில் நான் சாதாரண பயணியாகப் பயணிக்கவில்லை. ஒரு தூக்குதண்டனை கைதியாகப் பயணிக்கின்றேன். தீடிரென்று பஸ்ஸில் பிரச்சனை . பஸ் நிற்காமல் ஓடுகிறது . பஸ் டிரைவரையும் காணவில்லை.... பலரும் பஸ்ஸில் இருந்து எப்படி தப்பிப்பிப்து என்று நினைக்கையில் பஸ் செல்லும் திசை நோக்கிக் குதித்து ஒடுங்கள் என்கிறேன். தீடிரென்று அந்த பஸ் ஒரு குட்டி விமானமாக மாறி ரோட்டில் ஒடிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பயத்தில் கத்திக் கொண்டு எப்படித் தப்பிப்பது என்று நினைக்கையில் நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருக்கின்றேன். எனக்குத் தப்பிப்பது என்பது அவசியமில்லை காரணம் நான் தூக்குத் தண்டனை பெற்ற கைதி .ஒரு வேளை இதிலிருந்து நான் தப்பித்தாலும் மீண்டும் என்னைப் பிடித்து தூக்கில் இட்டு கொல்வார்கள் .அப்படி இருக்கையில் எதற்கும் நான் பயந்து ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து கால் கையை உடைத்து கொள்ளவேண்டும். பஸ் விபத்து ஏற்பட்டு நான் சாகலாம் அல்லது தூக்கில் இட்டு என்னைச் சாக அடிப்பார்கள். எப்படியும் சாவப் போவது உறுதியானப் பின் கவலை பட்டு என்ன பயன் என்பதால் நான் சிரித்துக் கொண்டு இருக்கின்றேன் ஆனால் மற்றவர்களோ அலறிக் கொண்டு இருக்கிறார்கள்
இப்படி என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?? நேரம் இருந்தால் சொல்லி விட்டு போங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.