Saturday, February 8, 2025

 பாரதப் பிரதமரின் மெளனம் மிகச் சரியே 

  




அமெரிக்காவிலிருந்து  பல நாடுகளிலிருந்து வந்த இல்லீகல் இமிகிரண்ட்ஸ்களை  அவரவர் நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் . அதற்கு சில நாடுகள் அவர்களை கைவிலங்கிட்டு திரும்ப  அனுப்பும் முறைக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வரும் வேளையில், இந்தியா எந்த வித எதிர்ப்புகளையும் காட்டாமல் மெளனம் காத்து வருவது பற்றி , இந்தியர்கள் பலர் தங்கள் அதிருப்திகளைச் சமுக இணைய தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள் எதிர்க்கட்சிகளும்  இதற்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். கேரளா காங்கிரஸ் ஒருபடி மேலே சென்று முதுகெலும்பை  இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்ல கொலம்பியா நாட்டு அதிபர் தைரியமாக அமெரிக்காவிற்குத் தெரிவித்த கண்டணத்தை காட்டி அவரை மோடியுடன் ஒப்பிட்டு கொலம்பியா அதிபரைப் பாராட்டி வருகின்றனர்..

இதையெல்லாம் பார்த்தும் மோடி அவர்கள் மெளனம் காக்கிறார் என்றால்,  அதற்காக அவர் ஒன்றும் கோழையல்ல... அவருக்குத் தேவை வீரியத்தை விடக் காரியம்தான் கை கூடனும்.  சும்மா வீம்பிற்காக் குரல் கொடுத்து அமெரிக்காவுடனான உறவை மேலும் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை .அவருக்குத் தெரியும் தன் நண்பனான டிரெம்பை கோபப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்குமென்று அதனால்தான்  அவர் மெளனம் காக்கிறார்


எப்படி ஒரு குடும்பத்த தலைவன் தன்  பிள்ளைகளைக் காப்பாற்ற என்ன அவமானப்பட்டாலும் பரவாயில்லை .அவர்கள் நலந்தான் முக்கியம் என்று சுய கெளரவம் பார்க்காமல்  எப்படி ஒடி ஒடி உழைக்கிறானோ அது போலத்தான் நம் பிரதமரும்  தன் மக்கள் நலம் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தில்தான் 2014 ல் இருந்து  தூக்கம் மற்றும் கெளரவம் பாராமல் உழைத்து வருகிறார்..

அவர் நாட்டு மக்களுக்காக உழைக்கிறார் என்று நம்புவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அப்படியே நம்பிக் கொண்டிருங்கள்.  ஏனென்றால் அப்படி நம்பி கொண்டிருப்பதைத் தவிர  உங்களுக்கு வேறு வழி ஏதுமில்லை..


மோடி உழைக்கிறார் என்றால் ஆமாம் அவர் உண்மையில் உழைக்கிறார் . ஆனால்  அவர் உழைப்பது என்பது அவர் கருதும் இந்திய மக்களான அம்பானி அதானி போன்றவர்களுக்காக தானே தவிர முட்டாள்தனமாகத் தன்னை ஆதரிக்கும் பொது மக்களுக்கு அல்ல என்பதுதான் கசக்கும் உண்மை..


அமெரிக்காவிற்கு தன் கண்டனத்தைத் தெரிவித்தால், அதனால் ஏற்பயும் பிரச்சனைகளால் அம்பானி அதானிகளின் வியாபாரத்தில் சிக்கல்கள் நேரும் .அப்படி நேர்ந்தால் அவர்கள்  தனக்கு நண்பராக இல்லாமல் எதிரியாக மாறி தன் பதவிக்கே ஆபத்து வரும் என்பதை அறியாத சிறுபிள்ளை அவர் அல்ல.. இதனால்தான் என்டையர் பொலிடிக்கல் சையின்ஸ் பட்டம் பெற்ற  பிரதமர் மெளனம் காக்கிறார்.. அப்படிக் காப்பதுதான் அவருக்கு நல்லது என்பதால் அது சரியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.. அவரது நிலையில் யாரு இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள்

ஆமென்


 உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? 


அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.