Sunday, June 9, 2024

 வைத்தியம் படித்த  டாக்டர் தமிழிசைக்கு  பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?

தமிழகத்தில் 40 இடங்களில் திமுக கூட்டணி  வெற்றி பெற்று இருக்கிறது . இதனால் எந்த பலனும்  இல்லை என்று பாஜகவைச் சார்ந்த தமிழிசை சொல்லுகின்றார்.

வலுவான எதிர்க்கட்சிகள் இருப்பது ஜனநாயகம் நீடிப்பதற்கான  முன் நிபந்தனைகளில் ஒன்று என்றார்  அம்பேத்கர்.  ஆனால் இந்தம்மாவோ
 கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று  படுதோல்வி அடைந்த பின் கொஞ்சம் பைத்தியம் போல மாறி  எதிர்க்கட்சிகள் வெற்றிபெறுவதே வீண் என்கிறார்.

அவருக்கு  நான் சொல்ல விரும்புவது இதுதான்.

இந்த நாற்பது நாடளுமன்ற உறுப்பினர்களைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது,  தமிழக மக்களின் பிரச்சனைகளை,  கோரிக்கைகளை மற்றும் தமிழகம் சார்ந்த  நலத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லுவதற்காகத்தான்.   இதன் காரணமாகத்தான் இவர்கள் தமிழக மக்களின் சார்பில்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .இதுதான் அவர்களுக்கான வேலை.. இவர்கள் தமிழக மக்கள் சார்பாகப் பேசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்.   இவர்கள்தான் தமிழ் சமுகத்தின் பிரதிநிதிகள்.


இவர்கள் வைக்கும் கோரிக்கைகளை  ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் பிரதமர்  மற்றும் அவர் தலைமையிலான மத்திய அமைச்சர்களின் வேலை..  அவர்கள் மாறுபட்ட கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரதமர் மற்றும் அமைச்சர்களான பின் அவர்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய  வந்தவர்கள்தான். அப்படி இருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்குச்  செவிசாய்க்காமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியவர்களாகத்தான் இருப்பார்கள்.


மருத்துவருக்குப் படித்தவர் ,கவர்னராக இருந்தவர் மற்றும்  ஒரு கட்சியின் மாநில தலைவராக இருந்தவருக்கு இது புரியாமல் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்த பலனும் தமிழகத்திற்குக் கிடைக்காது என்று சொல்வது சரியில்லை . தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய  நியாயமான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் பிரதமரும் அமைச்சர்களும்  அவர்கள் வகிக்கும்பதவிகளுக்குத் தகுதி  இல்லாதவர் என்றுதான் அவர் கூற  வேண்டும்.. கூவ வேண்டும்.அதுதான் அறிவார்ந்தோர் செய்யும் செயல்.


ஆனால் இப்படி  அவர் பேசாததால்தான் .அவரை  பலவிதங்களில் கேலி செய்கிறார்கள். அப்படி மக்கள் கேலி செய்வதற்கு இவர் மிகவும் தகுதியானவரே . இவர் பெண் என்பதால் அவரை கேலி செய்வது தவறு  என்று வக்காலத்து வாங்குவதும் தவறுதான



https://www.youtube.com/watch?v=KdbL2omstDI

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.