Friday, February 2, 2024

 விஜய்யின் அரசியல் கட்சியான "தமிழக வெற்றி கழகத்தின்" தாக்கம் தமிழக அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்குரிய தலைப்பு

   



நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேச அறிவிப்பு, அவர் எங்கு இறங்குவார், யாருடைய இடத்தைப் பிடிக்கப் போகிறார் என்ற விவாதங்களைத் தூண்டியிருக்கிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர் சினிமாவில் தனது தொழில் வாழ்க்கை மற்றும் புகழின் உச்சத்தில் இருக்கிறார், ஒப்பீட்டளவில் 49 வயதுடையவர். சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் நடிகர் நடித்ததன் விளைவுதான் அவருக்குப் பெரும் ரசிகர்கள் கூட்டம். அவரது இளம் ரசிகர்கள், ஏழைப் பிரிவினர், அவருக்கு அரசியல் ரீதியாக அதிக அளவில் ஆதரவளிப்பார்கள் என்று  எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சில தலித் அமைப்புகள் இந்த சமூகங்களிடையே கடுமையாக உழைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இக்கட்சிகளை நோக்கிய சித்தாந்தம் சார்ந்தவர்கள் எளிதில் நகராமல் இருக்கலாம்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் இளைய வாக்காளர்களைக் குழப்பி, அரசியல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் .இளைய வாக்காளர்களைக் குழப்ப பாஜகவின்
'B' டீமாக அவர் களம் இறங்கி இருக்கலாம் என்றுதான் கருதுகின்றேன். விஜய் ஏற்கனவே ஐடி வலையில்தான் இருக்கிறார்.ஏற்கனவே வருமான வரித்துறை சோதனைக்கு இலக்காகியுள்ள இவரின் இந்த புதிய கட்சிக்குப் பின் மறைந்து விளையாடுவது பாஜகாவத்தான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது

எது எப்படியோ அவரது பிரவேசம்  எந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியைப்  பாதிக்கக்கூடும் என்பதை உறுதியாகக் கூறுவது கடினம் என்ற போதிலும்  தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய கட்சிகளின் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சிதைத்துவிடுவார் என்பது உறுதி


இல்லை இல்லை அவர் எந்த கட்சியின்  'A'  அல்லது  'B' டீம் இல்லை. அவர்தான் தன்னிச்சையாகத் தைரியமாக் களம் இறங்குகிறார் என்று வைத்துக் கொண்டால் விஜய்யின் தாக்கம் அவரது கட்சி வாதிடும் கொள்கைகள், அது அமைக்கும் கூட்டணிகள் மற்றும் தற்போதுள்ள இந்த கட்சிகளுடன் எவ்வாறு தன்னை நிலைநிறுத்துகிறது என்பதைப் பொறுத்ததுதான் அவரது கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்


 தற்போதைய நிலவரப்படி, 2024 பொதுத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அறிமுகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருந்தால், அதற்கு முன்பே கட்சியை அறிவித்தது ஏன்? என்ற கேள்விதான் பெரிதாக எழுகின்றது. எனக்கென்னவோ இளம் வாக்காளர்களை தன் பக்கம் இழுத்துவிட்டு  அதன் பின் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் அதற்குப் பதிலாக வாய்ஸ் ரஜினிமாதிரி கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன்....

அப்படி அவர் கொடுக்கும் வாய்ஸ் யார் பக்கம் என்பதை நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியப் போகிறது? யார் கையில் ஐடி??

என்னைப்  பொருத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா கட்சி ஆரம்பிக்கலாமா என்றால்  ஆமாம் வரலாம் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆனால் அப்படி ஆரம்பிப்பதற்கு முன்பு முதலில் ஒரு இயக்கம் ஆரம்பித்து அதன் மூலம் சமுகத்திற்கு என்ன சொல்லப் போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்பதைச் செயலில் காட்ட வேண்டும் யாரை எந்த கொள்கையை எதிர்க்கிறோம் எதற்காக எதிரிக்கிறொம் என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரியும் படி செயல்பட்டு அதன் பின் கட்சி ஆரம்பித்தால் ஆட்சியில் கூட அமரலாம்.. ஆனால் அப்படி இல்லாமல் செயல்படும் போது ஆரம்பித்தோம் கூட்டணி பேசினோம் பணம் கறந்தோம் என்பதாகத்தான் முடியும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.