Saturday, February 3, 2024

 என்(மதுரைத்தமிழனின்) சமையலும் பிறரின் மகிழ்ச்சியும்

  

avargal unmaigal




எனக்குச்  சமைத்து ,அதை மற்றவர்களுக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து மகிழ்விப்பது  பிடிக்கும். எங்களது குடும்ப நண்பர்களுக்கும் எனது சமையல் மிகவும் பிடிக்கும்.. முன்பு எங்கள் வீட்டில் அடிக்கடி விருந்துக்கள் நடக்கும் ஐந்து ஆறு குடும்பங்களைக் கூப்பிட்டுச் சமைத்துப் போடுவேன்.  கொரோனாவிற்கு அப்புறம் அப்படிச் செய்வது குறைந்து போய்விட்டது.. அதன் பின் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது  மட்டும் ஐந்து ஆறு குடும்பங்களைக்  கூப்பிட்டு விருந்துகள்  அளிக்கிறோம். எங்களது நண்பர்கள் வீட்டில் ஏதாவது கெட்டுக்கதர் என்றால் எனது உணவைக் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்...

நான் தயாரிக்கும் உணவுகள் நல்ல டேஸ்டாக இருக்கும் என்று சொல்லி ரிசிப்பி கேட்பவர்களிடம் சொல்வது இதுதான். சமைக்கும் போது உங்கள் உணவைச் சாப்பிடுபவர் சந்தோஷமாகச் சாப்பிட வேண்டு என்று நினைத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே சமையுங்கள் .உங்கள் உணவு மிகச் சிறப்பாக வரும் என்பதுதான். பலரும் சமைக்கத் தயங்கும் இந்த காலத்தில் விரும்பி சமைப்புதான் எனது விருப்பாக இருக்கிறது.

காரணம் சமையல் செய்யும் போது அதிலிருந்து வரும் மணம் மனதை மயக்கும்.. நான் ஊறுகாய் தயாரித்தால் வீடே மணக்கும்.  என்ன ஊறுகாய் மணமாம என்று கேட்காதீர்கள்.. என் வீட்டிற்கு வந்து பாருங்கள் அந்த சமயத்தில்... எனக்கும் என் பெண்ணிற்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும். நான் தயாரிக்கும் ஊறுகாய் பிடிக்காதவர்களே இல்லை எனலாம். இப்போது எல்லாம் என் நண்பர்களின் வீட்டிற்குப் போகும் போது  ஸ்வீட்ஸ்களோ பழங்களோ பூக்களோ வாங்கி செல்வதில்லை .ஒரு பாட்டில் ஊறுகாய் செய்து எடுத்துக் கொண்டு போய்விடுகின்றேன்.


சில வருடங்களுக்கு முன் என் பெண் கூட படிக்கும் ஒரு பெண்ணிவீட்டிற்கு அவள் கூட படிக்கும் தோழிகளின் குடும்பங்களை எல்லாம் ஒரு விருந்திற்கு அழைத்து இருந்தார்கள் ஆனால்  அப்போது அந்த நேரத்தில் நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு வெகேஷன் போவதால்  வர முடியாது என்று சொல்லி இருந்தோம்.  கடைசியில் என் பெண்ணின் வற்புறுத்தலின் காரணமாக ஒரு நாள் தள்ளி வெகேஷன் போவதாக முடிவெடுத்து, என் பெண்ணின் தோழியின் வீட்டிற்கு  வருவதாகச் சொன்னோம்.. அது  ஒரு பாட்லக் பார்ட்டி என்பதால் என்ன செய்து கொண்டு வரலாம் என்று கேட்ட போது  பலரும் பல நல்ல ஐட்டங்களை ஏற்கனே தேர்வு செய்துவிட்டதால் ஏதாவது முடிந்தால் எடுத்து வாருங்கள் இல்லையென்றால் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார்கள். என் மனைவியோ சிலர் வெஜிடேரியன் ஆட்களும் வருகிறார்கள். அதனால் எளிமையாகப் புளியோதரை மட்டும் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டார் .நானும் வேண்டா வெறுப்பாக அதைப் பண்ணினேன். ஆனால் மனதிற்கோ திருப்தி இல்லை எனவே கிளம்புவதற்கு  15 நிமிடங்கள் முன்னால் என்  மனைவி   குளித்துவிட்டு சேலை கட்டி வருவதற்குள் மள மளவென்று ஊறுகாய் தயார் செய்து எடுத்துப் போனேன்.

மாலை 6 மணிக்குத் தொடங்கிய பார்ட்டியில்  குடிக்க டிரிங்க்ஸ் கொடுத்தார்கள் .அதைக்  குடித்துக் கொண்டே அதற்கு சைடிஸ் என்ன இருக்கிறது என்று பார்த்தால் காரமாக ஒன்றுமே இல்லை . அங்கு கிரில்லில் சிக்கன் சமைத்தார்கள் .நான் , நான் வெஜ் சாப்பிடுவது இல்லை என்பதால் வேறு ஒன்றும் கிடைக்காததால் நான் கொண்டு போன ஊறுகாயையே எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன் .அதைப் பார்த்த ஒரு மலையாளி என்னவென்று கேட்டு அதை வாங்கி சாப்பிட்ட பின் குணா படத்தில் வரும் கமல் போல பைத்தியக்காரனாகவே ஆரம்பித்துவிட்டார் .டேஸ்ட் அருமை என்று 6 மணிக்கும் புகழ ஆரம்பித்தவர் இரவு 2 மணி வரைக்கும் அந்த விருந்திற்கு வந்தவர்களிடம் எல்லாம் பாராட்டி மகிழ்ந்து சாப்பிட்டார் அங்கு வந்த பெண்கள் எல்லாம் அதைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்கள்.


எனக்கு மிகவும் சவாலான சமையல் என்பது இந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு வீட்டிற்கு அழைத்த குடும்பங்களில் ஒரு குடும்பத்தினரால்தான்..பல அய்யர் குடும்ப நண்பர்கள்  என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு இருக்கிறார்கள் .ஆனால் இந்த குடும்பம் ஐயங்கார் அதனால் அவர்கள்  பூண்டு  வேண்டாம் வெங்காயம் வேண்டாம்  இந்த காய்கறி வேண்டாம் இது வேண்டாம் அது வேண்டாம் என்று பல வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .அதனால் அவர்களுக்கென்று ஒரு  ஒரு வித சமையலும் மற்றவர்க்கென்று ஒரு வித உணவும் தயாரிக்க வேண்டி இருந்தது ஆனால் விருந்தில்  கலந்து மிக மகிழ்ச்சியுடன்  அருந்தி பாராட்டிச் சென்றது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.


என் கூட வேலை பார்க்கும் பல அமெரிக்கர்களுக்கும் எனது உணவுகள் பிடிக்கும் அதிலும் ஒருவர் என் மேனேஜர் அமெரிக்கர் என் நண்பர் அவர் தன் மனைவியிடம் சொன்னது  ஒரு வேளை  நாம் விவாகரத்து செய்து கொண்டால் அவர் என் வீட்டிற்கு வந்துதான்  வசிப்பேன் என்று சொல்லி இருக்கிறார் காரணம் எனது குணமும்  என் உணவின் சுவையும்தான்.  அவர் சமீபத்தில்தான் அமெரிக்க இராணுவத்தில் இருந்து விலகி வந்து இருக்கிறார். அவரின் அனுபவங்கள் கேட்க மிகவும் வியப்பாக இருக்கும்


2 வாரத்திற்கு முன்னால் ஒரு பார்ட்டிக்கு  நண்பரின் வீட்டிற்கு சிக்கன் ஃபரை. மற்றும் சில்லி சிக்கன் செய்து எடுத்து போயிருந்தேன்.. அங்கு வந்த எனக்கு இதற்கு முன் அறிமுகம் இல்லாத ஒருபெண் என்னிடம் வந்து இரண்டு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு மிக அருமை நன்றி என்று கூறினார். எனக்கோ சற்று வியப்பு எதற்குப் பாராட்டு என்ற போது  நான் சமைத்ததை சாப்பிட்டுவிட்டு அது யார் தயாரித்தது என்று கேட்டு வந்து எனக்கு நன்றியைச் செலுத்தினார். மேலும் அங்கு வந்த எனது இன்னொரு டாக்டர் நண்பர் அவருக்கு இப்போது சுகர் ஆரம்பித்து இருக்கிறது .அதனால் அவர் மிகவும் டயட்டில் இருக்கிறார் .அவரும்  அந்த பார்ட்டிக்கு வந்தார் .அவர் காலையில் சில மூட்டைகளையும் மதியும் 3 மணிக்கு அளவில் மிகக் குறைந்த அளவில் உணவை மட்டுமெடுத்து கொள்கிறார்  .அதன் பின் அடுத்த நாள் வரை எதுவும் சாப்பிடுவதில்லை வேண்டுமென்றால் இரவில் ஒரு ப்ளாக் காபி மட்டும் அருந்துவார். அவர் அன்று எதுவும் சாப்பிடாமல் தான் இருந்தார் .கடைசியில் அவரால் டெம்டஷனை அடக்க முடியாமல்  நான் தயாரித்த சிக்கனையும் மீனையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.

வழக்கமாக இருபது முப்பது பெருக்குக்குச் சமைக்கும் நான் கடந்த வாரம் ஞாயிற்குக் கிழமை முதன் முதலில் 100க்கும் அதிகமானவர்களுக்குச் சமைத்துக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.


எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ் தேவாலயத்திற்கும் எனது கையால் தயாரித்த சிக்கன் பிரியாணி வித் ரைய்த்தா , சாம்பார் சாதம் 2 வகையான பாஸ்தா, குளோப் சாமுன்,  வீட்டில் தயாரித்த ஊறுகாய்  சிப்ஸ் போன்றவைகளை நாங்களும் ,எனது இன்னொரு நண்பர் குடும்பத்தினர்  எங்கள் சார்பாக தயிர்ச்சாதம் கேசரியைக் கொண்டு வந்தார்கள் மாலை  பிரார்த்தனை முடிந்தது 100 க்கும் மேற்பட்டவர்கள்  இரவு உணவாக அருந்தி மகிழ்ந்தனர்.  பாராட்டிச் சென்றனர். உணவு இலவசம் என்பதற்காக அல்ல சுவையாக இருந்ததற்காக. பலரும் வழக்கம் போல ரிசிப்பி கேட்டார்கள் அவர்களுக்கு அதைக் கொடுத்துவிட்டுச் சொன்னது மகிழ்ச்சியாகச் சமையுங்கள் உணவு மிகவும் சுவையாக இருக்கும் என்றுதான்.



இணையத்தில் அறிமுகமாகிய சிலர் தங்கள் குடும்பத்தினருடன் எங்கள் வீட்டிற்கு வந்து எனது  உணவை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள்..  நான் மேலே சொன்ன சர்ஸ் விருந்தில் முதலில்  என் உணவை எடுத்து சாப்பிட்டவர்ரிம் முகம்  மிகவும் பரிச்சமான முகம் என்று பார்த்தால் பேஸ்புக்கில் பிரபலமானவர் அவர். நான் பொதுவாக முன்னே பின்னே அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதில்லை என்பதால் அவரிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை... அடுத்தநாள் பேஸ்புக் சென்ற போது அந்த பிரபலத்தின் பதிவில் நேற்று நீங்கள் அந்த சர்ச்சீற்கு வந்தீர்கள்தானே என்று மட்டும்தான் கேட்டேன். ஆனால் அவரோ  நான் கேட்டதை டெல்லீட் பண்ணிவிட்டார். அவர் கிறிஸ்துவர் இல்லை ஆனால் சர்ச்சிற்கு போனது பலருக்கும் தெரிந்தால் ஏதாவது சொல்வார்களோ அல்லது கேலி செய்வார்களோ என்று அவர் அதைச் செய்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்

விஜய்யின் அரசியல் கட்சியான "தமிழக வெற்றி கழகத்தின்" தாக்கம் தமிழக அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்குரிய தலைப்பு  

 

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சமையல் அனுபவங்கள் - நன்று.

    ReplyDelete
  2. "நூறுக்கு மேற்பட்டவர்களுக்கு"" அசத்திவீட்டீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.