Thursday, February 15, 2024

 


 

ஹலோ கத்தார் அரசா?

ஆமாம் யார் பேசுறது?


இந்தியாவில் இருந்து ஜீ பேசுறேன்


சொலுங்க்கோ ஜீ எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். எனக்கு ஒரு காரியம் நீங்க பண்ணணும்.


சொல்லுங்கோ ஜி உங்களுக்குச் செய்யாமலா?


நான் ஒரு 8 பேரை உங்க  நாட்டுக்கு அனுப்புறேன் அவங்க எல்லாம் என் நம்பிக்கை பாத்திரமானவர்கள் அவங்களுக்கு ஒரு நல்ல வேலை கொடுத்து கொஞ்சநாள் பார்த்துகுங்க?

சரி ஜீ

அப்புறம் நான் சொல்லும் போது அவர்களைக் கைது பண்ணுங்கள்

ஜீ அவங்க உங்கள் நம்பிக்கை பாத்திரமானவங்க என்று சொன்னீங்க அவங்களை போய் கைது பண்ணுகிறதா?


சும்மா தேவையில்லாமல் பேசாதீங்க நான் சொன்னபடி செய்யுங்க?

சரி ஜீ கைது பண்ணிடலாம் ஆனால் அதற்குக் காரணம் சொல்லனுமே என்ன சொல்லுறது?


உங்க நாட்டுல உளவு பார்த்து ரகசியங்களை  வெளிபடுத்துனதா  சொல்லி கைது பண்ணுங்க?


ஜீ அந்த மாதிரி கைது பண்ணினால் அவங்களுக்கு தூக்குத் தண்டனைதான் விதிப்போம் எங்க சட்டப்படி?


சரி சரி எனக்கு அது தெரியும் அதனால்தான் அவங்களை இந்த வழக்கில் கைது பண்ணச் சொன்னேன்


ஜீ நீங்க ரொம்ப குழப்புறீங்க?

நான் சொன்னதை செய்யுங்க அதற்கு அப்புற நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க?


சரி ஜீ நீங்கச் சொன்னபடி செய்துடுறோம். உங்க நம்பிக்கை பாத்திரமான ஆளைக் கைது பண்ணித் தூக்கு தண்டனையும் விதிச்சுடுறோம்.


குட் நீங்க தூக்குத் தண்டனை விதிச்சதோட சரி ஆனால் உண்மையிலே போட்டுடாதீங்க

ஜீ நீங்க மறுபடியும் எங்களை குழப்புறீங்களே

யோவ் நான் சொன்னபடி செய்யுங்க நீங்க ஒன்ண்டும் இந்திய நாட்டு மக்கள் அல்ல உங்களை நான் ஏமாத்துவதற்கு


ஹீஹீ   சரி ஜீ

நீங்கத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நாளுக்கு முன்னால் நான் எங்க ஆட்களை அனுப்பி உங்கிட்ட சமாதானம் பண்ண வைப்பேன்


அதன் பின் நான் உங்கள் நாட்டுக்கு வந்து  2028-2048 முதல் கத்தாரில் இருந்து எல்என்ஜி வழங்குவதற்கான 20 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா அரசு கையெழுத்திட்ட  ஒரு வாரத்தில்  நீங்க கொஞ்சம் பிகு பண்ணிய பிறகு அவர்களை விடுதலை பண்ணி எங்க நாட்டுக்கு அவங்களை அனுப்பிச்சுடனும்.

அது எல்லாம் சரி ஜீ இந்த வர்த்தக  ஒப்பந்தத்திற்கும் அவர்களின் கைதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா? நீங்க சொன்ன படி உங்களுக்கு முன்னால் இருந்த அர்சி நிர்ணயித்த விலையோ மிக அதிகமான விலைக்கு நீங்க வாங்க ஒப்பந்தம் போடுறீங்க அப்படி இருக்கும் போது உங்க கூட ஒப்பந்தம் போடாமல் நாங்க இருப்போமா என்ன?  ஆனால்  அதற்கு ஏன் இந்த கைது தூக்குத் தண்டனை டிராமாஜி


யோவ் உங்களுக்கு எங்க இந்திய மக்களைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாதய்யா..   அவங்களுக்கு டிராமா சிர்ரியல் என்றால் ரொம்ப பிடிக்கும் இப்ப பாரு இந்த கைது விடுதலைக்கு நான் எடுத்த நடவடிக்கையை பற்றித்தான் எல்லா மக்களும் பேசுவாங்களே தவிர உங்களுடன் அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டது  இவங்க மூளைக்கு எட்டாது.
மேலும் தேர்தல் வருவதால் என்னை மிக திறமைசாலி வெளிநாடுகளுடன் திறமையாகப் பேசி இந்த இராணுவ வீர்களை விடுதலை செய்துவிட்டார் நம்ம தலைவர் என்று கருதி என்னை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் ஹீஹீஹீய்


வாவ் ஜீ நீங்க உண்மையிலே மிகத் திறமையானவர் ஜீ


Eight Indian Nationals detained in Qatar have been released and seven of them have returned home. https://mea.gov.in/press-releases.htm?dtl/37614/Release_of_eight_Indian_Nationals_detained_in_Qatar. The release comes barely a week after India signed a 20 year deal for supply of LNG from Qatar from 2028-2048.



https://www.reuters.com/business/energy/indias-petronet-sign-lng-deal-with-qatar-supplies-beyond-2028-sources-2024-02-06/


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.