Tuesday, January 16, 2024

 அட ராமா  இவனுங்கிட்ட நீ படுகிறபாட்டை பார்க்கும் போது கடவுளாகவே பிறந்திருக்க வேண்டாம் என்று நினைக்க தோன்றுகிறதா?
   

 















கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகத்தில் பிரபலங்களை மட்டும் கூப்பிட்டு கொண்டாடுவது .ராமர் கோவில் திறப்புவிழா இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களையும் கூப்பிட்டு  நடத்துவது ஆக கடவுளும் கலைஞரும் ஒன்றுதான் போல #அட_ராமா



ராமர் கோவில் திறப்பு விழாவின் போது இறைச்சிகடைகள் மூடப்பட வேண்டும். மது கடைகள் மூடப்பட வேண்டும் இது போல வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்த போது  ராமரை காண வரும் பக்தர்கள் ஒரு  தீயை மூட்டி  அதில் தங்கள் மனைவியை  அதில் குதிக்க செய்து  கற்பை நிறுபித்த பின் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று சொல்லாமே. எனக்கு என்னவோ  இது நல்ல ஐடியாவா தோனுது\\


காத்திருக்கிறோம். சங்கராச்சாரியார்களுக்கு 'ஜார்ஜ் சோரஸ்' நிதியுதவி செய்தார் என்று அந்தபக்தர்கள் சொல்லும் நேரம் இன்னும் வரவில்லை என்று.......


கூடிய விரைவில்  BJP IT Cell சங்கராச்சாரியார்களை இந்து விரோதி, தேசிய விரோதி என்று அறிவிக்கும்.


அரசியல் கட்சிகள் மத நிகழ்வில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விவாதிக்கும் "மலம் தின்னும் ஊடகங்கள்" ஒரு மத நிகழ்வில் சங்காரச்சாரியர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது பற்றி விவாதிக்க மறுக்கிறது



நாங்கள்தான் இந்து மதத்தின் உண்மையான பாதுகாவலர்கள் என்று அவர்கள் கூறியதை நீங்கள் நம்பினீர்கள்.  ஆனால் உண்மையான இந்த மத  சாமியார்களான சங்கராச்சாரியார்களின் பேச்சை செவி கொடுத்து கேட்காமல்  எப்படி அவமதிக்கிறார்கள் என்று பாருங்கள்.  இந்த இந்துத்துவாவாதிகள்
அவர்களின் புதிய  கடவுளான மோடிக்கு எதிராக இருந்தால் இந்து மதக் கொள்கைகளையும்  காலில் போட்டு மிதிக்க தயங்கமாட்டார்கள். ஆனால் இதை புரிந்து கொள்ள மூளை வேண்டும். ஆனால் அதை இழந்து தவிக்கிறது  இந்திய சமுகம்



இன்றைய அரசு, அரசியல் கட்சிகளை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் வெளியேற்றுவதும் மதத்தின் புனிதர்கள் மத நிகழ்வில் பங்கேற்க முடியாதவாறு மதப் பழக்கவழக்களை உடைத்து அவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்க செய்வதும் ஏன்?




 நாலு சங்கராச்சாரியர்கள் இது சூத்திரகாரால் பிரதிஷ்டை பண்ணுவதால் தாங்கள் போகமட்டோம் என்று அறிவித்து இருப்பதால் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு கி.வீரமணி  மட்டுமல்ல ஸ்டாலினும் கண்டிப்பாக கலந்து கொள்ளணும்  என்ன நான் சொல்லுறது சரிதானே




இந்தியாவின் மிக உயர்ந்த இந்து மடங்களின் 4 சங்கராச்சாரியார்களின் இந்த கூற்றை விட வேறு எதுவும் தெளிவாக இருக்க முடியாது.
அவர்கள் பாரம்பரியமாக சனாதன தர்மத்தின் தலைசிறந்த பாதுகாவலர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்!
 
டிஸ்கி : இவையெல்லாம் என் பேஸ்புக் தளத்தில் வந்தவைகளின் தொகுப்பு... நீங்கள் விரும்பினால் அங்கே வந்து சேர்ந்து உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளலாம் . சூடான தகவல்கள் சுடச் சுட படிக்க  https://www.facebook.com/avargal.unmaigal/
 



அன்புடன்
மதுரைத்தமிழன்


16 Jan 2024

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.