Wednesday, January 3, 2024

 பாஜக தலைவர் அண்ணாமலையுடன் 'பிரேமை'லதா விஜயகாந்த நடத்திய கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை தோல்வியா?

 

avargal unmaigal


2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை  நடத்த 'பிரேமை'லதா விஜயகாந்த்  கமலாலயத்திற்கு தன் தம்பியுடன் வருகிறார். கமலாய வாசலில் பொன்.ராதா கிருஷ்ணன் கேடி.ராகவன், ஹெச்.ராஜா அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்  செல்லுகின்றனர் . பிரேமலதா மற்றும் அவர் தம்பியை உள்ளே அழைத்து வந்த அந்த மூவரையும் திருப்பி வாசலில் காவல் காக்க அமர்பிரசாத் ரெட்டி அவர்களை அனுப்பி வைத்துவிடுகிறார்.

அதன் பின் வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் பிரேமலதா அண்ணாமலையிடம் நான்  சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை நேரடியாகவே பேசி  விடுகிறேன்.. உங்களுக்கு நல்லாவே தெரியும்.  எங்கள் கேப்டன் மறைவிற்கு எவ்வளவு மக்கள் கூடி இருந்தனர் என்று ,அதனால் எங்களுக்கு வாய்ஸ் அதிகம் அதனால் எங்களுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்க வேண்டும்.

அண்ணாமலை   நீங்கள் கூட்டணி பேசவரும் போதே நாங்கள் உங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று  மேலிடத்தில் பேசி முடிவு செய்து விட்டோம். அதன் படி தமிழகத்தின் 40 தொகுதிகளில் உங்களுக்கு 30 தொகுதிகளையும்  எங்களுக்கென்று 5 தொகுதிகளையும் மீதி 5 இடங்களை மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் கொடுக்க முடிவு செய்துவிட்டோம்..

என்னது எங்களுக்கு 30 தொகுதியா அது எல்லாம் வேண்டாம் எங்கள் பையனுக்கும் தம்பிக்கு மட்டும் மொத்தம் 2 தொகுதிகளைக் கொடுத்துவிடுங்கள் மீதி தொகுதிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதற்குப் பதிலாக எங்களுக்கு 60 கோடி கொடுத்துவிடுங்கள் அதோடு எங்கள் அணியினர் ஜெயித்து வந்தால் மத்திய அமைச்சரவையில்  இடம் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

மேடம்  எங்க மேலிடம் இதற்குச் சம்மதிக்காது வேண்டுமானால் 30 தொகுதிகளிலும் நீங்கள் போட்டி இடுங்கள். காரணம் உங்களுக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது .  நீங்கள்  30 தொகுதிகளிலும் ஜெயித்து வந்தால்   உங்களுக்கு மேலிடத்தில் சொல்லி 100 கோடியாகக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் இந்த அண்ணாமலை சொன்னால் வாக்கு தவறமாட்டான்


பிரேமலதா, தம்பி இந்த கூட்டணி நமக்கு ஒத்து வாராது. நம்மை இந்த அண்ணாமலை நல்லாவே எடை போட்டு இருக்கிறார் நம்ம பருப்பு இங்கே வேகாது அதனால் எடப்பாடிக்குத் தூது விடுவோமோ அல்லது ஸ்டாலினுக்குத் தூது விடுவோமா?

அக்கா எடப்பாடியிடம் பேசுவதை நாம் அண்ணாமலையிடமே பேசிவிடலாம் எடப்பாடி எந்த முடிவை எடுத்தாலும் அது பாஜகவின் தலைமை எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும்

அப்ப ஸ்டாலின் தம்பியிடம் போய் பேச்சு வார்த்தை நடத்துவோமா அவர்தான் கேப்டனின் மறைவின்  போது நமக்கு மதிப்பு அளித்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டாரே?

அக்கா அதிலும் பிரச்சனைகள் இருக்கிறது
என்னாட அதில் பிரச்சனை

அக்கா ஸ்டாலின் கலைஞரின் வாரிசு அதுமட்டுமல்லாமல் அவரைவிட டேஞ்சரானவர் அதனால் கலைஞர் சீட்டு கேட்டு வருபவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுப்பார் ஆனால் இவரோ முதுக்கு கீழே இருக்கும் பகுதியில்தான் இடம் தருவாரு. அதுமட்டுமல்ல  அதைச் சகித்து நாம் அவருடன் கூட்டணி சேர்த்தால் அளவிற்கு அதிகமாக நேர்மையற்ற முறையில் சம்பாதித்தாக சொல்லி வருமானவரித் துறை நம்ம வீட்டுக் கதவைத் தட்டும் அது அவசியமா என்று யோசி


அப்ப நாம் தனித்து நிற்கலாமா?

அக்கா இப்பவே நாம் தனித்துத்தான் நிற்கிறோம்


பாவி மனுஷன் இப்படி பொடுக்கென என்னைத் தனியா தவிக்க விட்டுவிட்டு  போய்விட்டாரே இனிமே நான் எப்படிச் சம்பாதிப்பேன் இந்த நாடாளுமன்ற தேர்த்தல் முடிகிற வரைக்குமாவது உசிரோட இருந்திருக்கலாமே....

டிஸ்கி : தேதிமுகவிடம் இல்லாத வோட்டுக்காக பாஜக கோடிக் கணக்கில் பிரேமலதாவிற்குக் கொடுத்து ஏமாறப் போவது மட்டும் நிஜம் .இல்லை இப்படி வேண்டுமானால் சொல்லலாம்   ஒவ்வொரு ஊரிலும்  தேதிமுகவின் நாலு   வோட்டிற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கும் கட்சியாக பாஜக இருக்கும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.