அரசியல்தான் இதுவும் ஒரு தேர்தல் அரசியல்தான்
அயோத்தில் வருகிற ஜனவரி 22 ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. இதை உலகத்தில் உள்ள எல்லோரும் மிக எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள் என்று நம்ம ஜீ பேசி வருகிறார். இந்த கோவில் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை .இதை முழுமையாகக் கட்டி முடிக்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது . இங்கே உள்ள படத்தைப் பார்த்தாலே ,அது எந்த அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளது என்பது கண் பார்வை உள்ளவர்களுக்கோ அல்லது மூளை வளர்ச்சி அடைந்தவர்களுக்கோ தெரியும் .ஆனால் வருகிற ஜனவரி 22, 2024 அன்று 'பிரான் பிரதிஷ்டை' செய்வதுதான் நடை பெறுகிறது அவ்வளவுதான் . காரணம் அரசியல்தான் அதுவும் தேர்தல் அரசியல்தான்
தேர்தலுக்கான காலம் நெருங்காமல் இருந்திருந்தால் கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அரசு காத்திருக்கும் .ஆனால் தேர்தலுக்கான காலம் மிக நெருங்கி வருவதால் அவசர அவசரமாகத் திறக்கப்படுகிறது . பாஜக அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றி இருந்தால் அதைக் காண்பித்து வோட்டுக் கேட்கலாம். ஆனால் அப்படிக் காட்ட எதுவும் இல்லை என்பதால் இது அவர்களுக்கு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கிறது போல.
ஆமாம் இதைத் திறந்துதான் மக்களைக் கவர்ந்துதான் பாஜக அரசு மீண்டும் ஆட்சி வர வேண்டுமென்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தது பாஜக ஆட்சிதான் என்பது RSS இயக்கத்தால் முடிவு செய்யப்பட்டது அதை நிறைவேற்றத் தேர்தல் ஆணையமும் நீதித்துறையும் களத்தில் இறங்கிச் செயல்படுகிற பொழுது இந்த மாதிரி மாயா ஜாலங்களைச் செய்துதான் மக்களைக் கவர வேண்டிய அவசியம் மோடிக்கோ அல்லது பாஜகவிற்கோ கிடையாது. அப்படியானால் இந்த இந்துராஜ்யம் ,ராமர் கோவில் ,புதிய இந்தியா போன்றவைகள் எல்லாம் எதற்காக என்றால் எச்சில் நாய்களின் குரைப்பைக் குறைக்க அதற்கு வீசப்படும் எச்சில் எலும்புத் துண்டுகள்தான் மேலே சொல்லியவைகள்
AI செயற்கை நுண்ணறிவு படங்களும் எனது பார்வையும்
இந்த எச்சில் எலும்புத் துண்டுகள் கிடைக்கவில்லை என்றால் நாய்கள் வாயைத் திறந்து
ஆண்டுக்கு 2 கோடி வேலை என்னாச்சு
புல்லட் ரயில் என்னாச்சு
ஸ்மார்ட் நகரங்கள் என்ன ஆச்சு?
ரூபாயின் டாலர் மதிப்பு என்னாச்சு?
ஒவ்வொரு 2 அடுக்கு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் என்னாச்சு
வளர்ந்த இந்தியா எங்கே?
ஊழலற்ற இந்தியா எங்கே?
வறுமை ஒழிப்பு என்னாச்சு?
தனிநபர் வருமானத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?
அனைவருக்கும் வேலைவாய்ப்பு எங்கே?
அவர்களின் கணக்கில் 15 லட்சம் பணம் எங்கே?
பணவீக்கக் கட்டுப்பாடு என்னவென்று பொது மக்கள் கேட்க ஆரம்பித்தால்?
இப்படி அவர்கள் கேட்க ஆரம்பிக்கும் முன்னே இப்படி ஏதாவது ஸ்டண்டு அடித்தால்தான் மக்கள் வாயை மூட முடியும் இதைத்தான் RSS,பாஜகவும் செய்கிறது.
அதுமட்டுமல்ல தேர்தல் என்று ஒன்று நடத்துவது இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட ஒரு கண்துடைப்பு நாடகம்தான் அதனால்தான் தேர்தல் என்ற ஒன்று இன்னும் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை அவர்களுக்கு எல்லாம் இந்திய மக்களின் ஜனத்தொகைதான் முக்கியம் காரணம் அவர்களின் வணிகத்திற்கு இந்த மக்கள் தொகை (மார்க்கெட்)அவசியமே தவிர அந்த மக்களுக்கு ஜனநாயகம் இருக்கிறதா என்பதல்ல
இது போன்று மேலைநாடுகளின் நிலைகள் இருக்கும் வரை மோடி ஆட்சி தொடரத்தான் செய்யும் அதை யாரும் அசைக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்
கொசுறு : ராமர் கோவிலில் "பிரான் பிரதிஷ்டை' செய்யப்படும் ராமரை விட அதைச் செய்யும் மோடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது & கொடுக்கப்படும். காரணம் ராமரைத் துதிப்பவர்களை விட மோடியைத் துதிப்பவர்கள்தான் அதிகம்
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் 'பிரேமை'லதா விஜயகாந்த
நடத்திய கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை தோல்வியா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.