Saturday, October 1, 2022

 #பொன்னியின்செல்வன்  நாவல் படிக்காத ஒரு வாசகனின் விமர்சனம்:

 

@avargal unmaigalமுதல் குறையா பட்டது... விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மூணு பேரும் சகோதர சகோதரினு புரியறதுக்குள்ளயே இன்டர்வெல் வந்துடுது.

விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு  திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.

வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.

இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை, விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு  எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி வைக்கறாங்கனு இப்ப வரை புரியலை. இத்தனைக்கும் ஜெயம் ரவியை விட விக்ரமை விட்டு வைக்கறதுதான் டேஞ்சர்னு கேரக்டர் பாக்கறப்ப வேற தெரியுது. அதுலயும் ஜெயம் ரவியை கொல்ல அரண்மனைக்கு உள்ளே பழுவேட்டரையர், வெளியே பாண்டியர்கள் கூடவே கொஞ்சம் இலங்கையர்கள் தனித்தனியா ட்ரை பண்றாங்கன்றதும்

நமக்கு   தெளிவாகறப்ப படம் ஃபர்ஸ்ட் பார்ட் க்ளைமாக்ஸ்க்கு வந்துடுச்சு.

அடுத்து, இதுல எதுக்கு இத்தனை லவ் குறுக்கமறுக்க ஓடுதுனு வேற புரியல.அதுலயும் படகோட்ற பொண்ணு எப்பவோ லிஃப்ட் கேட்டாருன்றதுக்காக ராஜாவை லவ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவரு. அதெல்லாம் வெறும் ராஜவிசுவாசம் லெவல்லயே தாண்டிருக்கலாம்.

 பாட்டெல்லாம் கேட்க நல்லாருந்தாலும் படத்துல வரிசையா வர்றத பாக்கறப்ப அமிஅந ஞாபகம் வருது. கூடவே அந்தப் போர்களும் அப்படித்தான்.

பத்தாததுக்கு அந்த போர் சண்டைகள் எல்லாம் எந்த டெக்னாலஜி எஃபெக்ட்டும் இல்லாம தளபதி படத்தோட "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டோட என்லார்ஜ்டு வெர்ஷன் மாதிரியே  இருக்கு.

ஒரு பேட்டில கேட்டப்ப பாகுபலி மாதிரி ஃபேன்டஸியா இல்லாம, பொன்னியின் செல்வன் டவுன் ட்டூ எர்த்தா இருக்கும்னு மணிரத்னம் சொன்னாரு. அதுக்குனு குடும்பக் கதையை ராஜா ட்ரஸ் போட்டுட்டு, சுத்தத் தமிழ்ல பேசற அளவுக்கு இம்புட்டு டவுன் ட்டூ எர்த்தா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. . இதெல்லாம் இல்லாம பார்த்தா படம் கொஞ்சம் நீட்டாவே தான் இருந்துச்சு.

ஆனா இதையும் சரி பண்ணிருந்தா.. பெரியகுளத்துல இருக்கறவனுக்கு ப்ரேவ் ஹார்ட் ஈசியா புரிஞ்சாப்ல, போலந்துல இருக்கறவனுக்கு பொன்னியின் செல்வனும் புரிஞ்சிருக்கும்.

மீண்டும் நாம அடுத்த பார்ட்ல சந்திப்போம்.!


டிவிட்டரில் இந்தை எழுதி பதிவிட்டவர்
டேனியப்பாஅன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

 1. நல்ல விமர்சனம் சகோ..பாடல்களிலேயே அந்த டவுன் டு எர்த் உணர்வு புரியுது. படம் பிடிக்குமானு சந்தேகம் வலுவாகிறதே!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சீனிவாசன் சொன்னது போல படம் மோசம் என்று சொல்ல முடியாது ஆனால் மனதில் நிற்கவில்லை என்பதுதான் இந்த படத்தை பார்த்த எங்க்ள் விட்டில் உள்ள அனைவரின் கருத்தும். எதெற்கெல்லாம்வோ பணத்தை வேஸ்ட் செய்க்கிறோம் அப்படி இருக்க இந்த கதையை படமாக எடுத்து முயற்சித்து பார்ப்பவர்களை எங்கரேஜ் செய்ய இந்த படத்திற்காக நாம் பணம் செலவழிக்கலாம்.. அப்போதுதான் இது போன்ற புதிய முயற்சிகளை பலர் முன்வரலாம்

   Delete
 2. பார்க்கலாம் அடுத்த பகுதியில்...

  ReplyDelete
  Replies

  1. பாகம் 2 இதைவிட பெட்டராக இருக்கலாம் காரணம் இந்த பாகம் பற்றிய விமர்சனங்களை திரைப்படக் குழு கருத்தில் எடுத்து நிச்சயம் பதியவழியில் சிறப்பாக கொடுக்க முயற்சிக்கலாம் பார்ப்போம்

   Delete
 3. Replies
  1. அவரவர்கள் அவர்களின் வழியே சில முயற்சிகள் செய்கிறார்கள் நாம் அதை ஆதரிக்கவும் செய்யலாம் அல்லது விலகியும் இருக்கலாம்

   Delete
 4. பொன்னியின் செல்வனைப் படித்துப் படித்து மனம் தோய்ந்தவர்கள், படம் பார்க்காமல் இருப்பதுதான் நல்லது என்று எண்ணுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின சமையல் ருசியை அனுபவித்த காரணத்தால் மனைவியின் சமையலை புறக்கணிப்பது நல்லதா? எதையும் ஏதோடும் ஒப்பிடாதீர்கள் அது அதை அதன் படியே ரசித்து எஞ்சாயுங்கள்

   Delete
 5. நா ன் ஐந்து பாகமும் படிச்சு இருக்கேன். என்னிடம் 5 பாகமும் இப்போவும் ஹார்ட் காப்பி இருக்கு. கதை படிக்கும்போது ஒவ்வொருவரும் ஒரு யுனீக் இமாஜினேசன்ல ஒவ்வொரு கேரக்டரையும் நம் மனதில் உருவாக்கி நம் மன்ம்போல் ரசித்து இருப்போம். என்னதான் எடுத்தாலும் அந்த கேரக்டரை மேட்ச் பண்றது கஷ்டம். கந்தமாறன் சகோதரி மணிமேகலை னு ஒரு கேரக்டர் இருக்கும் அவள் ஒருதலையாக வந்தியத்தேவனை காதலிப்பாள். அதுபோல் கேரக்டரை எல்லாம் படத்தில் கொண்டு வருவது க்ஷ்டம். நான் கற்பனை செய்து வைத்த கேரக்ட்ரையெல்லாம் வேறொருவர் உருவாக்கி (அவர் ரசனைக்கேற்ப) வைத்துள்ளதை காசு கொடுத்துப் பார்க்க இஷ்டமில்லை.
  என் ரசனை எல்லாம் மாறிடுச்சு. உலகமே போற்றும் பாகுபலி, ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப் எல்லாம் குப்பைனு தோணுது. நான் என் உலகிலேயே வாழ்ந்துட்டுப் போறது நல்லதுனு தோணுது. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல எப்படி ஒரு மலரை அழகாக படம் வரைந்தோ படம் பிடித்தோ காண்பித்துவிடலாம் ஆனால் அதன் மென்மையையோ அல்லது வாசத்தையோ படத்தில் நாம் காணமுடியாது அது போலத்தான் இந்த திரைப்படமும் கதையில் நாம் படித்து உணர்ந்ததை திரையில் அதுவும் 3 மணினேரத்தில் பார்த்து உணர முடியாது..

   நானும் இந்த கதையை சிறுவயதில் பள்ளி பருவத்தில் படித்து இருக்கின்றேன் என்னிடமும் இப்போது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் புத்தகமாக இருக்கிறது7வருடங்கள் முன்பு மனைவிபடிப்பதற்காக வாங்கியது

   நான் அமெரிக்கா வந்ததில் இருந்து தியோட்டருக்கு சென்று தமிழ் படங்கள் பார்த்தது 5க்கும் குறைவுதான். அதில் இந்த படமும் அடங்கும் நான் சென்று பார்க்க காரணம் இந்த படத்தை எப்படி மணிரத்தினம் காட்ட முயற்சித்து இருக்கிறார் என்று பார்க்கத்தான். நான் எப்படி இருக்கும் என்று நினைத்து சென்றேனோ அப்படியே இருந்தது

   இந்த பதிவு டிவிட்டரில் ஒருவர் எழுதியது படம் பார்த்த எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் இதில் இருந்ததால் இதை இங்கே ஷேர் செய்து இருக்கின்றேன்

   Delete
 6. முயற்சி பாராட்டத்தக்கது .பொன்னியின் செல்வன் ரசித்து படித்திருக்கிறேன். நாவலை படத்தில் காட்டுவது சிரமம்.என் பார்வையில் படம் சுமார்.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.