அப்படி இல்லாமல் நீங்கள் உங்கள் வின்டர் ஜாக்கெட்டை அணிந்து வெளியே வந்தால் உங்கள் ஜாக்கெட்டின் கறி ஸ்மல் மற்றவர்களின் முகங்களைச் சுழிக்க வைப்போதோடு நம் இனத்தை அருவருப்போடு பார்க்க வைக்கும் அதுமட்டுமல்லாமல் நாற்றம் பிடித்த இந்தியர்கள் என்ற பெயர் எப்போதும் நிலைத்து இருக்கும்...
இதை நான் ஏதோ கிண்டலுக்காகச் சொல்லவில்லை உண்மையிலே சொல்லுகின்றேன். முக்கியமாக வீட்டில் அதிக மசாலாவுடன் கூடிய சமையலைச் செய்பவர்கள் நான் சொல்லிய முறையை கடைப்பிடிக்கவும்,
பொன்னியின் செல்வன் நாவல் படிக்காத ஒரு வாசகனின் விமர்சனம்:
புலம்பெயர்ந்த இந்தியர்கள் குளிர் நாடுகளில் உள்ள வீடுகளில் வசிக்கும்கும் போது ஜன்னல்களை மூடி வைத்திருப்பார்கள். புலாவ்/பிரியாணி, சாம்பார் மற்றும் பல மசாலாப் பொருட்களை வைத்து உணவு செய்தால், வீடுகள் மற்றும் தரை விரிப்புகள் இந்த வாசனையை ஒட்டிக்கொள்ளும். குளிர் நாடு என்பதால், மக்கள் தடிமனான ஜாக்கெட்டுகளை வைத்திருப்பதால், இந்த வாசனைகள் இந்த ஜாக்கெட்டுகளில் தங்கிவிடும்.
இந்தியர்கள் மட்டுமல்ல பாகிஸ்தானிகள் மற்றும் பங்களா தேசி ஆடைகளில் கரம் மசாலா வாசனை எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கும். பெரும்பாலான நம் நாட்டுமக்கள் இதற்கு மிகவும் பழகிவிட்டனர் என்பதால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை.
அமெரிக்கச் சமையலறைகளில் இந்தியச் சமையலுக்கு போதுமான காற்றோட்டம் இல்லை . இந்தியச் சமையலறையில் பணிபுரியும் மற்றும் அந்த வீட்டில் வசிக்கும் எவருக்கும் கரம் மசாலா வாசனை வலுவாக இருக்கும். இந்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை, ஆனால் இந்த வீடுகளிலிருந்து வெளிவரும் ஒவ்வொருவரும் கரம் மசாலாவின் வாசனையைத் தான் செல்லும் வழியெல்லாம் பரப்பிச் செல்லுகின்றனர் .
இந்த வாசனைகளைப் பழகிய நமக்கே பொது இடங்களில் வேறுயாராவது இப்படிப்பட்ட வாசனையுடன் கூடிய ஜாக்கெட்டுகளை அணிந்து வரும் போது நமக்கே அது நாற்றம் அடிப்பதாகத் தோன்றும்
பொதுமக்கள் பலர் வந்து செல்லும் இடத்தில் நான் வேலை பார்ப்பதால் இப்படிப்பட்டவர் வாசனை ஜாக்கெட்டுகளுடன் வருபவர்கள் அருகில் வந்த அந்த நெடி எனக்கு மட்டுமல்ல பலருக்கும் ஒரு வித அருவருப்பைத் தருகிறது. அதனால்தான் இந்த பதிவைப் போட்டு முடிந்தவரையில் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லித் தடுக்க விழைகின்றேன்
துவைக்காமல் விண்டர் ஜாக்கெட்டுகளிலிருந்து கறி வாசனையை அகற்றுவது எப்படி ?
வினிகர்: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாதி தண்ணீர் மற்றும் பாதி வினிகர் சேர்த்துக் கலக்கவும். அதைக் குலுக்கி, கரைசலுடன் உங்களின் கறிவாசனை வீசும் ஆடைகளின் மீது தெளிக்கவும். மேலும் இந்த கலவையில் சில துளிகள் essential oils ( Lavender. Bergamot. . Clary Sage. ...Peppermint. Eucalyptus. . Lemon. .. Rosemary.)சேர்த்தால், அது வினிகரின் வாசனையை அகற்ற உதவும். இல்லையெனில் உங்கள் ஆடைகளைச் சிறிது நேரம் காற்றில் காய விட வேண்டும்
லெதர் ஜாக்கெட்டில் இருந்து கறி வாசனையை எப்படி அகற்றுவது?
பேக்கிங் சோடா அதன் வாசனையை உறிஞ்சும் குணங்களுக்கு நன்கு அறியப்பட்டதாகும் மற்றும் லெதருக்கு எந்தத் தீங்கும் செய்யாது. உங்கள் லெதர் ஜாக்கெட்டை ஒரு பை அல்லது தலையணை உறையில் போட்டு வைக்கவும். அதில் பேக்கிங் பவுடரை லேசாகத் தூவியும் பாக்கெட்டுகளில் சிறிதும் தூவி அதனைக் காற்று போகாத ஒரு பெட்டியில் போட்டு 24 மணி நேரத்திற்கு அதை மூடி வைக்கவும். அதன் பின் ஜாக்கெட்டை எடுத்து உதறி பேப்பர் டவல் அல்லது ஒரு சிறிய துணி கொண்டு துடைக்கவும்
Can I put my winter jacket in the washing machine?
Down Jackets, Parkas, and Puffer Coats
As a general rule, nylon and puffy, down-filled jackets, coats, and vests can all go in the washing machine. Wash them on a gentle cycle with cold water and regular detergent. You can dry your puffer coats in the dryer, too
அல்லது இந்த இணைப்பு சென்று இங்குச் சொல்லிய முறைகளைக் கையாளவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அருமை...
ReplyDeleteபயனுள்ள குறிப்பு.
ReplyDelete