Monday, February 14, 2022


@avargal unmaigal

 காதல்  கிறுக்கல்கள்

ஆண்களுக்குப் பெண்கள் சார்பாக  ஒரு அவசர அறிவிப்பு 'கிப்ட்' இல்லாமல் சொல்லப்படும் காதல்  ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை'''


பெண்களே நாளைய தினம் காதலர் தினம் அதனால் மறக்காமல் உங்களை அழகுபடுத்திக் கொள்வதோடு மறக்காமல் உங்கள் படுக்கையையும் அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். கிப்ட்டோட
வரும் காதலனுக்கு/கணவனுக்கு உங்கள் நன்றியைக் காட்டும் இடம் அதுவாகத்தான் இருக்கும்



என் தோழி ஒருவர் அழகான சேலை உடுத்திப் போட்டோ எடுத்து அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்டாள். அதற்கு நான் என் பெட் ரூம் தரையில் உன் சேலை இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொன்னேன் ச்சீய் உன்னைத் திருத்தவே முடியாதுடா என்று சொல்லிச் சென்றுவிட்டாள். இந்த மாதிரியான தோழிகள் என்றுமே நம்மை ப்ளாக் செய்து விட்டுப் போவதே இல்லை #காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்

#காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்


ஒரு பெண்ணிடம் நீ ரொம்ப்  அழகாக இருக்கிறாய் என்று சொல்லாதே; உன்னைப் போன்ற பெண் வேறு யாரும் இல்லை என்று அவளிடம் சொல்லுங்கள், அதன் பின்   உங்களுக்கான வழிகள் எல்லாம் திறக்கப்படும். # இன்று முதல் காதலர் தின கொண்டாட்டம்  ஆரம்பம்


தோழி என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னாள். நான் பதிலுக்கு நீ மட்டும் வா என்று அழைப்பு கொடுத்தேன். அவளும் வந்தாள். வந்த அவளிடம் நான் கோபமாக  நீ மட்டும் வா என்றுதானே சொன்னேன். உடனே  அவள் நான் மட்டும்தானே வந்திருக்கிறேன் என்றாள். பதிலுக்கு நான் , நான்  சொன்னபடி மட்டும் வா. நீ உடுத்திருக்கும் சேலையோடு வராதே என்று பதில் சொன்னதும். அடேய்  இந்த வயசிலும் உன் லொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று சொல்லிச் சிரிக்கிறாள். #காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்



தோழி : என்னடா வாழ்க்கை இது ,stressful வாழ்க்கையாக இருக்கு.
நான்:  வாழ்க்கையில் stress குறைய நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன்.
தோழி : நீ எப்படா  உருப்படியான ஐடியா சொல்லி இருக்கிறே வேண்டாம் ஆளைவிடு
நான்.. இது  என் ஐடியா இல்லை.. அறிவியல் சொல்லும் செய்தி,, அறிவியல் பொய் சொல்வதில்லை.
தோழி அப்பச் சரி. சொல்லு நான் கேட்கிறேன்
நான்: அறிவியல் , உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கிறது
தோழி : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
#காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்


நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று  நான் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால், என் கண்களைப் பாருங்கள், உங்களின் உண்மையான அழகான பிரதிபலிப்பைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். #காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்

ஆண்களே காதலிக்கத் தாமதம் செய்யாதீர்கள் ஏனென்றால் நீங்கள் பெற வேண்டிய ஏராளமான முத்தங்களை வீணாக இழக்க வேண்டி இருக்கும். பெண்களே நீங்களும் காதலிக்கத் தாமதம் செய்யாதீர்கள் ஏனென்றால் நீங்கள் பெற வேண்டிய ஏராளமான கிஃப்ட்களை வீணாக இழக்க வேண்டி இருக்கும். #காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்


பண்டிகை நாட்களில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புதுத்துணிமணிகள் பட்டாசுகள் பலகாரங்கள் எல்லாவற்றிற்கும் பணம் செலவழித்துவிட்டு தனக்கு ஒரு வேட்டி வாங்கலாமா இல்லையா என்று யோசிக்கும் குடும்பத்தலைவனின் நிலை போன்றதுதான் காதலர் தினத்தன்று காதலனுக்கு ஏற்படும் நிலை #காதலர் #தின கொண்டாட்டம்  ஆரம்பம்


பணம் இருந்தும் அன்பு இல்லாத ஒருவனைக் காதலிக்கும் பெண்கள் அன்பு இருந்தும் பணம் இல்லாத ஒருவனைக் காதலிக்கத் தயங்குவது ஏன்? ஒருவேளை அன்பை விடப் பணத்திற்கு மதிப்பு அதிகமோ?  #காதலர் #தின கொண்டாட்டம்  அல்ல திண்டாட்டம்



உறவுகளில்  இவைகள் இல்லாமல் இருக்காது  சண்டைகள், பொறாமைகள், வாக்குவாதங்கள், நம்பிக்கை, கண்ணீர், கருத்து வேறுபாடுகள், ஆனால் ஒரு உண்மையான உறவு அன்புடன் போராடுகிறது அவ்வளவுதானுங்க

காதலர் தினம் என்பது ஆண்கள்  பெண்கள் தங்களது பழைய  காதலர் காதலிகளை நினைத்து இன்று கூட இருக்கும் வாழ்க்கைத் துணையோடு கொண்டாடும் நாள் அதாவது இறந்தவர்களை நினைத்துக் கொண்டாடும் நினைவஞ்சலி மாதிரி அவ்வளவுதான்



உனக்காக ஏங்கிய நாட்கள் இனிமேல் இல்லாமல் இருக்க ஏங்குகின்றேன்

பிரியும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது

பிரிந்தவர்கள் கூடும் போதுதான் உண்மையான அன்பின் ஆழத்தை உணர முடியும்




அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஒரு தோல்வியானது வெற்றி பெறுமா...?

    ம்... காதலில் மட்டும்...!

    காதலர்கள் தோற்றாலும் காதல் என்றும் தோற்பதில்லை... காரணம் தோல்வி ஏற்பட்டால் காதல் என்றும் வாழ்வதால், காதலுக்கு வெற்றியே...!

    ReplyDelete
  2. ஸ்பாஆஆஆஆஅ ஹாஹாஹா முதல் லொள்ளு...

    கடைசில கருத்து! உறவுகளில்.....கடைசி வரை உள்ள பகுதி சூப்பர். காதல் என்பது உண்மையான அன்பு!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.