Wednesday, September 5, 2018

இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்


செய்தி 1 :பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2018 ஆம் ஆண்டில் விமானம் மூலம் பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வரை, விமானத்தில் பயணம் செய்தது சுமார் ஆறு கோடி பேர். ஆனால் இன்று அந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள், விமானப் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். முன்பு நம் நாட்டில் 75 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று இந்தியா முழுவதும்100 விமான நிலையங்கள் உள்ளன.” என்று பேசிய சின்ஹா, டெல்லி, மும்பை கொல்கத்தா மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களுக்கு மக்கள் எளிதில் பயணம் செய்துவர ஏதுவாக மிக விரைவில் 5லிருந்து 10 விமானங்கள் எதிர்வரும் காலத்தில் கோரக்பூரிலிருந்து இயக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


செய்தி  2:ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வந்த தகவலை அடுத்து அந்நிறுவனத்திற்கு ரூ.2100 கோடி உத்தரவாத கடன் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் சிறப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சபேய் தெரிவித்துள்ளார்.

செய்தி 3 உதிரி பாகங்கள்பற்றாக்குறை காரணமாக விமானங்கள் இயக்கப்படாமல் ரூ.25 ஆயிரம் கோடி செயலற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய விமானிகள் சங்கத்தினர் ஏர்இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் ஏர்பஸ் 321, ஏ319 உள்ளிட்ட விமானங்களில் 23 சதவீத அளவிற்கு இயக்கப்படாமல் நிறுத்தி வவைக்கப்படுகிறது. இதனால் சுமார் 3.6பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு செயலற்ற நிலையில் உள்ளது. ஏர்பஸ் 321 ரக விமானம் 20 வரை உள்ளது.ஆனால் உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


செய்தி  4 :2014-ம் ஆண்டு ஜூன் முதல் பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமாகப் பதவியேற்ற பிறகு 84 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஹாட் லைன் வசதிகளுடன் கூடிய இந்தப் பயணத்துக்கு 1484 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது
விமானம் மூலம் பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள், விமானப் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும்100 விமான நிலையங்கள் உள்ளன.”

இதெல்லாம் உண்மை என்றால் இந்திய விமானத்துறை லாபத்தை அல்லவா ஈட்டி இருக்க வேண்டும்..   சரி இப்படி வளர்ச்சி அடைந்தது தனியார் துறை என்றே வைத்து கொள்வோம். தனியார் துறை இப்படி வளர்ச்சி அடையும் போது அரசு துறை ஏன் வளர்ச்சி அடையவில்லை அதற்கான காரணம் என்ன ?காரணகர்த்தா யார் என்ற கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா?

இதை சரி செய்ய மத்திய அரசால் முடியவில்லையா என்ன? அல்லது இதை சரி செய்யும் அறிவு கொண்டோர் ஒருத்தர் கூட ,மோடி உள்பட மத்திய அரசில் இல்லையா என்ன?

விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்க முடியாமல் ஒரு  துறையே முடங்கி கிடக்கிறது...... அதை சரி செய்ய மத்திய அரசின் கஜானாவில் பணம் இல்லையா என்ன? அப்படி பணம் இல்லை என்றால் ரூவாண்டா போன்ற நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் கொடுத்து உதவ அமெரிக்க டாலர்கள் மட்டும் எங்கிருந்து வருகிறது.... நம்ம நாட்டிற்கு எந்த விதத்திலும் உதவாத ,பயன் இல்லாத அந்த நாட்டிற்கு நாம் ஏன் இப்படி பணத்தை அள்ளிக் கொடுக்கணும்... கொஞ்சாமாவது யோசியுங்களேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இது மோடிக்கு எதிரான பதிவு அல்ல

12 comments:

  1. இன்னும் 16 நாடுகள் சுற்றி வந்து
    திரு. மோடி செஞ்சுரி அடிக்க மா'க்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. அவர் இந்தியாவில் இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு எந்தவித பலனும் இல்லை

      Delete
  2. தனியார் விமானத் துறை வளரும்போது அரசு விமானத் துறை வளர்ச்சியடையாதது ஏன்?

    1. லாபம் இல்லாத வழித்தடங்களில் தனியார் விமான போக்குவரத்து இருக்காது. அரசு விமானம் இயங்கும்.
    2. அதிக உதிரி ஊழியர்கள் - அவர்கள் சம்பளம் / சலுகைகள் ஆகியவற்றால் செலவு அதிகம்.

    நேரடியாக சொல்வது இது என்றால், மறை முகமாக...

    1. அமைச்சர் முதல் பெரும்பாலான அதிகாரிகள் நிறுவன லாபம் குறித்து கவலை படாமல், தனக்கு என்ன ஆதாயம் என்று பார்த்து அதற்க்கு ஏற்றவாறு நிர்வாகம் நடத்துவது..
    2. மிக அதிக தண்ட செலவு..

    எனக்கு தெரிந்த காரணங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லி இருப்பதும் சரியான காரணங்கள்தான் லாபம் இல்லாத இடங்களில் தனியார் விமான சேவைகள் கிடையாது....அது போல லாபம் வரும் இடங்களை அரசு விமான சேவையை சரிவரி செய்யாது..

      Delete
  3. சிறிய நக்ரங்களை விமான செர்வீஸ் மூலமிணைக்கும் போது பலனடையப்போவது பணம்படைத்தவர்களேஏ

    ReplyDelete
    Replies
    1. வசதி படைத்தவர்களுக்கு சேவை செய்யவே இன்றைய அரசும் முந்திய அரசும் இருக்கிறது

      Delete
  4. இதைப்படித்துவிட்டு கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே யோசிக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. யோசிச்சு பதில் சொல்லுங்க குத்தூசி

      Delete
  5. மதுரைத்தமிழன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது தளத்திற்கு வருகை தாருங்களேன்

    ReplyDelete
    Replies

    1. வருகை தந்து கருத்தும் சொல்லி பாலோவராகவும் சேர்ந்துவிட்டேன்

      Delete
  6. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. மதுரைத் தமிழன்.... அரசு, அதிலும் இந்திய அரசு (மத்திய மாநில) எந்தத் துறையை நடத்தினாலும் அது நஷ்டத்தில்தான் நடக்கும், அல்லது மிக மோசமான தரத்தில் (அனைத்து மக்களுக்கும் சேவை செய்யவேண்டும், என்ற வெட்டி கோஷத்துடன்) நடக்கும். அது கல்வி நிறுவனங்களானாலும் சரி, பேருந்து, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆனாலும் சரி, மின்பகிர்மானம், கட்டுமானம் போன்ற நிறுவனங்கள் ஆனாலும் சரி, அரசுத் துறை எதுவானாலும் சரி.

    இதற்கு ஒரே காரணம், அதனை நிர்வகிப்பவர்கள் கப்பம் கட்டுவதும், அதில் வேலை பார்ப்பவர்களுக்கு டார்கெட் எதுவும் கிடையாது, அரசு வேலை என்றால் பெர்மனண்ட் ரிடைர்மெண்ட் என்ற நிலை இந்தியாவில் நிலவுவதும்தான். இதில் வேலை பார்க்கும் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும் நன்றாக வேலை பார்ப்பார்கள்.

    அதுனால, 'இவர்' என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லவே முடியாது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.