Thursday, September 6, 2018

avargal unmaigal
அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை..


கடந்த வாரம் முழுவதும் இணையத்திற்கு விடுமுறை கொடுத்து இருந்தேன்...இங்கு நான் இணையம் என்று சொல்வது சமுக வலைத்தளங்கள் மற்றும் மீடியா செய்திகளுக்கு. அதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்திருந்தேன். நேற்று வந்து பார்த்த போதுதான் எங்கும் அபிராமி மற்றும் தமிழிசை பாசிச பாஜக பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன

 காதல் திருமணம் செய்து கொண்ட அபிராமி தன் எட்டு ஆண்டுகால காதல் வாழ்க்கையின் இறுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் கள்ள தொடர்பு ஏற்பட்டு அதனால் தன் இரு சிறு குழந்தைகளையும் கொன்றுவிட்டார் என்று செய்திகள் அறிந்தேன். அபிராமியை பலர் குறை கூறி எழுதி இருந்தனர். மேலும் பலர் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி கொண்டனர் என்று பகிரிந்து இருந்தார்கள்... ஆனால் எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. காரணம் இன்றைய சீரழிந்த சமுகத்தில் இப்படிப்பட்ட நிகழ்கவுகள் நடக்கவில்லை என்றால்தான் அதிர்ச்சி அடையவேண்டும்.

அபிராமி சிறு குழந்தைகளை கொன்றது மன்னிக்க முடியாத செயல்தான் ஆனால் அதற்காக அபிராமியை மட்டும் குறைகூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அந்த கொலைகளுக்கு நம் சமுகமும் மறைமுகமாக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறது..

சரி இந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை நான் சற்றி யோசித்து பார்ப்போமே?


முதலில் நம் சமுகத்திற்கு காமம் , காதல் ,கல்யாணம் என்பதற்கான முழு அர்த்தம் கூட தெரியவில்லை என்பதுதான் முதல் தவறு. ஒரு முறைதான் காதல் வரும் என்பது தமிழர் பண்பாடு என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ஆனால் அந்த ஒரு முறைதான் எப்போது என்று சரியாகத் தெரியாமல்தால் பல கள்ள தொடர்புகள் ஏற்பட்டுகின்றன வாழ்க்கை சீரழிகிறது


விட்டு விலக நினைக்கும் உறவை, இழுத்துப்பிடித்தால் பந்தம் அறுபடுவதோடு, உயிர்ப்பலிகளும் ஏற்படக்கூடும் என்பதை உணராததால் என்னவோ அபிராமியின் கணவர் விஜய்யும்,அபிராமியின் பெற்றோர்களும் இந்த பலிக்கு மறைமுகமாக காரணகர்த்தாவாகவும் இருக்கிறார்கள் என்பது மறுபக்க உண்மைகள்

சரி இந்த கொலைகளை அபிராமி ஏன் செய்து இருக்கிறார் என்று பார்ப்போம்

அபிராமி காதல் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 17 இந்தவயதில் அவருக்கு முழு மெச்சூரட்டி என்பது இருந்திருக்க வாய்ப்பு இல்லை... அந்த தருணத்தில் அவருக்கு காம உணர்வும் அதிகம் ஏற்பட்டு இருக்கவும் வாய்ப்பு இல்லை... அவருக்கு ஏற்பட்டு இருப்பது எல்லாம் இனக்கவர்ச்சி மட்டும்தான்... அந்த இனக்கவர்ச்சியால் உந்த பட்டு அதை காதலாக நினைத்து திருமணம் வரை சென்று இருக்கிறார் என்பதுதான் உண்னையாக இருக்க முடியும் அவரது கணவர் விஜய்க்கோ 25 வயது ஆண்களின் காமம் உச்ச கட்டத்தில் இருக்கும் வயது அந்த காமத்தை அவரும் காதல் என்று நினைத்து திருமணபந்தத்தில் குதித்து இருக்கிறார். இந்த வயதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மெச்சூரட்டி அதிகம் ஏற்படுவதில்லை அதனால்தான் அவர்களுக்கு கவர்ச்சி காமம் காதல் திருமணம் போன்றவைகளுக்கு முழு அர்த்தம் தெரியாமல் இருந்து கனவுலக வாழ்க்கையில் ஈடுப்பட்டதன் விளைவே இந்த குழந்தைகளின் பலிக்கு காரணம் என்பேன்..இவர்கள் இருவருக்கும் மெச்சூரட்டி இருக்கும் என்றால் தங்களின் வாழ்க்கை தரத்தை சற்று உயர்த்திய பின் தான் திருமண வாழ்க்கைக்குள் அடி யெடுத்து வைத்திருப்பார்கள் ஆனால் அப்படி இல்லை என்றதால் மிக அவரசரப்பட்டு திருமணம் செய்து வாழ்க்கையை சீரசித்து கொண்டார்கள்

17 வயதில் திருமணம் செய்து கொண்ட சின்ன சிறு பெண் குழந்தையை பெற்று எடுத்து வளர்க்கிறாள் அவளே ஒரு சிரு குழந்தை  அவளுக்கு ஒரு குழந்தையாயா? அதிலும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பெண். பிள்ளை பெற்றதும் அதனை வளர்க்க யார் துணையில்லாமலும் வளர்த்து இருக்க வேண்டும்.. பெரியவ்ர்களின் துணை இருந்தும் பிள்ளை பெற்று வளர்க்கும் முதல் சில ஆண்டுகள் பெண்களுக்கு டிப்ரஷன் ஏற்படுவது இயல்பு.. நிச்சயம் அபிராமிக்கும் டிப்ரஷன் எற்பட்டு இருக்கும்..


கல்யாணம் ஆனபுதிதில் வேலை முடிந்ததும் ஒடி ஒடி வரும் கணவன் சில காலம் கழித்து  அப்படி ஒடி வருவதை குறைத்து கொள்ள ஆரம்பிக்கிறான். இங்கும் அது நடந்து இருக்கும் வாய்ப்புக்கள் மிக அதிகம். அதுமட்டுமல்ல படித்து வாழ்க்கையில் சந்தோஷமாக சிறகடித்து பறக்க வேண்டிய நேரத்தில் கல்யாணம் குழந்தை என்று கால் கட்டு ஏற்பட்டபின் இழந்ததை நினைத்து வருந்துவது இயற்கைதான்.. தன் வயது ஒத்த தோழிகள் நன்றாக படித்து நல்ல வேளைவாய்ப்பை பெற்று வாழ்வதை பார்த்து தன்னிரக்கம் கூட ஏற்பட்டு இருக்கலாம்..

இப்படிபட்ட தருணத்தில் அதிக சப்போர்ட்டாக இருக்க வேண்டிய காதல் கணவனோ குடும்பம சற்று பெரிதாகியாதால் வேலையில் அதிகம் கவணம் செலுத்தி அதற்கு அதிக நேரம் செலவிடுவதால் காதல் மனைவியை கவனிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது... இப்படித்தான் இரு பிள்ளைகளை பெற்ற அபிராமி விஜய்க்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல நமது இளைஞர்கள் கல்யாணம் ஆனபின்பும் தங்களது வாழ்க்கையை பேச்சுலர் வாழ்க்கை போல தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறதும் ஒரு தவறுதான்.. தன்னை நம்பி வீட்டில் ஒருத்தி இருப்பாள் என்பதை கவனத்தில் கொள்ளாமல் வேலை முடிந்ததும் நண்பர்களுடன் நேரம் செலவழித்துவிட்டு இரவு லேட்டாக திரும்பவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

இது எல்லாம் பெண்களை ஒருவித டிப்ரெஷன் நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது.. இந்த நேரத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ ஆதரவாக பேசும் பொது தன்னிலை மறக்க செய்துவிடுகிறார்கள் பெண்கள் இதில் அபிராமியும் விலக்கு அல்ல... இப்படி தன்னிலை மறப்பதும் மெச்சூரட்டி இல்லாமல் இருப்பதால்தான் அபிராமி பேங்கில் வேலை செய்து  தன்னை காப்பாற்றும் கணவனைவிட கல்யாணம் ஆகி பிரியாணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவன் தன்னை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவான் என்று நிணைத்து கொண்டது


இப்படி பலர் மெச்சுரட்டி இல்லாமல் இருப்பதற்கு காரணம் குழந்தைகலை வளர்க்கும் முறை கல்வி முறை மேலும் விஜய் டீவி போன்ற சின்ன திரை ஊடகங்கள் மூலம் தவறான கருத்து மற்றும் கலாச்சார பண்பாட்டை கெடுப்பதும்தான்... அதனால் இந்த கொலைக்கு அபிராமியை மட்டும் குறை சொல்லாமல் ஒட்டு மொத்த சமுகத்தையும் குறை சொல்ல வேண்டும்

அபிராமியை மட்டும் குற்றம் சொல்லுபவர்களே! அபிராமி உங்கள் வீட்டில் மனைவியாக சகோதரியாக தோழியாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்...அதனால் இந்த அபிராமியை குற்றம்மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் உங்கள் வீடுகளில் இன்னொரு அபிராமி இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நாளையே அபிராமி விடுதலையாகி வெளிவந்தால் அவள் எந்த ஆணிடமும் உறவு கொள்ள வந்தால் அவர்கள் ச்சீய் என்று அவளை விலக்கி விடாமல் அவளுடன் கட்டி பிடித்து உருளும் ஆண்களும் இன்று திட்டிக் கொண்டிருக்கலாம் அவர்கள் இந்த அபிராமியை விட மோசமானவர்களே


அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி விட்டீர்கள். ஆனால் இதை மறுக்க இயலவில்லை காரணம் அத்தனையும் நடைமுறை உண்மைகள்.

    ReplyDelete
    Replies
    1. என் மனதில்பட்டதை எழுதிவிட்டேன் அது சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தப்பாகவும் இருக்கிறது....எதுவும் எப்பவும் எல்லோருக்கும் சரியாக இருக்கும் விஷயம் என்பது உலகத்தில் கிடையாது... காந்தியை நல்லவர் என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள் அவரை கெட்டவர் என்றும் சொல்லக் கூடியவர்களும் உள்ளனர் அது போலத்தான் அன்னை தெரசாவும்.....

      Delete
  2. ஏங்க சும்மா போட்டுக்கிட்டு?! கடுப்ப கிளப்பிக்கிட்டு!

    அடுத்து என்ன? ஒரு காது சரியா கேட்காத சிறூமியை வன்புணர்வு செய்ததும் தப்பில்லைனு எழுத வேண்டியதுதானே? காமப்பித்துக்க் காரணமே நம் சமுதாயம்தான் அப்படி இப்படினு எழுதி..

    உங்களை உயிரோட கொளுத்தினாலும் தப்பு இல்லைனு நியாயப் படுத்தலாம்! அதுவும் தெரியும்தானே?

    BTW, Abhirami will get capital punishment. If you defend her, you might run into legal trouble too!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் அபிராமியை நான் defend பண்ணவில்லை...... குழந்தைகளை அடிப்பதே தவறு என்று நினைப்பவன்.அப்படி இருக்கையில் அதை விஷம் வைத்து கொன்றதை நியாப்படுத்தவில்லை அவளுக்கு கண்டிப்பாக கடும் தண்டனைகள் தர வேண்டும் அதே நேரத்தில் இது போல மேலும் நடக்காமல் இருக்க பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும் அப்படி சிந்தித்து எழுதியதுதான் இந்த பதிவு..

      என்னை பொறுத்தவரை அந்த பெண்னை வளர்த்த விதம் சரியில்லை மேலும் விருப்பமில்லாத கணவனிடம் மீண்டும் இழுத்து வைத்து சேர்த்ததும் தவறு..பெற்றோரும் சரி கணவரும் சரி பிரச்சனையை மனோரீதியாக அந்த பெண்னிடம் அலசி அதன் பின் அந்த பெண்ணிற்கு புத்தி வந்து இருந்தால் சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும் ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது.....

      மேலும் இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டதும் ஒரு காரணம்

      Delete
  3. அபிராமிக்குரிய உணர்வுகள் குறித்த உங்கள் கருத்து சரியே. டிப்ரெசன் மன நிலை ஏற்பட்டிருக்கும் என புரிந்திட முடிகின்றது. ஆனால் நடப்பவை அனைத்துக்கும் சமுதாயத்தை காரணம் சொல்வதையும் சூழல் மேல் பழி போடுவதையும் நான் ஏற்பதில்லை. பெண்ணுக்கு திருமண வயது 18 என மேலை நாடுகள் சொன்னாலும், நம்மவர் திருமன வயதை 21 என சொல்கின்றோம். 17 இருக்கும் அதே அறிவு 18 லும் இருக்கும், அனுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் தானே சுயமாய் தன் இஷ்டப்படி முடிவெடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் 17 லும் 25 லும் ஒரே போல் தான் இருப்பார்கள். வீட்டை விட்டு சென்றவளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றது பெற்றார் செய்த தவறெனினும் அபிராமி எதையும் அறியாமல் செய்யவில்லை. இரவே நஞ்சு கொடுத்து இறந்த பெண் குழந்தையை காலையில் விடைபெற முத்தம் கொடுக்க சென்ற கணவனை தடுத்து தூக்கம் குழம்பி விடும் என சொல்லி.... கவனியுங்கள்.. இங்கே கணவனானவன் மனைவியை சந்தேகிக்கவே இல்லை. இத்தனையுக்கும் மகளுக்கு விசம் கொடுக்கும் போது மகனுக்கும், கணவனுக்கும் சேர்த்தே கொடுத்திருக்கின்றாள். எத்தகைய டிப்ரேசன் எனினும் இத்தனை கொடூரத்தின் பின்னனியில் சமூகம் காரணம் என சொல்லி தப்பிக்கவே முடியாது. பெத்த பிள்ளை செத்து போச்சிது என தெரிந்து அடுத்த பிள்ளைக்கும் மீண்டும் விசம் கொடுத்து கழுத்தை நெரித்து.... அம்மாடி.. எனக்கு அந்த குழந்தைகளின் சிரிப்பை பார்க்கும் போதே மனம் வலிக்கின்றது. அதிலும் அண்ணன் கையில் அந்த குட்டித்தங்கை இருவர் முகத்திலும் அத்தனை சிரிப்பு.. ஆயுசுக்கும் மறக்க முடியாதுப்பா. எங்கோ இருக்கும் எமக்கே வலிச்சால் பெத்தவளுக்கு...? சமுதாயம் அன்றும் இன்று என்றும் அப்படியே தான் இருக்கின்றது. அதை தாண்டி தான் எல்லோரும் வாழ்கின்றோம். இப்ப மட்டும் இவர்களை போன்றோருக்கு மட்டும் சமுதாயம் கெட்டுருச்சு போல..

    ReplyDelete
    Replies
    1. நான் சமுகத்தை மொத்தமாக குறை சொல்லவில்லை ஆனால் சமுகம் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வருகிறேன்

      Delete
  4. Replies
    1. நான் சொல்லவருவது புரியவில்லை என்றால் அது தவறான விளக்கமாகத்தான் தோன்றும்...

      Delete
  5. மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி வீட்டிர்கள்.. இந்த கோணத்தில் யாரும் சிந்தித்து எழுதவில்லை... இந்த செய்தியை கேட்டதில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா என்று நினைத்தே பார்க்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டுமல்ல மனதில் இரக்கம் உள்ள அனைவருக்கும் இது அதிர்ச்சியை தரக் கூடிய விஷயம்தான்

      Delete
  6. நிஷா, சரியான பதில் தந்துள்ளார். கொலைவெறியுடன் சற்றும் மனம் பதறாமல் , தொடர்ந்து திட்டமிட்டுக் கொலைகளைச் செய்துள்ளார். மகளை முதல் இரவே கொன்று விட்டார், பின் சற்றும் பதறாமல்- மகனை கணவன் வேலைக்குச் சென்ற பின் கொன்றுள்ளார். மருந்து வேலை செய்யவில்லையென்றது,மகன் கழுத்தைத் திருகிக் கொன்றுள்ளார். கணவனையும் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார். கொலைகள் செய்யுமுன் , கொலைகளின் பின் இவர் இட்ட காணொளிகள் , இணையத்தில் பரவிக் கிடக்கிறது. அவை எதிலும் மனவழுத்த அறிகுறி தெரியவில்லை. எல்லாவற்றிலும் இத்தனையையும் செய்து விட்டு கேரளா சென்று , நிம்மதியான வாழ்வுக்கு திட்டமிட்டாராம். இந்தக் கொலைகளைச் செய்யாது, இதுகள் மீண்டும் ஓடி , விவாவரத்து பெற்றிருக்கலாம். அதை விட்டு திட்டம் தீட்டிக் கொலை செய்துள்ளார். நம் நாட்டின் சட்டம், பாதுகாப்பில் அவருக்கு எவ்வளவு இளக்காரமான சிந்தனை - இவர்கள் மந்திரி வீட்டுப் பிள்ளைகளா ? அவர்கள் எல்லாவற்றையும் காலில் மிதிக்கலாமெனதான் வாழ்கிறார்கள். எனவே சமுதாயத்தில் எல்லாவற்ருக்கும் பழி போடாதீர்கள். முடிந்தால் விவாக ரத்துக்களை இலகுவாக்குங்கள். இந்தப் பிஞ்சுகளைக் கொன்றதுக்கு எந்த நாயத்தையும் கற்ப்பிக்க வேண்டாம். பிஞ்சுகளைக் கற்பழிப்பது, கொலை செய்வது - மகா குற்றம் - மன்னிக்கக் கூடாது - பூசி மெழுக்கும் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லியவிதம் உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் அல்லது உங்களுக்கு புரியும் வண்ணம் நான் எழுதவில்லையோ என நினைக்கிறேன்...

      நான் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக இதற்காக குறை சொல்லவில்லை ஆனால் சமுதாயமும் இதற்கு ஒரு காரணம்தான் என்று ஆணிதரமாக கூறுவேன்.. நான் இங்கு எதையும் நியாயப்படுத்தி அந்த குற்றத்தை சரி என்றும் சொல்லவில்லை..... அந்த பெண் என் உறவும் அல்ல பூசி மெழுகி அவள் குற்றமற்றவள் என்று சொல்ல...

      மீண்டும் சொல்லுகிறேன் அவள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் அதோடு அவளுக்கு இது போன்ற ப்ரெய்ன் வாஸ்ஜ் செய்த அந்த பிரியாணி கடைக்காரனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்... தவ்று செய்பவன் எப்படி தண்டிக்கப்பட வேண்டுமோ அது போல அதற்கு தூண்டிவிட்டவனை அதற்கும் மேலாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை

      Delete
  7. நீங்க சரியா எழுதியிருக்கீங்க மதுரைத் தமிழன். அவள் குற்றம் செய்தாள். ஆனால் அதற்கான காரணிகளை எழுதியிருக்கீங்க. நான் உண்மையா பாராட்டறேன். எல்லோரும் அவங்களோட பார்ட்னரோட (ஆணோ பெண்ணோ) டிப்ரஷனை மனசுல கொள்வதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வடிகால்கள் இருக்கு. அதாவது பிடிக்கலைனா அவங்க பிரிய நிறைய சான்ஸ் இருக்கு. அதுனால பொதுவா அவங்க ரெண்டுபேருமே ரெண்டுபேரோட பிரிஃபெரன்சுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க, வேலையைப் பகிர்ந்துப்பாங்க. சும்மா வேலை பார்க்கிறேன், வெளியே சுத்தறேன்னு இக்னோர் செய்ய இயலாதுன்னு நினைக்கிறேன்.

    பொதுவா நமக்கு இந்த சம்பவத்துல ஏன் அளவுக்கு அதிகமா கோபம் வருது என்றால், கள்ளமில்லா அந்தப் பிள்ளைகளைக் கொல்லும் அளவு அவள் சென்றுவிட்டாளே என்ற ஆழ்மனக் கோபம்தான். இப்படிக்கூட முட்டாளாக ஒருவர் இருக்கமுடியுமா? சட் என்ற கோபத்தில் ஒருவன் தவறு செய்யலாம். அது துரதிருஷ்டம். ஆனால் இங்கு, தப்பித்த மகனை மறுநாள் கொடுமையாகக் கொன்றிருக்கிறாள். இதுதான் பலரின் வெறுப்புக்குக் காரணம். அவள் வீட்டை விட்டு ஓடியிருந்தால் அது எத்தனையோ சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று போயிருக்கும். யாருக்கும் வெறுப்பு வந்திருக்காது.

    ReplyDelete
  8. இந்த சம்பவத்துக்கு பல உளவியல் நிபுணர்கள் உளறிக்கொட்டியதையும் பார்த்தேன்.

    நீங்கள் அழகாக புரியும்படிதான் எழுதி இருக்கீர்கள்,மிக ஆழமான நேர்மையான பார்வை.

    உங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் பார்வையில் பிழை அல்லது குருட்டுத்தனம் இருப்பதாய் உணர்கிறேன்.

    ReplyDelete
  9. திருமன சான்றிதழ் கட்டாயமாக்கப்படவேண்டும்.
    சான்றிதழ் வழங்கும் அதிகாரி தம்பதிகள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் தகுதியான்வர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும்.
    சான்றிதழ் இல்லாத திருமனம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.