Friday, September 7, 2018

நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் பிறகு என்றைக்கும் நம்மால் குரல் கொடுக்க முடியாது


சோபியாவின் செய்கை தொடர்பாக ஒரு பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.  சோபியா சொன்னது தவறா, இல்லையா என்று பார்த்தால் தவறு என்றும் சொல்லாம் இல்லை என்றும் சொல்லாம்.

சோபியா பாசிச பாஜக ஒழிக என்று சொன்னதில் எந்த வித தவறும் இல்லை.... அதை பொது வெளியில் சத்தமாக சொல்லி இருந்தாலும் தவறு இல்லை... ஆனால் ஒரு தலைவர் அதுவும் பெண்மணி தனியாக இருக்கும் போது இப்படி சத்தம் போட்டு சொல்வது சரி இல்லைதான்...காரணம் பொதுவாழ்வில் இருக்கும் தலைவர்களுக்கு இப்படி சத்தம் போடுபவர்கள் யார் என்று கூட தெரியாததால் அந்த பயணம் முழுவதும் ஒரு பதட்டத்துடந்தான் இருப்பார்கள் அது போலத்தான் தமிழிசைக்கும் இருந்திருக்கும் என்பது என் யூகம்.....


சரி அந்த சிறு பெண்தான் தவறு செய்து இருந்தாலும் தலைவாரக இருக்கும் தமிழிசை தனக்குள் ஒரு விதம் பதட்டதுடன் கூடிய பயம் இருந்திருந்தாலும் அதை பெருந்தன்மையோடு மன்னித்து மறந்து இருக்க வேண்டும்..அதைவிட்டு விட்டு முட்டாள் தனமாக விமான நிலையத்தில் சண்டை போட்டு அந்த பெண்ணை கைது செய்து சிறைக்காவலில் வைத்திருக்கும் அளவிற்கு கொண்டு போனது மகா தவறு..வடிகட்டின முட்டாள் தனம்...

மக்களின் உள் மனதில் பாசிச பாஜக என்று அடக்கி வைத்திருந்த உணர்ச்சி இந்த சம்பவத்தால் எரிமலையாக வெடித்து நாடெங்கும் பாசிச பாஜக என்று பரவி நாறடித்து கொண்டிருக்கிறது...

இன்னும் நேரம் கடந்துவிடவில்லை பாஜகவின் தேசிய தலைவர்கள் உடனடியாக தலையிட்டு சோபியாவை விடுதலை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் தன் தலையிலேயே கொள்ளிக்கட்டையை வைத்து தலை சீவுவது போலத்தான் இது முடியும்....


 இன்று சோபியாவின் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து அவரை நிரந்தரமாக விடுதலை செய்தி அவர் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற நியாயமான விஷயங்களுக்குக் குரல் கொடுக்காவிட்டால், கோஷம் போடாவிட்டால் நாம் என்றைக்குமே, வேறு எதற்காகவும் கோஷம் போட முடியாது!

தமிழா இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: வாழ்க்கை மிகவும் பிஸியாக போய்க் கொண்டிருப்பதால் முன்பு போல உடனடியாக பதிவுகள் இட முடியவில்லை...

5 comments:

  1. Sofia knew before she was committing a mistake ( her FB posts before the incident). Now she needs to own up and pay for her mistake. If you let this slip more and more folks will commit the same. I am not a sympathizer of BJP but Tamilisai did correctly and lodged the protest with the police. If this has happened to some other they would have taken the law themselves. If this happened in any other country like USA she would hav3 been in jail. Freedom also has limits then only democracy will be successful.
    raj

    ReplyDelete
  2. நல்ல பதிவு. இரு பக்க நியாயங்களையும் சீர்தூக்கிப் பார்த்திருப்பது சிறப்பு. இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் எழுச்சி குறிப்பிடத்தக்களவு இல்லை. மக்கள் தங்கள் உண்மை நிலையை உணர்ந்து பொதுவெளியில் போராட முன்வர வேண்டும்.

    உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...

    சிகரம் : Avargal Unmaigal | நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்?

    ReplyDelete
  3. கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் செய்தியே வெளி வந்திருக்காது

    ReplyDelete
  4. அந்தப் பெண் செய்தது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது. ஆனால் தமிழிசை அதை பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. பொதுவாக சமூக வலைத்ளங்களில் அதிக கேலிக்கு ஆளானவர் தமிழிசையாகத்தான் இருக்கும். இதயெல்லாம் அவர் சிரித்துக் கொண்டே கடந்து போய்விடுவார். அவர் என்னதான் வெளியே சொல்லாமல் இருந்தாலும் மனதுக்குள் கோபம் எப்போதாவது வெளிப்படும். அந்த நிகழ்வாக இது அமைந்தது சோபியாவின் துரதிர்ஷ்டமே. சோபியாவை விடுவித்து தமிழிசை கொஞ்சம் நல்ல பேர் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கவே விரும்புகிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.